நீந்த தெரியாத மீன் குஞ்சுகள் !
யாரு திருவள்ளுவரா !
ஐயா வணக்கம்
திருவள்ளுவரை அறியாத தலைமுறை
எங்கள் தலைமுறை
ஐயா நீங்கள் தாடியை எடுத்துவிட்டால்
எங்கள் இலக்கியவாதிகளுக்கே
உங்களை அடையாலம் தெரியாது
உங்கள் தாடிதான் உங்கள் அடையாலம்
ஐயா !
வேண்டும் மீண்டும் ஒரு திருக்குறள்
எழிய நடையில் ....
அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து
முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதுங்கள்
தமிழ் தெரியாத தமிழர்கள் நாங்கள் !
நீந்த தெரியாத மீன் குஞ்சுகள் !
மூண்றாவது கண்ணம் இல்லை
ஏசுவே பாருங்கள்
ஒரு கண்ணத்தில் அறைந்தாள்
மறு கண்ணத்தை காட்டு - என்றீர்கள்
காட்டினேன்
அதிலும் அறைந்தார்கள்
மீண்டும் காட்டுவதற்கு
மூண்றாவது கண்ணம் இல்லை
இருந்தால் அதிலும் அறைவார்கள் !
இந்த மனிதர்களை மேய்ப்பத்ற்கு -பதில்
நீங்கள் ஆடுகளையே மேய்த்திருக்களாம்
அவை இன்னும் மேல்......
காகிதப் பூக்கள் !
மழைத் துளி தீண்டியதும்
அழுதுக்கொண்டே கறைகிறது
காகிதப் பூக்கள் !
செருப்பு !
உன்னை தினம் சுமப்பதென்றால்
செருப்பாகவும் நான் பிறப்பேன் !
எது சுதந்திரம் ?
சுதந்திர தினமா ?
கொண்டாட்டமா ?
ஏன் ? எதற்கு ?
அடிமையாக இருந்தோமே அதற்கா
முதுகெலும்பு இல்லாமல்
அடிமையாக இருந்த
புலுக்கலுக்கு ஏது சுதந்திரம் ?
சுதந்திரம் வாங்கி தந்தார்களா ?
எந்த கடையில் ?
நாம் என்ன
சேற்றில் ஊறூம் எருமைகளா
அடிமைப் படுத்தவும் -பின்பு
சுதந்திரம் அளிக்கவும்
மனிதர்கள், தன்மானம் உள்ள மனிதர்கள்
சுதந்திரம் தின கொண்டாட்டம்
இனி தேவை இல்லை
நிறுத்திக்கொள்வோம்
சுதந்திர தினம் கொண்டாட்டடும்
தினம் அல்ல , துக்க தினம்
இனி அப்படியே அனுசரிப்போம்
இத்தனை வருடம்
அடிமை வாழ்க்கைக்கு
எதற்கு கொண்டாட்டம்?
இது ஒரு பாடம்
வந்தவனெல்லாம் ஆண்டுவிட்டான்
இருந்ததை எல்லாம் சுறண்டிவிட்டான்
காலிப் பானையோடு
கையேந்தி நிக்கின்றோம் !
புரிகிறதா ? எது சுதந்திரம் ?
உன்னை எப்பொழுது நீ ஆள்கிறாயோ
அப்பொழுதுதான் நீ சுதந்திரம் அடைவாய் !
எனக்கு சுதந்திரம் வேண்டாம் !
பெண்ணே !
எனக்கு சுதந்திரம் வேண்டாம்
உண்மைதான் , சத்தியமாக
எனக்கு சுதந்திரம் வேண்டாம்
என்றும் உன் அடிமையாகவே
இருக்க விரும்புகிறேன்
நான் !
எனக்கு சுதந்திரம் வேண்டாம்
மாய உலகமிது
மாய உலகமிது
எதுவும் உண்மையில்லை - நம்பாதே
எதையும் நம்பாதே
யாரையும் நம்பாதே
எல்லாம் பொய்
யாரையும் எதையும்
உன்னால் மாற்ற இயலாது
மாற்றவும் வேண்டாம்
யாருக்காகவும் நீ மாறாதே !
