ஒரு புயலின் மவுனம் - விடை தேடினேன் - என் கவிதைகள் என்னுடனே இருக்கட்டும்

ஒரு புயலின் மவுனம்


மழையின் மவுனம் - அவள்
விழியின் மவுனம்

வானவில்லின் மவுனம் - அவள்
புன்னகையின் மவுனம்

காற்றின் மவுனம் - அவள்
சலனத்தின் மவுனம்

மின்னலின் மவுனம் - அவள்
சீண்டலின் மவுனம்

மவுனம் - அவள்
ஒரு புயலின் மவுனம்

விடை தேடினேன்

உன் கனா காணும் கண்களால்
நான் வினா தாள் கண்ட
மாணவன் போலானேன்..
உன் பார்வை வினாவில்
தொலைந்து விடை தேடினேன்...

என் கவிதைகள் என்னுடனே இருக்கட்டும்

என் கவிதைகள் என்னுடனே
இருக்கட்டும் - அவை
வெளிப்பட்டால் பல மனங்கள்
புன்ணாகும் - சில உறவுகள்
பாழாகும்.,

ஆதலால் குமறும்
எரிமலையாய் கவிதைகள்
என்னுள் இருக்கட்டும்.

மன விளிம்பை தாண்டி
என் பேனா நுனியால்
கசிந்தாலும் அவை கறை
படிந்த தாள்களோடு நிக்கட்டும்..
அதை தாண்டி உன்
விழிகளில் எட்ட வேண்டாம்
என் கவிதைகள் என்னுடனே
இருக்கட்டும்..............

எல்லாம் சில காலம் தான்

காதலியும், கண்ணீரும், கனவுகளும் -
எல்லாம் சில காலம் தான்
புரட்சியும், முற்போக்கு சிந்தனையும், சவால்களும்-
எல்லாம் சில காலம் தான்
உறவினர்கள், நண்பர்கள், பிணைப்புகள்-
எல்லாம் சில காலம் தான்
பகை, நட்பு, நன்றி -
எல்லாம் சில காலம் தான்
வாக்குறிதிகள், அழிவில்லா நினைவுகள் -
எல்லாம் சில காலம் தான்
நிரந்தரமானதும், வாழ்வில் சிக்காமல் இருப்பதும் -
எல்லாம் சில காலம் தான்
இன்பமும், துன்பமும், கவலைகளும் -
எல்லாம் சில காலம் தான்
எல்லாம் சில காலம் தான்
எல்லாம் சில காலம் தான்

இடைபட்டவள் நீ

நிழலுக்கும் நிஜதிற்கும்
இடைபட்டவள் நீ

கடலுக்கும் கரைக்கும்
இடைபட்டவள் நீ

கடல் நுரைக்கும் காற்றிற்கும்
இடைபட்டவள் நீ

தோழிக்கும் காதலிக்கும்
இடைபட்டவள் நீ

இடையில் வந்தவளே
விடைபெற்று சென்று விடாதே...

விரும்பி வெறுக்கிறாய்

வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….

உன் காதல்

எனக்கு மட்டுமல்ல
கடைசியில் உனக்கும்
கிடைக்காமலே போய்விடும்
உன் காதல்….

love

நான் கொடுத்த கடிதத்தை
வைத்து அவள்
கப்பல் விட்டு
விளையாடி கொண்டு இருக்கிறாள்
தண்ணீரில் அல்ல
“என் கண்ணீரில் ”

ஆழமான நட்பு

நண்பா தயவு செய்து
என் மரண ஊர்வலத்தில் ஆழமான நட்பு
நீ அழுது விடாதே :
என்னையும் அறியாமல் என்
கைகள் நீண்டு விடும்
உன்
கண்ணீரை துடைக்க .

நீ என்னை நேசிக்கிறாய்

"நீ
என்னை நேசிக்கிறாய்" என்று சொல்வதை விட..
"நீ
என்னை பிரியமாட்டாய்" என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்
தோழி...!

