எக்ஸாம் ஹால் - மௌனமே சுகமானது - Ninaivugal

எக்ஸாம் ஹால்

அருகில் இருந்தும் பேச முடியவில்லை. .

உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை. .

என்ன கொடுமை இது.? . .

ஒரு மாணவன் – . எக்ஸாம் ஹால்’இல் இருந்து.

மௌனமே சுகமானது

அன்பே! உன் வார்த்தைகளை விட,
உன் மௌனமே சுகமானது.

Ninaivugal

துடிக்கும் இதயம்
நின்று போகலாம்.,
ஆனால்-
நின்ற இதயம் கூட
மீண்டும் துடிக்கும்,
உன்
"அழகான நினைவுகள்"
என் அருகில் இருந்தால்.....

anbin aazham

அன்பின் ஆழம்
எவ்வளவு என்பது
பிரிவின் போதுதான்
உணர முடியும்
அதை உணருகிறேன்
உன்னை சந்திக்காமல்
இருக்கும் இந்த நிமிடங்களில்

vaazhkkai

வாழ்க்கை என்பது ஓவியம் அல்ல
மாற்றி மாற்றி வரைய,
வாழ்க்கை என்பது சிற்பம்
செதுக்கினால் செதுக்கியது தான்.....

nimmadhi

என்னை யாரும் தொலைக்கவில்லை...
இன்றுவரை தேடிக்கொண்டு இருக்கின்றனர்...
***நிம்மதி***

அன்று தந்ததும் அதே முத்தம்

சமவெளியில்
தொலைத்த முத்தத்தை
உன் இதழ்மடுவில்
தேடுகின்றேன்

கிடைக்கும் என்ற
நம்பிக்கை விட
தேடல் மட்டும்
நீடிக்கவே ஏங்குகிறது
மனசு!

பின் எப்படித்தான்
பழகுவதாம் குடை
மறைவினில் முத்தமிட்டு!

ர‌ம்மிய‌மே!

* இற‌கு தொலைத்த‌
ப‌ற‌வை போல‌
உன்னை தேடுகின்றேன்
வ‌ன‌மெல்லாம்

எங்காவ‌து உன் வாச‌த்தின்
சாய‌லில் நான் விழ்ந்து கிட‌க்கின்றேனா? என்று.

* இலையின் அதிர்வில்
உதிர்ந்த‌ பூவின்
விசும்ப‌ல்

எனை விட்டு
நீ வீடு செல்லும்
அனைத்து பிரிவினிலும்.

* வெயில் தூர‌ளில்
குடை விரித்தாய்
கைப்பிடியில்
நான்

த‌விக்கும்
என் நினைவுக‌ளில்
உடைகின்ற‌து ஒரு
சிறு குமிழி.

* இத‌ழ் க‌ட‌ந்து
ம‌ழை ருசித்த‌
நாவிற்கு

வான‌ம்
குடை பிடித்த‌து
வான‌வில்.

காத‌லும் காத‌லும்

* நீ விழுந்து
நான் அழுது
என‌க்கு ம‌ருந்திட்டு
உன‌க்கு குண‌மான‌து
காதலால்!

* மேக‌மெல்லாம் ம‌ழைத்துளி
நீ ந‌னைந்து விளையாட‌
நான் சேமித்த‌ க‌ண்ணீர் துளிக‌ள்.

* பாவ‌ம் அந்த‌ ப‌ட்டாம்பூச்சி
கொஞ்ச‌ம் ந‌க‌ர்ந்து செல்
தேன் குடிக்க‌ சுற்றி சுற்றி
வ‌ருகிற‌து உன்னையே!

திருமேனி தரிசனம்

திருமேனி தரிசனம்
தினம்தறித்த கண்கள்
உன் தொழைதலில்
துவண்டு கிடக்கின்றது
என் முகம்தனில்…

விழியில் பிறந்து
கன்னம் கடந்து
இதழினை கடந்த
உப்புக்கரைசலோடு
எனை கடந்து போனாயோ?

பாதி தூக்கதில்
என்னை கண்விழிக்கச்செய்யும்
கனவாகப் போனாயோ?

என் கவிதைப்
புத்தகங்களின் ஓரங்களை
தின்றுப் போன கரப்பானின்
வாயிடுக்கினில் மாட்டிக்கொண்டாயோ?