நீ நீயாகவே வாழ் - முழுமையாக
உண்மையாக ! உறுதியாக !
நீயாக மாறிவிடு.....
உன்னைத்தேடு கண்டுப்பிடி
நீ யார் என்றறி
நீ உன்னை அறிந்தால்
இவ்வுலகமே உன்னை அறியும்
மிருகம்
ஆளுக்கொரு மனது
அதனுல் ஒரு மிருகம்
தீனிப் போட்டு வளர்ப்பவர் உண்டு
தன்னை அறியாமல் வளர்வதும் உண்டு
எவ்வாறாயின்
மிருகம் தன் குணத்தை
காட்டியே தீரும் !
மனித மனதில்
நன்றி உள்ள நாயும் உண்டு
செல்லம் கொஞ்சும் பூனையும்முண்டு
சேட்டை செய்யும் வானரம்முண்டு
குழிப் பறிக்கும் நரியும்முண்டு
கொல்லத் துடிக்கும் வேங்கையும் உண்டு
மிருகம் உண்டு வாழ்பவன் நீ- கவனம்
உன்னை உண்டு மிருகம் வாழும்
தீயதனைத்தும் மிருகம் செய்து
பழி உன்மீதுப் போடும்
உன் மனதை அழித்துவிடு
ஆசையை கொன்றுவிடு- அல்லது
பக்தி எனும் சங்கிலிக் கொண்டு
உன் மிருகம் கட்டு
மிருகம் உண்டு வாழ்பவன் நீ- கவனம்
உன்னை உண்டு மிருகம் வாழும்
தீயதனைத்தும் மிருகம் செய்து
பழி உன்மீதுப் போடும்
ஆறுதல் அடைந்தேன் !
அன்பே உன் மனதில்
நான் இல்லை என்றாய்
துடித்துப் போனேன் !
பின்பு
உனக்கு மனசே இல்லை
என்று தெரிந்து
ஆறுதல் அடைந்தேன் !
ஹைக்கூ கவிதை !
நீயே என் சுவாசம் ஆனதால்
இன்னும் நான் உயிர் வாழ்கிறேன் !
மிருகமும் கடவுலும்
கடவுளாக மாறி இருக்கலாம்- அல்லது
மிருகமாகவே வாழ்ந்திருக்கலாம்
மனிதன் என்று உருவெடுத்தான்
உலகத்தையே பதர வைத்தான் !
மனிதன்
மிருக இனத்தில் உயர்ந்தவனா ?
தெய்வத்தில் தாழ்ந்தவனா ?
இரண்டும் இல்லா தனி இனமா ?
இறைவன் படைப்பில்
அனைத்தும் இரண்டுதானே
மூன்றாவதாக நீ எப்படி வந்தாய் ?
மனிதன் வாழப்பிறந்தான்
என்பதை மறந்து
ஆழப்பிறந்தேன் என நினைக்கிறான்
மனிதன் படைத்த மதம்
மனிதனை தின்று வாழ்கிறது- இன்று
ஏக்கம்
அகப்பையில் ஒன்றும்
வராது என்று தெரிந்தும்
காலி பானையை
துலாவும் ஏழை
பசியை விரட்ட
ஈரத்துணியை கட்டிக்கொண்டு
படுப்பது போல்
உன்னிடம் இருந்து மின்னஞ்சல்
வராது என்று தெரிந்தும்
நிதம் என் மின்னஞ்சலை
சரிப் பார்க்கிறேன்
நீ ஒரு மின்னஞ்சல்
அனுப்ப மாட்டாயா
என்ற ஏக்கத்துடன்
ஏமாற்றம் மிஞ்சவே
உன் நினைவை சுமந்து
உறங்கச் செல்கிறேன்
உன் என்னம்
சுமக்கும் உறிமையாவது
மிஞ்சியதே ! எனக்கு !
வானவில்ற்கு இங்கு என்ன வேலை
மழை காலம் இல்லை`
மேகம் மூட்டம் இல்லை
மழை பொழிய வில்லை
வானவில் மட்டும் - தோன்றியதே...
