உன் நினைவோடு… நானிங்கு
கானல் நீராகா வாழ்க்கையில் சேர்வோம் ஒன்றாகும் நேரம் கனவிலும் வாழ்வோம் கரம் பற்றி நான் அணைப்பேன் காத லினால் நீ நனைப்பாய்
உறவுகள்
அறைந்து சாத்திய கதவின் அதிர்விலும் அறுந்து தொங்கியது உறவின் இழை
ஜனநாயக அடிமைகள்
எவனையோ தெரிவு செய்ய எம்மையே தொலைத்த கூட்டமொன்று, மூலை முடுக்கெல்லாம் கொடிகட்ட ஓடியலைகிறது நிர்வாணமாய்
ஒரே பேச்சு - நம் காதல் உயிர் போச்சு
காற்றின் காலேறி -
நம் காதல் ஊர் சுற்ற தெருவெல்லாம் ஒரே பேச்சு -
நம் காதல் உயிர் போச்சு
நானும்… மரங்களும்
சோதனை கொன்று சாதனை பிறக்கையில் - நானும் மானுடம் இழந்து மரமாவேன் போதனை செய்தே பொய்மையில் உழலும் - உங்கள் பேதமை மாலையில் சரமாகேன்
மண்ணில் தெரியுது சொர்க்கம்
சொர்க்கம் என்பது எங்கே உள்ளது
சொலவா முடியாது
நற்கரு ணையுடன் மானுடம் நடந்தால்
நமைவிட மேல் ஏது
மண்ணில் தெரியுது சொர்க்கம் காண
மானுடரே வாங்க
கண்ணில் தெரியும் காட்சியை விட்டுக்
கதைகள் ஏன் போங்க
பகைவனை மோதிச் சுட்டுவி டாமல்
பாசம் பொழியுங்க
புகைச்சல் மறந்து புறப்பட்டு வாங்க
போரை அழியுங்க
எல்லா மனிதரும் ஏவாள் பிள்ளை
என்றால் ஏன் சண்டை
வல்லான் இல்லான் என்றில்லாமல்
வசிப்போம் ஊராண்டை
காலையிற் பகைவனைத் தியானம் செய்க
காதலில் ஆழ்ந்திடுக
மாலையில் அவனே மயங்கிச் சிரிப்பான்
மனம்போல் வாழ்ந்திடுக
உர்ரென மூஞ்சியை வைக்க தீங்க
உடனே சிரியுங்க
விர்என வெளியே வாங்க அங்கே
விண்ணைப் பிடியுங்க
சண்டை களுக்குள் நேரம் தொலையுது
சவத்தைத் தள்ளுங்க
அண்டை களுக்குள் அன்பைத் தெளிங்க
அனுபவம் கொள்ளுங்க
மனிதர்எல் லோரும் மனுவின் பிள்ளை
மறுபடி ஏன் சண்டை
பனிமனி தர்முதல் புனிதர்க ளோடு
பழகுக வீட்டாண்டை
புத்தன் ஏசு போதித் தார்கள்
போற்றுக நற்றொண்டை
நித்தம் நித்தம் முழக்குக முழக்கி
நெகிழுக நம் தொண்டை
நாம் எல்லோரும் நபியின் பிள்ளை
நமக்குள் ஏன் சண்டை
பூமியிற் போர்கள் முடிந்தன முடிந்தன
போனது நாள் பண்டை
மானுட சக்தியின் மகத்துவம் கேட்க
மக்காள் வாருங்க
தேனிடம் இனிமை கேளுங்க கொட்டும்
தேளிடம் ஏனுங்க
அலுவல கத்தில் பாஸ்மேல் கொஞ்சம்
அன்பைத் தெளியுங்க
கலகலப் பாகப் பேசுங்க சிரிப்பில்
காதலைப் பிழியுங்க
குழந்தைகள் டீவியைக் காதலித் தால்அக்
குற்றம் உமதுங்க
வழிந்தே பாசம் பொழிந்தால் அந்த
வகையும் உமதுங்க
கவனம் கண்ணை மூடுங்க உள்ளக்
கதவைத் திறவுங்க
நவநவமான உலகம் உமக்கே
நட்பாய்ப் பரவுங்க
மனைவியின் முகத்தை பிடியுங்க அவளை
மனம் போல் சுத்துங்க
கனிவாள் உமையே கவனிப் பாள் எனில்
கவலைகள் வெத்துங்க
அழவைப்பேன்
அழவைப்பேன்
உன்னை
அன்பே
என்னை கிள்ளி…
யோசி !
