பிறந்தேன் மறுபடியும் - அமர்ந்து விட்டு வந்தேன் - சொல்லிக் கொடுத்தான்

பிறந்தேன் மறுபடியும்

உனது அந்தரங்கத்தின்
அனுமதியற்ற
எல்லையை
ஒரு நாள் தற்செயலாக
நான்
மீறிவிட்ட
கோபத்தில்
ஏறக்குறைய
நாற்பது நாள்கள்
என்னோடு நீ
பேசாமல்
இருந்தாய்
ஓர் அதிகாலையில்
முதலாவதாக எழுப்பி
எனக்கு நீ
பிறந்தநாள் வாழ்த்துச்
சொல்லிய போதுதான்
பிறந்தேன் மறுபடியும்
புதிதாய்
நான்

அமர்ந்து விட்டு வந்தேன்

உனது சிறிய பிரிவிற்கான
வலியைச்
சமாதானப்படுத்திக்
கொள்வதற்காகப்
பெரிய
பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள்
நிறைந்த
அந்த
விமான நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு
வந்தேன்

சொல்லிக் கொடுத்தான்

ஆய்வை முடிக்கிறவரை
காதலனை
வரவேண்டாம் என்று
கட்டளையிட்டாய்
வந்துகொண்டே
இருக்க வேண்டும்
என்று என்னிடம்
கெஞ்சினாய்
உன்னைக்
காதலிப்பவனும்தான்
எவ்வளவு
உயர்ந்தவன்
உணர்ந்து கொண்ட மௌனத்திற்கென்றே
ஒரு
புன்னகை
இருக்கத்தான்
செய்கிறது
என்பதை அவன்தானே எனக்குச்
சொல்லிக் கொடுத்தான்

நட்பு நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது

எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது

என் தோளில் சாய்ந்தபடி

ஒரு நள்ளிரவில்
கதவு தட்டும் ஒலிகேட்டு
வந்து திறந்தேன்
காதலனோடு
கைபிடித்தபடி
சோர்ந்த முகத்தோடு
நின்றாய்
போய் வருகிறேன்
அடுத்த வாரம் சந்திக்கலாம்
என்று புறப்பட்ட
காதலனுக்குக் கையசைத்தாய்
என் தோளில்
சாய்ந்தபடி

நட்பிற்கு இல்லை

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை

என் கவிதை

உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல
வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என்
கவிதை

நட்பில் இருக்கிறது

அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
நட்பில்
இருக்கிறது

இசை கேட்க ஆரம்பித்தேன்

உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்

பள்ளி மைதானம்

பள்ளி மைதானம்
காலை
வணக்கம்
காற்று கலைத்ததைக்
கண்களால்
மூடினேன்

நம் நட்பின் முதல் நாள்

இதயம் சேகரித்துக்
கொண்டிருந்த
வானத்தில்
நீ
பறக்கத் துடிக்கையில் அசைந்த
புற்களின்
நடுவேதான்
அமர்ந்திருந்தது
நம் நட்பின்
முதல்
நாள்

நிழல்

நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது

அறிவுமதி கவிதை

பிழைக்கும் வழி
மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!
பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!
அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!
ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!

குதித்துக் கரையேறுகிறோம்!

இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!
நாங்கள்
குதித்துக்
கரையேறுகிறோம்!

வாடகை மூச்சில் வாழாது

இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று

வீரத்தை குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது

நட்பின் வெளிப்பாடு

அமைதியான இரவு..
அலைகளின் தாளம்..
படகு மறைவில் காதல் ஜோடிகள்..
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் தோளில் அவள் தலை சாய்ந்து
விசும்பி கொண்டு இருக்கிறாள்..
சமூகம் அவர்களை கேலி செய்தது
கள்ளக்காதல் என்று..
எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணீர்
ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!

நட்பு கவிதை

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

அம்மா

என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .

என் முதல்
தோழியும் கூட . . .

என் செல்ல
குறும்புகளை
செல்லமாய்
திட்டியபடி
ரசிப்பவள் . . .

இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .

அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .

அப்பா

மலர் என்று சொல்லுவதை விட
‘பூ’ என்று சொல்லும்பொழுது அதன் அருகாமை அதிகமாகிறதா?
அது போலத்தான் தந்தை என்ற சொல்லை விட
அப்பா என்ற சொல்லில் பாசம் அதிகம்.

கரைகளுக்கப்பால்

இதே கடலின் அடுத்த கரையினில் அலைகளைத் தாண்டியும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அகதியின் அலறல்கள்

Post a Comment (0)
Previous Post Next Post