காதலர் தின கவிதை - பிப்ரவரி - 14

காதலர் தின கவிதை - பிப்ரவரி - 14
காதலர் தினம்
காதலர் தின கவிதை

ஆரம்பம் முடிவு விழியில் தெரியா  
ஆராய்ச்சியிலும் பிடிபடா 
காலாவதி பெயரளவிலும் இல்லா 
காலம் கடந்தும் வாழ்ந்தும் வாழ்ந்திட்ட
வாழ்ந்து கொண்டிருக்கும் காதலே!

மெதுவாய் சுகமாய் நீ என் இதயம் தொட 
என் கரமோ காதல் கவிதை தொட 
நழுவி விட்ட கவி வார்த்தைகள் 
எட்டிப் பிடித்து கரம் கொடுத்தாய்! - காதல்
கரமும் பிடித்தேன்! கவிதையும் பிடித்தேன்!

உதிக்கும் சூரியனும் மலரும் நிலவும் 
புரியாத வார்த்தைகள் தினம் சொல்லும் - காதலே
என் விழி நோக்கி விளக்கவுரை சொல்வாய்
கண்டதும் புரியும்,  காதல் புரியாது - இருந்தும்
காதலிக்க தகுதி உன்னால் பெற்றேன் !

எத்திசை தேடினும் நிலவாய் காதலி முகம்
நேர் எதிரே எதிரொலி எதிரொளியாய்
காதலே ! எல்லாமே உன் மாய ஜாலம்!
காதல் என்றால் சும்மாவா ? உலகமே குலுங்கும்!
வான் புவி எத்திசை நோக்கினும் காதலே!

வாழ்க காதல் ! வளர்க காதலர்கள்!

காதலர் தினத்துக்கான இன்னும் ஓர் கவிதை படிக்க லிங்கை கிளிக் செய்யவும்...





Post a Comment (0)
Previous Post Next Post