திருமணம் - இத படிங்க மொதல்ல - என் எதிரி என் கண் இமை - ரீல் கவிதை

திருமணம் - இத படிங்க மொதல்ல

காதல் என்பது பஸ்ல போற மாதிரி,
ஆனால் கல்யாணம் என்பது பிலைட்ல(Flightla) போற மாதிரி.
பிடிக்கலேன்னா பஸ்ல இருந்து இறங்கிக்கலாம், ஆனால்! பிலைட்ல(Flightla) இருந்து?

யோசிங்க...!!!!!!!!!!!!!!

என் எதிரி என் கண் இமை

என்னக்கு யாரும் எதிரிகள் இல்லை
உன்னை பார்க்கும் போதும் மறைக்கும்
என் கண் இமையை தவிர!!!...

ரீல் கவிதை

மரம் வாடினால் தண்ணீர் விடுவேன்,
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்,
நீ வாடினால் என் உயிரை விடுவேன் ,
நீ சந்தோஷ பட அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்....!!!

பிரிவு

"உன்னை விட்டு பிரியும் போதெல்லாம் நான் தனியாக பேசி கொள்கிறேன் என் நிழலுடன் அல்ல உன் நினைவுகளுடன் " எப்போது நீ வருவாய் என்று

உணர்தல்

போகப் போக அவளை அறிந்து கொண்டேன்
பாவி என்று எனை நொந்து கொண்டேன்
அவளுக்கும் மனம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்
கெட்டவள் அல்ல எனப் புரிந்து கொண்டேன் – இம்
மாற்றத்தில் நான் எனை இழந்து கொண்டேன்
இதனால் நான் காதல் கொண்டேன்.

உன் நித்திரை

உன் நித்திரையைக் களவெடுத்து – என்
கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன்
உன் இதயம் என்னிடத்தில்
நிம்மதியாக உறங்கட்டும் என்று.

துக்கம்

‘துக்கம்’ என்னும் வார்த்தை – உன்னை
மீண்டும் கண்டபோது
ஞாபகம் வந்தது!

உன் மடியில்…

உன் அருகே நானிருந்து
தங்கக் கை பிடித்து
என் நெஞ்சில் உனைச் சாய்த்து
செவ் வானம் பார்த்தவாறு
ஒரு கணமேனும் – நான்
உறங்க வேண்டும்
இப் பிறவிப் பலனடைய

நட்பு

கடற்கரையில் "நட்பு "என்று எழுதி இருந்தேன் ,
அலை வந்து அடித்து சென்றது அழகான "கவிதை "என்று

பெண்கள்

பெண்களும் ஒரு இசை தான் .
பழகி பாருங்கள் ,
சங்கு
சத்தம் கேட்கும் .

பெண்ணின் சிரிப்பு

பெண்ணே நீ சிரித்த பின்புதான் தெரிந்து கொண்டேன் ,
நிலவுக்கும் சிரிக்க தெரியும் என்று .

சுமை

இறைவா...
உன்மேல் பாரத்தைப் போட்டு
தொடங்கிய என் காதல்
இப்போ
எனக்கே பாரமாய் போய் விட்டதே!

சங்கமம்

கடலில் நதி
உடலில் உயிர்
நடையில் குணம்
தடையில் முயற்சி
விடையில் தெளிவு
படையில் வீரம்
உடையில் அழகு
கொடையில் மகிழ்ச்சி
மடலில் எழுத்துப் போல் – தமிழில்
நீ சங்கமம்!

இதயம்

அவள் என்னை

பிரிந்த விட்டால்

என்பது எனக்கு தெரியும்

பவம் என் இதயத்துக்கு தெரியாது

அது உனக்காக இன்னும்

துடித்து கொண்டு இருக்கிறது .

கோலம்

அவள் விரல் பட்ட பரவசத்தில்
வாசலிலேயே படுத்துக் கிடக்கிறது கோலம்

புரட்சிக் காதலன்

மணந்தால் நீ
இல்லையேல் மரணம் – என்று
கூறமாட்டேன் – அது
இயலாதவன் கூற்று

மணந்தால் நீ
இல்லையேல் மனதில் நீ – என்று
கூறமாட்டேன் – அது
நம்பிக்கை இல்லாதவன் கூற்று

மணந்தால் நீ
இல்லையேல் மற்றொருத்தி – என்று
கூறமாட்டேன் – அது
மோசடிக்காரன் கூற்று

பெண் உள்ளம்

அர்த்தம் மறைத்து கவிதை எழுதத் தெரிந்த எனக்கு
அவள் இதயம் புகுந்து நினைப்பைக் கவர முடியவில்லையே…

உனக்காக ........

உன் மூச்சில்
உன் உணர்வில்
உன் உயிரில்
உன் அன்பில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
யாரும் இல்லாத போது நான் இருப்பேன் உனக்காக ........

பயணம்

வந்தால்தான் நிச்சயம்
வராவிட்டால் மரணம்
மீனவன் பயணம்

ஒழிந்து கொண்டால்

நீ
ஓடிப் போய் இருளில் ஒழிந்து கொண்டால்
நான்
காற்றைப்போல் பறந்து வந்து
மின்னலாய் உனைத் திருடி
புயலாய்ச் சென்றுவிடுவேன்

Post a Comment (0)
Previous Post Next Post