வானவில்ற்கு
இங்கு என்ன வேலை
நடந்து போகும் உன்னை
வேடிக்கை பார்கிறதோ........
பெண்னும் பொன்னும்
சினிமா நடிகையும்
கூடப் பணிப்புரியும் பெண்ணும்
எதிர் வீட்டுப் குமரியும்
அடுத்த வீட்டான் மனைவியும்
ஆணைக் கவரும் அளவுக்கு
அழகும் அறிவும் அன்பும்
நிறைந்த அவன் மனைவி
கவர்வதில்லையே ஏன் ?
கை நிறைய வளையலும்
காலுக்கு கொலுசும்
கழுத்து நிறைய நகையும்- இருந்தாலும்
அடுத்தப் பெண்ணிடம் இருக்கும்
ஒரு சிறு மோதிரம் தானே
ஒரு பெண்ணை கவர்கிறது
பெண்னும் பொன்னும்
அடுத்தவரிடம் இருப்பதை
ரசிக்கும் அளவுக்கு
நம்மிடம் இருப்பதை
ரசிப்பதில்லையே ஏன் ?
நான் இறைவன் இல்லை
இல்லாத ஒன்றை உருவாக்க
நான் இறைவன் இல்லை
அதனால்
என் படைப்பு என்று
எதுவும் இல்லை......
அறுஞ்சுவை விருந்து..........
காதலி இனிப்பது போல் -பலருக்கு
மனைவி இனிப்பதில்லையே
ஏன் ?
அவள்.........
இனிப்பு , புளிப்பு , துவர்ப்பு
கசப்பு , கரிப்பு , உரைப்பு
கலந்த
அறுஞ்சுவை விருந்து அல்லவா
காரமும், கசப்பும்
கலந்தவள் தானே-மனைவி
காரமும், கசப்பும்
உடம்புக்கு நல்லது தானே ?
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு என்பது
உண்மை தானோ?
அளவுக்கு மிஞ்சிய இனிப்பும்
கசந்து விடுகிறது-அதுப்போல்
அளவுக்கு மிஞ்சிய
காதலும்,காதலியும்
புளித்து விடும்......
வாடிய பூ
நான் ! வாடிய பூவா ?
அழகில்லையா ?
வாசனை இல்லையா ?
மனதை ஈர்க்கவில்லையா ?
உனக்கு பிடிக்கவில்லையா ?
என் அழகை
முழுவதும் அளந்தவன் நீ தானே
என் வாசனையை
நுகர்ந்தவன் நீ தானே
என் மனதை
கலைத்தவன் நீ தானே
உன் பிடிக்கு
அடங்கியவள் நான் தானே
உன் ஆசை தீர்ந்து விட்டதா ?
மோகம் மங்கிவிட்டதா ?
நான் இப்பொழுது
வாடிய மலரா ?
வைரமுத்து !
தமிழனை!
தமிழ் பேச தூண்டியவன்-அவன்
நாம் தமிழை படித்தோம்-அவன்
தமிழை குடித்தான்
பாக்கடலை கடைந்த சிவன்
விஷத்தை தான்னுண்டு
அமுதத்தை தேவர்களுக்கு
தந்ததைப் போல்
பல துன்பங்களையும்
துயரங்களையும் தாங்கிக் கொண்டு
தமிழ அமுதை நமக்கு தந்தவன்....
வைரமுத்து
வைரமும் முத்தும்
சேர்ந்தால் கூட
அவன் த்மிழுக்கு
இனை ஆகாது.........
உயிரில் ஊருவதுதான் காதல் !
காதல் மனதில் முளைப்பதில்லை
மனதின் முடிவில்தான்
காதல் தொடங்குகிறது !
மனம் ஆசைகளை உருவாக்கும்
கருவி மட்டுமே
அதையும் தாண்டி
உயிரில் ஊருவதுதான் காதல் !
ஏன் பெண்ணே முறைக்கிறாய் ?
ஏன் பெண்ணே முறைக்கிறாய் ?
நீ ! தங்கமான பெண் என்றார்கள்
அது உண்மையா , என்று
உரசிப் பார்த்தேன் !