தேடிச் சோறு நிதந்தின்று - காதலர் தின கவிதை ( Lovers day Special Kavithai ) - பெண்

தேடிச் சோறு நிதந்தின்று

தேடிச் சோறு நிதந்தின்று _பல‌
சின்னஞ்சிறு கதைகள் பேசி _ ம‌ன‌ம்
வாடித் துன்ப‌ம் மிக‌ உழ‌ன்று‍ பிற‌ர்
வாட‌ப்ப‌ல‌ செய‌ல்க‌ள் செய்து‍_ந‌ரை
கூடிக்கிழப் ப‌ருவ‌மெய்தி‍ _கொடுங்
கூற்றுக் கிரையென‌ப்பின் மாயும்_ப‌ல‌
வேடிக்கை ம‌னித‌ரைப் போலே_ நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ..??"

ந‌ன்றி மகாக‌வி பார‌தியார் அவர்களுக்கு.!!!
இக்க‌விதை எத்த‌னை முறை ப‌டித்தாலும்
நித்த‌ம் நூறு எண்ண‌ம் நினைவினில் வ‌டிக்கும்...!!

காதலர் தின கவிதை ( Lovers day Special Kavithai )

கவிதை வேண்டும்மென
பேனா தூக்கினேன்
கைகள் தானாய் கிறுக்குதடி
உன் பெயரை !

பெண்

பெண்ணை நம்பி பிறந்தபோதே தொபுல்குடிகள் அறுபடுமே
மண்ணை நம்பும் மாமரம் ஓர்நாள் மாபெரும் புயலில் வேரருமே
உன்னை நம்பும் உறுப்புக்கள் கூட ஒருபோழுதுன்னை கைவிடுமே
இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் பின்னால் வரையில் பின்னவருமா?

காதல் கவிதை

அவள் என்னிடம் கேட்டால் உனக்கு எது முக்கியம் என்று,
நானா இல்ல வாழ்கையா ? என்று ,நான் சொன்னேன் வழக்கை தான் முக்கியம் என்று, சொன்னேன் ,
அவள் மௌனத்துடன் திரும்பி சென்றுவிட்டால் ,
அவள் தான் என் வாழ்கை என்று புரியாமல் .....!

வீர எழிச்சி

வீர நடை போடுகிறது நமது - பாதங்கள்
அதைக்கண்டு அஞ்சுகிறது எமது - பூமி

தளர்வறியா மனமுடையோர் நமது - மக்கள்
அது கண்டு தளர்கிரார்கள் எமது - எதிரிகள்

தோல்வி கண்டு சுருல்வதல்ல நமது - உள்ளம்
இருந்தும் தோல்வியைக் கண்டதில்லை எமது - வீரப்படை

உணர்தல்

போகப் போக அவளை அறிந்து கொண்டேன்
பாவி என்று எனை நொந்து கொண்டேன்
அவளுக்கும் மனம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்
கெட்டவள் அல்ல எனப் புரிந்து கொண்டேன் – இம்
மாற்றத்தில் நான் எனை இழந்து கொண்டேன்
இதனால் நான் காதல் கொண்டேன்.


- நல்லவனாக மாறும் கணவன்.

உன் மடியில்

உன் அருகே நானிருந்து
தங்கக் கை பிடித்து
என் நெஞ்சில் உனைச் சாய்த்து
செவ் வானம் பார்த்தவாறு
ஒரு கணமேனும் – நான்
உறங்க வேண்டும்
இப் பிறவிப் பலனடைய

முதற் காதலி

எனக்கும் ஒருத்தி வருவாள்
உன்னை விட அழகாக இருப்பாள்
அதற்கும்மேல் என்னை ஆனந்தப் படுத்துவாள்
மறக்காமல் எனக்கு முத்தமும் தருவாள்
முடிவாக என்னோடு இருப்பாள்
இருந்தும் …
உன்னைப் போல் அவள் இல்லையே!

கண்ணடித்தல்

அழகான பெண்களைப் பார்த்ததும் – ஆண்களின் கண்
அவர்களையறியாமல் தவிக்கின்றதே.

காதல்

தொட முடியாதது …
தொட்டால் விட முடியாதது ...

எனது முத்தம்

உன் விழிக்குள் என் விழி வைத்து…
என் உதட்டால் உன் உதட்டில் மோதி
எரிமலை வெடிக்கும் வண்ணம்…
உன்னை இறுக்கிக் கட்டி அணைத்து
ஒரு கணமேனும் கொஞ்ச வேண்டும்

காதல் கவிதை

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

முத்தம்

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

காதல் கவிதை

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

ஆண்கள் பாவம் காதல்

காதல் வருவதற்கு காரணம்
கண்கள்,
அந்த கண்களில்
கண்ணீர் வர காரணம் பெண்கள்,
பெண்களின் இதயம் ஒரு செங்கல்,
அதை உடைக்க முடியாமல் தவிப்பதோ
அப்பாவி ஆண்கள்...

கவிதையின் ரகசியம் - Secret of Kavithai

காதல் - கவிதை எழுவதற்கான பயிற்சி களம்...

கவிதை போட்டியில் வெற்றி - காதலில் தோல்வி உட்டோரின் வெற்றி களம்...

காதல் தோல்வி - காதல் கவிதை - kaadhal kavithai

வாழ் நாள் முழுவதும் உன்
கையால் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்,
ஆனால் இன்று வாய்க்கரிசி கிடைக்குமோ கிடைக்காதோ
என்று ஏன்கிக்கொண்டிருகிறேன்...

காதல் ரோஜா

கொஞ்சம் பொறு என்று ரோஜாவை
எடுத்து நீட்ட ,
உன்னை விட அழகாக
வெட்கத்தில்
சிவக்க தெரியவில்லை
ரோஜாவிற்கு !!

ரோஜா

உனக்காக நட்டுவைத்து வளர்த்தேன்
ஒரு ரோஜா செடியை
மலர்ந்தபின் உனக்கு கொடுக்க
அதை பறிக்க மனம் வரவில்லை
அது உன்னை போலவே அழகாய் இருந்ததால்

தேட முடியவில்லை நான் தொலைத்த நட்சத்திரங்களை
அவள் பார்வை என்மீது படுதல் நின்ற பிறகு
தாமதமாகவே உணர்ந்திருக்கிறேன்
பார்வையாய் இருந்தாளென்று

கண்கள்

பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில்
உன் கண்களை மூடிக்கொள் .
உன் உதடுகளை விட ,
உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன

Post a Comment (0)
Previous Post Next Post