கல்லறையைத் தேடி | Kallarai Thedi
Vaalkai Sokam |
முகம் பார்க்காமல் சந்தித்தோம்
இதயம் பார்த்துதான் இணைந்தோம்
பல முறை கூறினாய்
என் காதல் என்னோடு என்று!
உன்னோடு நான் இல்லை
அனாதையாய் நான் நிற்க
இனியும் சொல்லாதே
என் காதல் என்னோடு என்று!
நிஜத்தோடு வாழமுடியாமல்
நிதம் நீ தவித்தாலும்
நிழலோடு வாழ்வதாய்
பல முறை சொல்வாய்!
நிஜம் எனும் மரம்
வெட்டப்பட்ட பிறகு
நிழலை நீ எங்கே தேடுவது
அழிந்து விட்ட நானும்
அதை எப்படி கொடுப்பது?
காதலை அளித்து
நிம்மதியை அழித்து விட்டாய்!
நிமிட பிரிவுகளை
நிரந்தர பிரிவுகளாக
நிறுத்தி விட்டாய்
நீ இருந்த என் இதயத்தில்!
சிறகுகள் ஒடித்து
சிறை பிடிக்கவில்லை
உன்னை என் இதயத்தில்!
சிறகுகள் விரித்து நீ பறக்க
சிந்துகிறேன் கண்ணீரை!
காதலில் நீ இல்லை - ஆதலால்
கானல் நீரில் தாகம் தணிக்கிறேன்.
தாகமும் தணிந்த பாடில்லை
நித்திரையும் வந்த பாடில்லை - உன்
நினைவுகளும் தொலைந்த பாடில்லை
நிதமும் ஏமாற்றம் அடைகிறேன்!
இன்றாவது நிம்மதி கிடைக்குமா?
ஆடை கழற்றிய இரவுகள்
அரை நிர்வாணமாக
விடிந்து போன பொழுதுகளும்
விடியாத இருளாய் தோன்ற
விழிகளும் வருந்துகிறது
நீ இல்லாத காதலில்!
கல்லறையைத் தேடி!