காதலுக்கு வரையறையே இல்லையா? - வாழ்க்கை - சாரல்மழை

காதலுக்கு வரையறையே இல்லையா?

இது நீ நேற்றணிந்த
தாவணி நிறம்..
இது உன் கன்னச் சிவப்பு..
இது விரல் நகப் பூச்சு..
வானவில் வர்ணத்துக்கு
இப்படியொரு விளக்கம் தருகிறாய்.
ஐயோ.. உன் காதலுக்கு
வரையறையே இல்லையா?

வாழ்க்கை

வாழ்க்கைதான் எத்தனை
விசித்திரமானது!
அழ வைக்கிற கோபத்தையும்
சிரிப்பைத் தரும் அன்பையும்
உன் ஒருவனிடமே
தந்திருக்கிறது!

சாரல்மழை

காதல் வழிச் சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை..
நாணக்குடை நீ பிடித்தும்
வேர்வரைக்கும் சாரல்மழை!

ஞாபகம்

உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால்
பாழாய்ப் போன இயற்கை
படுத்துகிறதே கண்ணே

வெண் மேகம் திட்டாய் நுரை போல
என்னவள் பல் துலக்குகிறாள்

சாரல் மழை
என்னவள் கூந்தல் துளிர்கிறாள்

அது என்ன குயிலோசை

என் பெயரை உச்சரிகிறாள்

இப்படி
எவ்வாறோ உன்னை நினைவுபடுத்துகிறதே பெண்ணே

நீ எப்போது என்னைப் பற்றி நினைப்பாய்
எதாவது இறுதி ஊர்வலம் உன்னை கடக்கும் போதா??

காதல் வடை

காதலி என்பவள்
பாட்டி சுட்ட வடை மாதிரி
ஒழுங்கா watch பண்ணலைனா
நரிபயல் pickup பண்ணிடுவான்

காதல் டாஸ்மாக்

கண்ணா... நீ
சுமாரா லவ் பண்ணா 35 மார்க்
சூப்பரா லவ் பண்ணா 80 மார்க்
சின்சியரா லவ் பண்ணா
தம்பி நோட் பண்ணிக்கோ
டாஸ்மாக் தான்!!!

இதுதான் இந்தியா

இந்திய திரு நாட்டில் …
தோண்டினால் தங்கம் கிடைக்கும் …
வெட்டினால் வெள்ளி கிடைக்கும் …
ஆனால் …

படித்தால் மட்டும்
வேலை கிடைக்காது !!!

மேகம்....மோகம்

யாரை
காதலித்தது
இந்த மேகம் ….

இப்படி
அழுகிறதே!!!

சில நிமிடம்

சில நிமிடங்கள் .....
வார்த்தைகள் மொழிய யோசித்தது
கனவிலும் பேசிக்கொண்டது
கண்ணாடி என் நண்பனானது
இவை சில நிமிடம் தான் நாள்களில்
இவை மட்டுமே நாட்களானது உன்னை கண்ட பின்னால் !!!!

உன் காதோரம்

உன் காதோரம் கவி சொல்லும் காதணி ...
நித்தம் என் நினைவோடு விளையாடும் கண்மணி ...

நினைவெல்லாம்

நினைவெல்லாம் நீ ஆனதால்
வார்த்தைகளெல்லாம் கவிதைகள் ஆனது.......

நானும் இன்று ஒரு காதல் காவியம் தான்
என் இதய பக்கங்கள் உன் விழிகளால் எழுதப்படுவதினால் ...

நானும் சமையல்

நானும் சமையல்
கற்றுக்கொள்ளுகிறேன்
நீ மறுத்தாலும்
உன் உதடுகள் இறக்கப்பட்டு
முத்தம் கொடுக்கும் என்பதக்காக....

உன்னைக் கண்களால்

உன்னைக் கண்களால்
கட்டி அனைத்து
வார்த்தைகளால் முத்தமிட்டுக்
உன் மனதைத் திருட வந்த
திருட்டுப்பயன் நான் .....

உண்மையை சொல்

உன் அழகினை கண்டால் சித்திரங்கள் மட்டுமா பேசும்
அந்தக் கண்ணாடி கூட கண்ணடிக்குமே...
பொய் சொல்லாதே-
கண்ணாடி கவிதை மட்டும் தானே பாடும்..
இல்லை இல்லை-
அந்த கண்ணாடி மூர்ச்சையாகி பேசாமல் நின்றுருக்கும்.
அப்படித்தானே நடந்தது
உண்மையை சொல் ....

நான் கேட்பதெல்லாம்

நான் கேட்பதெல்லாம்
உன் விழி கொண்டு பேசும் தருணங்கள்
உன் விரல் கொண்டு மீட்டும் சப்தங்கள்
உன் இதழ் கொண்டு பூக்கும் ஓசைகள்

இந்தமுற்றுப்புள்ளிகள்

உன்னை பிரிந்த சோகத்தை எழுதியதை கண்டு
மனம் தாளாமல்
என்னது பேனா சிந்திய
கண்ணீர் துளிகள் தான்
இந்தமுற்றுப்புள்ளிகள் . . .

வள்ளுவன்

வள்ளுவன் எழுத மறந்த இரு வார்த்தைகள் தானோ
நீ என்னிடம் சொல்லும் இச்சி போடா....

அப்பா

அன்று உன் மூலம் எனக்கு உயிர் கொடுத்த இறைவன்

இன்று என் உயர்வை காண உன்னை உயிரோடு விட்டு வைக்கவில்லையே !!!

கோழை தோழி ஆனேன் நான்!

உன் அருகாமையில், உன் காதலியாக உன்னில் தொலைந்து போக நினைத்தாலும்,
நீ என் நல்ல தோழன், என்னை என்னிடமே திருப்பிச் சேர்க்கிறாய்…
எந்த ஆணையும் காதலிக்காதே என்று சொல்கிறாய்,
நீ என்றுமே என் இனிய தோழி என்று சொல்கிறாய்…
இந்த இரண்டும் எப்படிச் சாத்தியம்? அது உனக்கே வெளிச்சம்…
நீ என் கைக்கோர்க்கும் போது என் மனதில் துளிர்க்கும்
உணர்வுக்கு பெயர் தெரியாமல் தான் தவிக்கிறேன்…
என் மனதிலும் நட்பைத் தவிர வேறேதுமில்லை என்று ஆணித்தரமாக
உன்னிடம் சொல்ல முடியாத உனது கோழை தோழி ஆனேன் நான்!

காதல் அறியாமை

உன்னோடு இருக்கும் வரை நான் உணரவில்லை

உன்னை பிரிந்த போது தான் உணர்ந்தேன் எனக்கு உன் மேல் காதல் என்று.

இப்பொது அவள் நினைவில் நீ

எப்போதும் உன் நினைவில் நான்.

(உறவுகள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை)

Post a Comment (0)
Previous Post Next Post