இதயம்

உன்னை என் இதயம்
என்று சொல்ல மாட்டேன் ?
ஏன் தெரியுமா .?
உன்னை துடிக்க விட்டு
உயிர் வாழ எனக்கு
விருப்பம் இல்லை

வெறுமையும் நானும் - பரவசம்

வெறுமை தரும் சூழல்
தாண்டிச் செல்கையில் சூழ்வெறுமை
கூட்டம் தேடி.. கூட்டம் அடைந்தும்
ஓம்காரம் தாண்டியும் குழந்தைவழிசெல்ல
துள்ளி விளையாடிய மழலை அமைதியாய்
கடலின் நுரைக்கும் அலைகளின் முன் தொட்டு
அவனுக்கென கைகோர்த்து திரும்பி பார்க்கையில்
எனக்கு பிடித்தவர் வெள்ளை தொப்பியுடன்
எழுந்து கொள்ள இரு பிரிவாய் நின்று சிறு நேரம்
பேசிக்கொண்டிருந்து கண்பார்வையில் மேலேறி சென்றனர்
திரும்ப வந்து துப்பாக்கியில் 4 பலூனை சுட்டு தீர்க்கையில்
திரும்பி வந்த ஷங்கரிடம் பேசிவிட்டு மிஸ்ட்டு கால் கேபிளுக்கு
டீக்கடை பார்த்துவிட்டு குழந்தையோடு வீடு திருப்புகையில்
வெங்கடேஷவரா போளி ஸ்டாலில் பருப்புபோளி
வாங்கும் பொழுது நியாபகத்தில் வந்து போனது
தண்டோராவின் இன்றைய பதிவு
வீடு வந்து ஆபிஸ் வந்து ப்ளாகை திறக்கையில்
வால் பையனின் ‘பொது புத்தி’ இப்படியாக
தொடர்கிறது வாழ்வு என்னும் மர்மப்புள்ளி
எனக்கு மட்டும் வெறுமையாய்
வெறுமைதரும் கனமற்று

நான் இங்கே அவன் அங்கே

அவன் மடியின்
இதம் இல்லையெனில்
பிடி மரணம் என
காலன் சொல்லியிருப்பான்
அவனைத்தேடி துவங்குகையில்
வெண்பனியில் உறைந்திருக்கும்
அன்பின் நதியை சென்றடைந்தேன்
அவன் உடன் சென்றுவிட
மனம் துடித்தாலும்
தடுத்துக்கொண்டே இருக்கின்றன
உடன் சுற்றங்கள்

தனிமைபோர்வையில்
வழிந்துக்கொண்டிருக்கும்
எங்கள் உடல்கொண்ட மனங்களுக்கு
வார்த்தைகளே போதுமாய் இருக்கின்றன
மனச்சுமைகளை அடித்து நொறுக்க
செல்லமாய் சிணுங்கிக்கொள்ள
அன்புகொள்ள கட்டியிருக்கிக்கொள்ள
நினைவுக்கனவுகளில்

அலை சித்திரங்கள்

நுரைத்துவரும் அலைகள்
ஓயாமல் ஏதோ சொல்லிவிட்டுதான்
போகிறது வழக்கம்போல்,
புரியாமல் மௌனமாய்
பார்த்துவிட்டு கடந்துபோகிறேன்
ஒவ்வொரு முறையும்

வாழ்க்கை சித்தரத்தில்
எத்தனை மாயக்கோடுகள்

தொடக்ககோடும் முழுமைபெற்ற
கடைசிகோடும் மறந்துப்போய்
மௌனமாய் சிரிக்கும் ஓவியம்

நுரைத்துவரும் அலைகள்
ஓயாமல் கறைத்துவிட்டுதான் போகிறது
என்னுள் இருக்கும் அகங்காரத்தை
மௌனமாய் ஏற்று கடந்துபோகிறேன்

மூச்சு காற்று

காற்றை

சுவாசிக்கிறேன்

உயிர்

வாழ அல்ல

உன்

மூச்சு காற்றும்

அதில் கலந்திருப்பதால்..

காய்ச்சல்

தயவு செய்து

மழையில்

நனையாதே

காய்ச்சல்

மழைக்கு.

உன் பார்வை

வார்தைகளால்

காயப்படுத்துவாய்.

பார்வைகளால்

மருந்திடுவாய்.

மருந்திற்கு

ஆசைப்பட்டு

காயப்பட்டுக்கொண்டே

இருக்கிறேன் நான்.

ஒழித்து வைக்கிறேன்

மயிலிறகை ஒழித்து

வைப்பதைப் போல

உன்னை
மனதிற்குள் ஒழித்து
வைக்கிறேன் நான்.

நண்பன்

யோசித்து வருவது காதல்
யோசிக்காமல் வருவது நட்பு !

வாழ்கை

நேற்று என்பது இறந்தகாலம்
இன்று என்பது நிஜம்.
நிஜத்தில் வாழ கற்றுக்கொள்
எதிர் காலம் உனதாகும்.

Post a Comment (0)
Previous Post Next Post