உன் முகத்தைப் பார்த்ததும் !
பனி இறங்கும் வேளை
குளிரும் இரவு
கருத்த வானம்
மேகத்தின் நடுவில் - ஒரு
வட்ட பௌர்னமி நிலா
வெளிச்சம் அள்ளி வீசுவதை - காண
ஆவலுடன் காத்திருந்தேன் !
அந்த ஆசை
ஒரு கணத்தில் மறைந்தது
உன் முகத்தைப் பார்த்ததும் !
உன் முகத்தில் நிலவை காண்கிறேன்
நிலவில் உன் முகத்தை காண்கிறேன்
உங்களுக்குள் என்ன ஒற்றுமை ?
நிலவின் தங்கையோ நீ ?
என் ஆத்மா சாந்தி அடையும் !
பெண்ணே !
எனக்காக கண்ணீர் சிந்தாதே !
நீ அழுதால்
என்னால் தாங்க இயலாது
சேர்த்துவை ! உன் கண்ணீரை
என்றோ ஒரு நாள்
என் மரண செய்தி வருமே ! அன்று
எனக்காக ஒரு சொட்டு !
ஒரே ஒரு சொட்டு ,கண்ணீர் சிந்து
அது போதும் எனக்கு
உன் மனதிலாவது
நான் வாழ்ந்தேன் ,என்ற நிம்மதியுடன் !
என் ஆத்மா சாந்தி அடையும் !
என் பேனா சிரிக்கிறது
என் பேனா சிரிக்கிறது
என்னடா கிறுக்குகிறாய் என்று
உனக்கு மட்டும் தானே தெரியும்
இது கவிதை என்று.........
உரசல்
காற்றும் மரமும் உரசாதா ?
மேகம் வானை உரசாதா ?
மழை பூமியை உரசாதா ?
நான் உன்னை உரசினால் மட்டும்
ஏன் எரிமலயாய் வெடிக்கிறாய் ?
கவிதை நடை
அன்பே !
கவிதை நடை என்று
நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆனால் !
இன்றுதான் பார்க்கிறேன்.......
நீ ! நடந்து வருகையில் !
ஒரேப் பார்வை.......
இரண்டு சூரியன்
ஒரே இடத்தில்
உன் கண்கள்........
என்னை சுட்டெரித்தன
நான் சாம்பலானேன்
பீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுந்தேன்- உனக்காக
உன்னைத் தேடினேன்
பெண்ணே !
உன்னைக் காணும்வரை
காதல் இல்லை
கவலை இல்லை
மோகம் இல்லை
காமம் இல்லை
எனக்கு மீசை இருப்பதை
உன்னைக் கண்டப் பின்புதான்
உனர்ந்தேன்..........
கோலம்
அவள் வீட்டு வாசலில்,
என்னை கோலமாக இடச்சொல்லுங்கள்!
என்மீது அவள் பார்வை தான் படவில்லை
பாதங்கலாவது பதியட்டும்...!
ஆண்கள் எல்லாரும் கம்பர்கள்
கம்பன் ஏமாந்தார் !
கண்ணதாசன் கண்டுபிடித்தார் !
பாரதி புதுமை என்றார் !
வாலி கங்கை என்றார் !
வைரமுத்து அதிசயம் என்றார் !
பெண்களுக்கு பல அர்த்தங்கள் !
ஆண்கள் எல்லாரும் கம்பர்கள் !!!
உன் நினைவுகள்
தனிமையை
தேடும்போதெல்லாம்
முன்கூட்டியே வந்து
இடம் போட்டு அழைக்கிறது
உன் நினைவுகள்!
நீங்காத துயரம்
எட்டாத
உயரத்தில்
நீ ..
நீங்காத
துயரத்தில்
நான்
உன்னைக் கண்டதால்..
யார் சொல்லியது
நீ..
சொல்லி மலர்ந்த மலர்கள்..
யார்..
சொல்லி வாடியது..
எது சுகம்
முத்தத்தில் நனைந்தது முகமே ...
மீண்டும் நனைவதில் தான் சுகமே ...
நிஜமான காதல்
நிழலும் நிஜம் தான்...
வெளிச்சம் உள்ள வரை...
காதலும் நிஜம் தான்...
நீ என்னை நினைக்கும் வரை...
நீ இன்றி நிழலும் துணை இல்லை...
மீண்டும் நீ என்னை தொடரும் வரை...
கரைக்கு ஈரம் அலைகள் அடிக்கும் வரை...
பெண்ணே உன் நினைவுகள்...
என் இதயம் துடிக்கும் வரை...
பூ வாசம்
வாசம் வீசும் பூவே...
ஒரு வார்த்தை பேச வருவாயா...
வாடும் முன்னே...
உன் புன்னகையை வெகுமதி இன்றி தருவாயா...
தரிசனம்
மின்னலாய் முகம் காட்டும் பெண்ணே...
நிலவைப்போல தரிசனம் தருவாயா...
நினைவெல்லாம் நெஞ்சுக்குள் இருப்பாயா...
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!
இமைகள் தாழ்ந்தன
விழிகள் அழுதன
என் முகம் நோக்காத உன் பார்வையினால்!
நான் நாணம் கொண்டேன்
என் கண்களில் நான் நாணம் கொண்டேன்
உன் மேல் நானும் காதல் கொண்டேன்
மனச் சிறையில் அதனை ஒளித்து வைத்தேன்
ஆனால் விழித் திரையில் படமாய் விரிந்ததடா!
என் வாசம்!
கண் நிறையக் காதல்
மனம் நிறைய நேசம்
நீ இல்லாத தேசமோ நான் என்றுமே வாழ விரும்பாத என் வாசம்!
என் விழிப் பார்வை
என் முகத்தை திரைச்சீலை போட்டு மறைத்தாலும்
என் விழிப் பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறதே
உன் மீதான என் காதலை!
அடி போடி கள்ளி
அடி போடி கள்ளி
உன் முறைத்த விழிப் பார்வைகள் கூட
நம் காதலை சொல்லிவிடும் தாஜ்மகால் சிற்பங்கள்!