பெருங்கதவடைத்த காதலொன்றின் விதிவிலக்காய்
நீர் கிழித்து செல்கிறது
அவளின் ஒற்றை பார்வையில் ஓராயிரம் கதை சொல்கிறது அவளின் வகிடு வழி நிற்க்கும் நெற்றிப்பொட்டு முகத்துக்கு முகம் எதிர்நோக்குகையில் இதழ் விரித்தும் அரும்பாத குறுநகையில் முறிந்த காதலின் நந்தவன நாட்கள் நடனமாடுகிறது