பறிக்க மறந்த
பூவின் மகரந்ததில்
புதைந்திருக்கின்றாயோ?

ஊஞ்சல் காற்றாய்
என் குழல் சுருள்களில்
உன்னை சூடிக்கொண்டாயோ?

எதுவாக
இருக்கின்றாய் நீ,
நான் மட்டும்
வாழும் இவ்வுலகில்.

இன்றே கடைசி

நீ மிச்சம்
விட்டு சென்ற
அந்த ரோஜாவுடன்
ஒற்றையாக நான்
அதே நதிக்கரையில்
இன்றும் காத்துக்கிடக்கின்றேன்.

போர்முனையில்
புதைந்துப் போனதாக
ஊர் பேசுகின்றது.
உண்மைதானா?
நீ என்னுள் வாழ்வதாக
சொன்னது,சிருங்காரா?

உன் இதழ் பதித்து
பூவின் இதழில் இட்ட
முத்தத்தின் வாசம்
கரையெல்லம், நீ என்றே
பரவிக்கிடக்கின்றது.

மீண்டும் வருவதாய் இருந்தால்
இன்றே வந்துவிடு.

மனிக்கட்டு நரம்புகள்
அறுபட்டு, நதிக்கரையெல்லாம்
குருதியின் வாசம்.

நான் சுவாசிப்பது
இன்றே கடைசி.

சுவாசத்தின் வாசம்

மொழிமறந்து எழுதிய
கவிதையிது!
உன்
கண்மொழியினிலே
கரையொதிங்கிய பின்
நான்!

நீலங்கள் கறைந்தொழுகி
வானம் விட்டு
உன் நிழல் சேர்ந்ததால்
நிலவு திசை மாறி
போனதோ.!

சற்றே திரும்பிப் பார்!
கொஞ்சம் இழைபாரட்டும்
என் சுவாசக்கூடு!

ஆயிரம் யானைகள்கொண்டு
இந்திரலோகம்
கொண்டுச்செல்வேன்!
ஒரு நிபந்தனை மட்டும்.

கொஞ்சம் உன் சுவாசத்தை
கொடு, நுகர்ந்துபார்கவேண்டும்.
சுவாசத்தின் வாசம் என்னவென்று!

நான் பார்த்தது தவறில்லை

நான் பார்த்தது தவறில்லை, பார்வை மாறியது தான் தவறோ!
எனக்கு நீயின்றி வேறில்லை, நீ தான் வேறோ……!
உன் சம்மதமின்றி காதல் இல்லை, உன் சம்மதம் தான் கானல் நீரோ!

மூக்கு கண்ணாடி

மூக்கு கண்ணாடி அணிந்தால்
பலருக்கு
அழகு கூடுமாம் !
ஆனால்
மூக்கு கண்ணாடியின் அழகு கூடியது
அதனை என்னவன் அணிந்ததினால்!!

காதல் வலி

சிறுக சிறுக கொல்வதைவிட ஒரேயடியாக கொன்று விடு அன்பே...
என்னால் வலி தாங்க இயலாது....
உன்னை பிரிவதை என்னால் நினைத்து பார்கவே முடியாது...
உன்னால் முடியாது என்றால்....
கண்கள் மட்டும் காட்டி விடு...
அந்த சிரமத்தையும் உனக்கு தர விரும்ப வில்லை....

மௌனம்

நீ பேசும் வார்த்தை எல்லொருக்கும் புரியும்! ஆனால் நீ பேசாத மௌனம் உன்னை நேசிபவருக்கு மட்டுமே புரியும்!.....

உனக்குள்...

புரிந்து கொள்...

உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...

வெறுத்து விலகியபடி ஏன்...

உறவா பகையா நீ....

நெருங்க மறுக்கிறாய்...

குளிர்ந்த நிலவும் நீயாய்...

சுடும் சூரியனும் நீயாய்...

நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...

நொருங்கி போகிறேன்...

சில சமயங்களில்...

தீவிரவாதம்

விதைத்தது யாரோ...
வேரறுக்க முடியவில்லை
தீவிரவாதம்!

சிசுக் கொலை

பாலைச் சுரந்து
சிசுக் கொலை
கள்ளிச் செடி...

மேகம்

தின்ன முடியவில்லை
உயரத்தில் பஞ்சுமிட்டாய்
வான் மேகம்!

Post a Comment (0)
Previous Post Next Post