இதயம் சொல்வதை செய் வெற்றியோ? தோல்வியோ?
அதை தாங்கும் வலிமை அதற்குதான் உள்ளது.
திருவள்ளுவர் பெருமை
பொய்யா மொழித் தந்த
தெய்வப்புலவரின்
பொன்னடிப்போற்றி
வணங்கி வாழ்த்துகிறேன்
சூரியனே உன் புகழ்ப்பாட
திக்குச்சி நான் முயன்றேனே
சமுத்திரமே உன் புகழ்ப்பாட
சிறுத்துளி நான்
கவிதை வடித்தேனே..
தமிழினத்தின் ஆதி குருவே
மானிடம் தலைத்திட
தன்னையே உரமாக்கிய
பெருநாவலரே
ஆயிறத்து முன்னூற்று முப்பது
குறற்பாவில்
பிரபஞ்சம் முழுவதும் அளந்தவறே
ஒற்றை வரியில்
தத்துவமும்
ஏழுச் சொல்லில்
ரகசியமும்
மனித இனத்துக்குத் தந்தவறே
சிறுத்துளிக்குள் ஒரு கடலாய்
ஒவ்வொரு வரியிலும்
அர்த்தங்கள் , கருத்துக்கள் , ஞானங்கள்
ஆழ்ந்த தத்துவங்கள் சொன்னவறே
ஆண்டி முதல் அரசன் வரை
போகி முதல் யோகி வரை
அனைவருக்கும் ஒருப் பாடம் சொல்லி
அன்பும் , பன்பும் , ஒற்றுமையும்
மனித குளத்தின் வேர்கள் - என்று
வாழ்ந்து செளித்திட மனித இனம்
பாடி பகன்ற பாவலரே
காற்று வீசும் திசைகளெல்லாம்
தமிழன் பெருமை மனம் வீச
மண்ணில்த் தோன்றிய
ஞான விருற்சகமே !
தமிழினம் முற்றிலும் அழிந்தாலும்
அழியாத பெருமை பெற்றவரே
உலகம் சுற்றும் நாள் வரையில்
காற்றும் உன் புகழ்ப்பாடும்
வாழ்க தமிழ்
வழர்க தமிழ் மக்கள்
ஓங்குக திருவள்ளுவர் பெருமை
வாழ்க்கைப் பயணம்
நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவில்லை
இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை
என்ன கொடுமை சார் இது
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
ஒன்னும் தெரியாமலயே
பயணிக்கிறேன் ........
கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை
தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது......
எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......
என் கவிதை என்னிடமே இருக்கட்டும்
எழுதியவன் சொல்லவந்ததை
படிப்பவன் -
தவறாகப் புரிந்துகொண்டால் கூட
கவிதை கற்பிழந்து விடுகிறது...
என் கவிதை
என்னிடமே இருக்கட்டும்...
உணர்வதற்கு மட்டும்...
என் எண்ணங்கள்
பேனா மை வழியே
உதிர மறுத்த போதுதான்
உணர்ந்தேன் ,
அவை எழுதுவதற்கு அல்ல என்று ...
ஆதிக் கவிதை...
அன்னை
என்னை
அள்ளி
முத்தமிட்ட
தருணம்....
கவிதை...
தனிமையில் வெகு நேரம் யோசித்து
எதுவும் தோன்றாமல்
எழுது கோலை கவிழ்த்து, எழுந்த போது ,
தோன்றியது
கவிதை...
ஒருதலை காதல்
பெண்ணே !
