என் அவனுக்காக - முகம் தெரிந்தும்....

 முகம் தெரிந்தும்
முகவரி தெரியாத
என் அவனுக்காக!
நான் மட்டும் காத்திருக்கிறேன்
அந்த பேருந்து நிலையத்தில்...
ஓரிரு நொடிகள்
உன்  விழி நோக்கும் 
என் விழி பார்வைக்காக அப்போது
என் இதயம் மொழி பெயர்க்கும்
மௌனத்தின் மொழிகளை
ஊமை என்று நினைத்துவிட்டாயா
உன்னை போலவே
ஒளிரும் நிலவிடம்மும்
மறைந்து மலரும்
நட்சத்திரமிடமும்
ஆயிரமாயிரம் கதைகள்  சொல்லும்
உனக்காகவே
தேசமெங்கும் சுற்றி 
தெருவெங்கும் போர்முரசு கொட்டி
வீட்டுக்கு வந்ததும்
வீறிட்டு அழமுடியாமல்
சுரங்கள் அற்ற
வீணையாகி விடுகிறேன்
அதனால்தான்
உன் காதலை
என் கண்ணீரில் வடிக்கிறேன்
கவிதையாக!

Post a Comment (0)
Previous Post Next Post