எனது பார்வை - வாழ்த்து - சுட்ட கவிதையா??

எனது பார்வை

உன் விழியில் எனது பார்வை என்று நினைத்தேன்

ஆனால் நீ உன் கண்களை மூடி என் கனவுகளை சிதைத்துவிட்டாய்

வாழ்த்து

உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல
வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று உனக்கான
என் கவிதை

சுட்ட கவிதையா??

சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்

சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?

கவிதை

கவிதை வேண்டுமென
பேனா தூக்கினேன்
கைகள் தானாக உன்
பெயரைக்கிருக்கியது.

என்னைத் தந்தேன்… ஏமாந்து நின்றேன்!

அன்று-

வேட்பாளராய் என் மனமெனும்
ஓட்டு கேட்டு வந்தாய்
வாக்காளனாய்,
நானும் என்னையே தந்தேன்!

இன்று-

லஞ்சம் எனும் செல்வந்தனோடு நீ
வாக்களித்த ஏமாளிகளில்
ஒருவனாக நான்!

ஜனநாயகமும் காதலும் ஒரு வழிப்பாதை…
‘வாங்குவது’ மட்டும்தான் இங்கு வாடிக்கை !

இன்பம்

முத்துக்குளிப்பு போன்றது
காதல் கிடைத்ததும்
இன்பம்

காதல்

உன்னை பிரிவதென்றால்
உனக்கு முன் இறப்பேன்.

மத்தளம்

அடித்தபோதும் ஒலி
தருவது
மத்தளம்

கைபேசி

அலுவலகத்தை
வீட்டின் சமையலறை வரையும்
வீட்டை
அலுவலகத்தின் இருக்கை வரையும்
நீட்டிக்கிறது
கைபேசி....

அம்மா

அம்மா!...
அன்று நம் தொப்புள் கொடியை
அறுத்தது நம் உறவை பிரிக்க
அல்ல........
அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு
வெட்டப்பட்ட ரிப்பன்...........

ஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் !

அன்று காலை
ஒரு இராமன் வந்தான்
வில்லை ஒடிக்காமலேயே
விலகிச் சென்றான்,
விசாரித்த போது
விபரம் தெரிந்தது,
சீதையின் தோழி மிக அழகாம்...

நட்பு

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?

முத்தம்

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

காலடியில் வானம்

உன் காலடி பூமியாக
நான் வரவா
வானம் கேட்பதைக்
கேட்காமல்
விளையாடும் குழந்தை

சுவையான ஒன்று

தேநீர் அருந்திய பெரியவர்
சுவையாக ஒன்றை
சொல்லிவிட்டுப் போனார்

முதுமைய நட்பாக்கிட்டா
வயசு எதிரியா தெரியாது

சிறார்கள்

விடியலும் பகலும் இணையும் நேரம் !
சிலிர்க்க வைக்கும் சாரல் மழையோடு
பொழுது புலர்ந்தது!
புல்லின் மீது படர்ந்திருந்த மழை துளி
கதிரவன் கண்ணில் பட்டதும்
காணாமல் போனது !
கதிரவனும் கனமழையும் இணைந்து
தங்களது பணிகளை
செவ்வனே செய்து கொண்டிருந்தனர் !
மக்கள் ஆளுகொருபுறம் தங்களை
ஓதிக்கிக்கொள்ள ஓடிக்கொண்டிருந்தனர் !
இத்தகு வேலையிலும்
தன் எடையை விட அதிக எடை உடைய
புத்தக பைகளை சுமந்து கொண்டு
பள்ளியை நோக்கி நடை போட்டு கொண்டிருந்தனர்
நம் நகர சிறார்கள்!

பேச்சு

ஊருக்கு வந்த மகன்

இரவு தாண்டிப்
போகிறது பேச்சு

தான் தொலைந்த
நகரத்தைப் பற்றிச்
சொல்கிறான் மகன்

அவன் தொலைத்த
கிராமத்தைப் பற்றிச்
சொல்கிறாள் அம்மா

சுகம்

பேருந்தில் பயணிக்கும் போது
ஜன்னலோர இருக்கை சுகம் !
இருண்ட கரு மேகங்கள் பிளந்து
மழையை கொட்டும் போது
அலுவலகத்தின் ஜன்னலோரம் சுகம் !
என்னவளின் அன்பை சுவாசிக்கும் போது
வீட்டின் ஜன்னலோரம் சுகம் !

பாசம்

நீ எனை பார்த்த பார்வையில்
உன் ஏக்கம் தெரிந்தது !
அணைத்த இறுக்கத்தில்
உன் தவிப்பு தெரிந்தது!
நீ அழுத அழுகையில்
உன் பாசம் தெரிந்தது !
ஆனால் மகனே !
என் ஏக்கத்தை , தவிப்பை , பாசத்தை
நான் எப்படி உணர்த்துவது !!

இருள் சதுரங்கள்

வந்துவிட்டது மின்சாரம்
இருளில்
எத்தனை சதுரங்கள்
வரைந்தேன் என்று
தெரியவில்லை

Post a Comment (0)
Previous Post Next Post