குருதி ப‌டிம‌ங்க‌ள் - பூமிப்பிளவு - அந்த‌ நீல‌ ந‌திக்க‌ரை ஓர‌ம்

குருதி ப‌டிம‌ங்க‌ள்

கைக‌ள் எங்கும் க‌றைக‌ள்
அது என்ன‌வென்று கூட‌ என்னால் யூகிக்க‌ முடிய‌வில்லை
என் சுவாச‌ ப‌குதி முழுவ‌தும் ப‌டிந்து ப‌டிந்து
ப‌டிம‌ங்க‌ள் ஆகி போன‌ குருதியோட்ட‌ம் !!
பூமிதாயின் குலுங்க‌லால் சிதில‌ம‌டைந்த‌
நாட்க‌ளில் குப்பைக‌ளை போல‌
வ‌ண்டிக‌ளில் ஏறிய‌ பிண‌க்குவிய‌ல்க‌ள்!!
அன்றோ க‌ட‌ல்தாயின் சீற்ற‌த்தால் சுழ‌ன்று வ‌ந்து
சுருட்டி கொண்டு போன‌ உயிர்க‌ள் எங்கோ?
இதுவெல்லாம் போதாதென்று இன‌ம்
ம‌த‌ம் மென‌ த‌லை பிய்த்து த‌சை பிரிக்கும் சில‌ர்!!
என்ன‌தான் ந‌ட‌க்கும் என‌ சில‌ர்!!
எதுவும் புரியாம‌ல் சில‌ர்!!
என்னை போன்ற‌ குருதி ப‌டிம‌ங்க‌ளிடையே சில‌ர்!!
ஈழ‌ த‌மிழ‌னாய்.........

பூமிப்பிளவு

கண்ணிமைக்கும் நேரத்தில் பிளந்தது
பூமி, பூங்காவை வெறித்து பார்த்த என்னையும்
என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமியையும்
பார்க்காமல்,

பிளந்த பூமியின் அடித்தளம் எப்படியிருக்கும்
என்ற சிறுமியின் கேள்விக்கு என்ன விடை
சொல்வதென்றே தெரியாமல் பயணப்பட்டிருந்தேன்
பூமியின் பிளவுக்குள்,

பன்னெடுங்காலமாய் கூட்டல் கழித்தலில் தேர்ந்த
ஆசிரியர் ஒருவரும், நிலத்தை நம்பியே வேலை
கொடுத்தும் கெடுத்தும் வந்த பெரிய நிலத்தரகர்
ஒருவரும் எங்களுக்கு பக்கத்தில் வந்து கொண்டிருந்தனர்,

பூமிக்கடியில் ஆழ்துளை கிணறு ஒன்று வைத்தால் நல்ல
லாபமென்று அவரும், பூமியின் கடைசி நிறுத்தத்திற்கு செல்ல
இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று ஆசிரியரும்
கணக்கு போட்ட படியே வந்தனர்,

சிறுமிக்கு விடை என்ன சொல்வது என்று விழித்துக்
கொண்டே இருள் படர்ந்த பூமிப் பிளவில் சென்று
கொண்டிருந்தேன் நான், அட ஏதாவது ஓர் இடத்தில் நிற்க
வேண்டுமே என்ற ஐயம் வேறு என்னை சூழ்ந்தது,

சட்டென்று சிறுமி கேட்டாள் பூமிக்கடியில் எனக்கு வைத்து
விளையாட ஒரு நாய்குட்டியும், ஒரு குரங்கு பொம்மையும்,
ஒரே ஒரு தட்டும் வேண்டும் என்று கண்களில் நீர்
பனிக்க கூறினாள்,

வாங்கிக் கொடுக்கிறேன் என்று திரும்புகையில் ஒருவரையும்
காணவில்லை, பூமியின் பிளவும் இல்லை, மின்விசிறி சத்தமும்
இருளும் என் போர்வையும் கூட இருந்தன,

என் மனதில் இருள் சூழ்ந்தது, சிறுமிக்கு என்னவாகியிருக்கும்
நிலத்தரகர் கிணறு வெட்டியிருப்பாரா? ஆசிரியரின் விடையில்
சிறுமிக்கு விடை சொல்லியிருப்பேனே, பொம்மைகள் இருக்குமா?
மீண்டும் அதே பூங்காவை நோக்கி பயணித்தேன்
விட்டு வந்த வேலைகள் பார்க்க!!!


