பணம் - நெருக்கடி - பார்வை

பணம்

பெட்டியில்
பூட்டி பூட்டி வைத்ததில்
காகிதமும் பணமும்
ஒரே ஜாதியெனப் புரிந்தது!

நெருக்கடி

மக்கள் தொகை பெருக்கம்,
சாலையில் தெரிகிறது
தள்ளாடியபடியே பேருந்து!

பார்வை

கண்கள் செய்த
தவம்
விழிகள் பெற்ற வரம்!

சிறை

பறவை கூண்டில்
புள்ளிமான் வலையில்
மழலை பள்ளியில்!

கண்கள்

சந்தோசமாய்....
சிறைப்பட்டன வண்டுகள்....!
அவள் கருவிழி!

அலங்காரம்

கழுத்து நிறைய நகைகள்
அழகான பட்டு புடவை
அணிந்தும் வெளியில் செல்ல
முடியவில்லை
ஜவுளிக்கடை பொம்மை.

கண்ணீர் துளி

உன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும்!, நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட!....

பசி

ஊரில் சாவு
இன்று நிறையும்
வெட்டியான்வயிறு

நிலா

ஏழைகளுக்கான
இலவச மின்சாரம்
நிலாவெளிச்சம்

நாற்காலி

பறவைகள் இளைப்பாற
தெருவெங்கும் மின்கம்பிகள்
நாற்காலியாய்...

மனசு

மீன் சாப்பிடக்கூடாது என்றிருந்தேன்
இப்போது சாப்பிடுகிறேன்
மீனவன் சாப்பிடுவதற்காக

கனவு

கனவே கலையாதே...
கடைசி சந்திப்பு நிகழட்டும்
விடிந்தால் காதலிக்கு திருமணம்!

சந்தோஷம்

வான் பார்ப்பதாய் நினைத்து
நிலவை ரசித்தபடி
குளத்தங்கரை மரத்து வெளவால்

மயக்கம்!

குடிகாரன்
மது மயக்கத்தில்!
அவன் குடும்பம்
பசி மயக்கத்தில்!

விதவை



இதழ் இழந்த
மலராய் - மலர்
இழந்த மங்கை நான்.....

துக்கத்தை உணர்த்துவது
கறுப்பெனில் - வாழ்க்கையை
தொலைத்ததன் அடையாளம்
வெள்ளையா.....

தேடினேன் விடியலை
இருளில் - ஏற்ற விரும்பிய
விளக்கை அணைத்து அணைக்கவே
ஆர்வம் கொண்டனர் அனைவரும்.....

வேண்டாத ஆறுதலை,
ஆதரவை தருவதாய் - வெந்த
புண்ணில் வேல் பாய்ச்சினர்
வீட்டினர் கூட.....

மேகம்போல் வந்து
மேகமாய் மறைந்த மணாளன்
மின்னலாய் வந்து உயிர்
எடுத்தவன் எமன்.....
வானவில்லின் ஆயுளைப்போல்
வாழ்க்கையின் வசந்தங்கள்
மழை நின்ற வானமாய்
என் வாழ்க்கை.....

Life

ஒரு உயிர் துடிக்கும் பொழுது ,
யாரும் கவனிக்காமல் இருப்பார்கள் .
ஆனால் நின்ற பின் எல்லாரும் துடிப்பார்கள் .
That Is Life.

காதல் தோல்வி

அவள் என் கண்களுக்குள் வந்து கொண்டுதான் இருக்கிறாள் …
கனவுகளாக அல்ல .! கண்ணீராக ..!

கண்ணீர் மழை

கண்ணீர் துளிகளை மழையாக தூது அனுப்பியுள்ளேன்
என் அன்பை நீ உணர!
என்னவனே உன் இதயத்தை கரைக்கவே அனுப்பியுள்ளேன்
கண்ணீர் மழை தூதாக!
கண்ணீர் துளிகளே! அதிகமாக கரைய விடாதீர்கள்
என்னவன் இதயம் கல்லல்ல....
எள்ளினும் மெலியதானது அவன் உள்ளம்!

மகன்

புதிய வீடு
கட்டினான்..!
திண்னையை பெரிதாக
வைத்தான்
பெற்றோருக்கு..!

நன்றி

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

Post a Comment (0)
Previous Post Next Post