காதலுக்கு கண்கள் இல்லை
ஆனால் தன் கண்மணியை பார்த்தால் மட்டும்
அது மௌனமாய் தூது பேசும்....
காதலுக்கு காலநேரம் இல்லை
ஆனால் தன் உடையவளுக்காக நாள் கணக்கில்
நின்ற இடத்திலேயே சுகம் காணும்....
காதலுக்கு தூக்கம் இல்லை
ஆனால் தன் தேவதையுடன் கனவு காண
கற்பனைகளை தட்டி தாலாட்டு பாடும்....
காதலுக்கு பேதம் இல்லை
ஆனால் தன் இனியவள் பேசிய வார்த்தைகளை
கோர்த்து கவிதைகளாய் வடிக்க தோணும்....
காதலுக்கு திசைகள் இல்லை
ஆனால் தன் இளவரசி இருக்கும் இடத்தில்
குடிசை போட்டு வாழ தூண்டும்....
காதல் ஒன்றும் கடவுள் இல்லை
ஆனால் தன் காதலியின் மனதில் தான் இருப்பது தெரிந்தால்
உயிர் இல்லாமல் வாழும் தேகம் !!.....
கண்கள் இரண்டால்...! (சுப்ரமணியபுரம் song)
இமைகள் மூடாது நினைவில் நீங்காது
கனவுகள் உன்னோடு விடியுமா?
இதழ்கள் பேசாத மொழியின் ஒசைகள்
சலனம் கொன்டு இங்கு சிரிக்குமா? -அவள்
நிழல் கண்டு தனிமையும் நகைக்குதே - விழிநீரிலும்
அவள் முகம் தெரிக்குதே!
உதிரத்திலே உரையும் உந்தன் நினைவுகள்!
கட்டி இழுக்கும் என்னை கட்டி இழுக்கும்
இந்த கண்கள் இரண்டும்
பேசும் பாஷை...
இதில் எதோ உள்ளது!
ஒரு காதல் சொல்லுது!
அந்த பெண்மையிலே எந்தன் மனம்
சிக்கி கொண்டது!
கல்லறை கவிதை
அன்று நான் கொடுத்த ரோஜா பூக்களை அவள் வாங்க மறுத்தால்!
ஆனால் இன்றோ அவளே மலர் மாலை இடுகிறாள் என் கல்லறைக்கு ..!
காதல் சொந்தம் நட்பு
இருந்தால் வருவேன் என்றது காதல்
பணம் இருந்தல் வருவேன் என்றது சொந்தம்
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன்
என்றது நட்பு
ஒற்றை ரோஜா
தரை தொடாத
விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
அவள் கூந்தலில்
ஒற்றைரோஜா
கனா கண்டேன்!
இரவின் இருளில்
இமைகளில் ஒளிர்ந்த
உன் நிழலின் பிம்பம்....
நிஜத்தில் என்னை தீண்டுவதாய்
நினைக்கிறேனடி..!
உன் ஒரப் பார்வையில் - என்
உயிரோட்டத்தை நிறுத்தியவளே!
ஒளித்து வைத்த இரகசியங்களை
அம்பலபடுத்த செய்கிறாயடி!
உன் அழகின் ஆணவம்
என் ஆண்மைக்கு சவால் விடுகிறது!
பூவிதழின் மென்மையான புன்னகை
புவியின் சுழலை நிறுத்துகிறது!
தென்றலினும் மெல்லியதான் உன் சுவரிசம் - என்
சுவாசத்தை மூர்சையடைய செய்கிறது!
"செல்"லரித்த பேச்சுகள் -
நீ பேசும் பொழுது மட்டும்
சிலிர்த்தே கேட்கிறேன்!
மழைத்துளிச் சாரல்
என் மீது படர்வதாய் உணர....
சாத்தானின் சத்தம் - காதோரத்தில்
"சனியனே! இன்னும் என்ன தூக்கம்..??"
தந்தையின் அறைகூவல்...விடியலை உணர்கிறேன்!
கனா கண்டேனடி தோழி!