--
அன்புடன் நண்பன்

அந்த‌ நீல‌ ந‌திக்க‌ரை ஓர‌ம்

முன் இர‌வின் முழு ஒளியில்
ப‌னி பொழியும் ந‌திக்க‌ரையில்
நின்றிருந்தேன் வெகு நேர‌ம்

வின்னைத் தாண்டி வ‌ரும் வ‌ழியில்
காவ‌ல் வைத்திருந்தேன் என் விழியை
அதில் செய்தியில்லை, என்னுள் செய‌லுமில்லை
இனி செதில்க‌ளுக்கும் உயிர் சொந்த‌மில்லை

யார் அடித்தும் வ‌லித்த‌தில்லை உன்
க‌ண் அடியில் காத‌ல் விதைக்கும் முன்னே
நீ உழுது பின் நான் விளைந்த‌ அந்த‌
ம‌னி ம‌னியான‌ ம‌ணிப்பொழுதில் நான்
ம‌ல‌ர்ந்து விட்டேன், ஏன் இல்லை நீ
என் அருகினில்!

க‌ட‌வுளின் வாச‌ம், நான் க‌ண்டு கொண்ட‌
அந்த‌ ச‌ந்திப்பொழுதின் தோள் சாய்த‌தில்,
உன் சாய‌ல் க‌ண்ட‌ க‌ட‌வுளிட‌ம், நான்
சாந்தி கொண்டேன் உன் ச‌ம‌ய‌த்திட‌ம்!

ந‌திக்க‌ரையெல்லாம் நீல‌ம் ப‌டிந்து
என் நீண்ட‌ பிரிவை க‌ல‌ந்து வைக்கும்
நீ வ‌ருகையிலே அதில் கால் ந‌னைத்து
என் உயிரின் மிச்ச‌த்தையும் க‌ரைத்துவிடு.

வாஞ்சி

எத்துனை எழுத்துக‌ள்,
பின் வார்த்தைக‌ள்,

கோர்தெழுத்ப்ப‌ட்ட‌ எதுகைக‌ள‌,
எழில்மிகு உவ‌மைக‌ள்,

ம‌ன‌ம்கொண்ட‌ ப‌டிம‌ங்க‌ள்,
ஆசையின் அலாய்ப்புக‌ள்,

இப்ப‌டியெல்லாம் எழுத‌ப்ப‌ட்ட‌
என் க‌விதைக‌ள்
விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்காக‌வே
உன் கை சேர்கின்ற‌ன‌!

ஏனோ உன் வாஞ்சையால்
அவைக‌ள் விருச்ச‌ங்களாகின்ற‌ன‌.

இம்சை

ஆயிர‌ம் முறை சொன்னாலும்
அறிவே இல்லை உன‌க்கு என்று
முத்த‌மிடுகையிலெல்லாம்
யுத்த‌மிடுகின்றாய் என்னோடு

ச‌ளைக்காம‌ல் எச்சிலை அழித்து
ச‌த்த‌மில்லாம‌ல் இப்போதாவ‌திடு என்று
உன் க‌ன்ன‌ம் காட்டுகின்றாய்

இம்சையே!
ச‌த்த‌திற்காக‌ யுத்த‌மிடுகிறாயா?
முத்த‌திற்காக‌ ச‌த்த‌மிடுகிறாயா?

தபால் பெட்டியுள்

வ‌ச‌ப்ப‌டாத எழுத்துக்க‌ளுக்கிடையில்
வாசித்த‌ வார்த்தைக‌ள் ந‌ம‌க்கான‌
இடைவெளியை அனைத்துக்கொண்ட‌து

என‌க்கு நான் எழுதி அனுப்புவ‌தும்
உன‌க்காக‌ நீ எழுதிக் கொண்ட‌தும்
எழுத்துக‌ளை தாண்டி மெய்யும் உயிரும்
இனைந்த‌ த‌ருண‌ங்க‌ளில் வாழ்ந்த‌
வாழ்கையின் நினைவ‌லைக‌ள்
இன்ன‌முன் தபால் பெட்டியுள்!

நான் எழுதிய‌ மெய்யும்
நீ எழுதிய‌ உயிரும்
ஏதோ ஒரு அஞ்ச‌ல் நிலைய‌த்தில்
ச‌ந்தித்து, என்னையும் உன்னையும்
ந‌ல‌ம் விசாரித்த‌ நிக‌ழ்வை நான்
ப‌டித்த‌ உன் க‌டித‌ம் சொல்லிய‌து.

அன்பே தெரியுமா உன‌க்கு!
உன் க‌டித‌ம் என் க‌டித‌த்தின்மேல்
ச‌ந்தித்த‌ நொடியில்
காத‌ல் வ‌ச‌ப்ப‌ட்ட‌தாம்,

உன‌க்க‌னுப்பிய‌ க‌டித‌த்தின்்
ந‌க‌ல் கேட்டு காத்துக்கிட‌க்கின்ற‌து
இங்கு!

என் பொக்கிஷ‌க்குவிய‌லுக்கு
செல்ல‌ ம‌றுத்து!

குடை

நாம் சண்டையிட்டு
பிரிந்த அந்த
கடற்கறை சந்திப்பின்
அடையாளச்சின்னம்

இன்னமும்
அங்கேயே வானம்பார்த்து
வரமொன்று கேட்டு
தவம் செய்கின்றது.

மனசை நகங்களில்
வைத்திருக்கும் தேவதையே
உன் கைசேர!

என்னைபோலவே!!

காதலின்றி வேறில்லை

பட்டாம்பூச்சியின்
வண்ணச்சிறகில்
கைகள் கோர்த்து
அமர்ந்திருக்கிறோம்
நாம்.
வானமெங்கும் சுற்றித்திரிந்த
பட்டாம்பூச்சி
பூவொன்றின் இதழ்களில்
உன்னை இறக்கிவிடுகிறது.
பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!

ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது
எனக்கான காதல்புன்னகை!

உன்னை பார்த்த நாள் முதல்

* உன்னை பார்த்த நாள் முதல்,
தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
கவிதை எழுதுகிறேன்!

* உன்னை ரசித்த நாள் முதல்,
உன் உருவம் மனங்கண்டு
தனியே பேசுகிறேன்!

* உன்னில் மயங்கிய நாள் முதல்,
விளங்காத ஓர் உணர்வுக்கு
விளக்கம் தேடுகிறேன்!

* உன்னை காதலித்த நாள் முதல்,
ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
சுமை தெரியாமல்!

உன் மௌனம்

உன் மௌனம்
என் மரணத்தின்
நிகழ்கால
ஒப்பாரி...

காதலிக்கக் கற்று கொள் !

இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !

உன் மௌனத்தில் அடக்கி விடுகிறாய்

வார்த்தைகளில்
அடக்க முடியாத
என் வாழ்க்கையினை
உன் மௌனத்தில்
அடக்கி விடுகிறாய் ......

நீ என் கனவில் வந்தாய்

நீ என்
கனவில் வந்தாய்
விடியம்
எழும்பிப் பார்த்தேன்
என் கட்டில்
நிரம்ப
கவிதை
நிரம்பிக்
கிடந்தது

வாழத் தொடங்கினேன்

இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போதுதான்
என் பிறப்பு
முற்றுப் பெற்று
வாழத்
தொடங்கினேன்...

கனவு

கனவே கலையாதே...
கடைசி சந்திப்பு நிகழட்டும்
விடிந்தால் காதலிக்கு திருமணம்!

புத்தகம்

காற்றும்
என்னைப் போலத்தான்
படிக்காமல் புரட்டுகிறது,
புத்தகம்!

பாதச்சுவடு

புள்ளிகள்
இல்லாத கோலம்
அவள்
"பாதச்சுவடு"

கடிகாரம்

கண்ணாடி கூட்டிற்குள்
ஒரு காதல்
ஜோடி!
"கடிகாரம்"

பயம்

ஆறுபடை முருகன் கோயிலுக்கு
ஏழு பூட்டு......
"யாமிருக்க பயமேன்"

மயில்

சித்திரை வெயில்
நடனமாடும் மயில்
கூந்தல் உலர்த்தும் அவள்!

Post a Comment (0)
Previous Post Next Post