காத‌ல் - தேடுகிறேன் - குழ‌ந்தையாய் தெரிகிறாய்?

காத‌ல்

க‌ண்க‌ளிலோ வெட்க‌ம்
முக‌த்திலோ காத‌ல்
இத‌ய‌ம் முழுவ‌துமோ நீ!

தேடுகிறேன்

கண்களால் உனை தேடுகிறேன்
நீ என் இதயத்துள் இருப்பதை மறந்து விட்டு!

குழ‌ந்தையாய் தெரிகிறாய்?

எல்லோர் க‌ண்க‌ளிலும் பெரிய‌வ‌னாய் தெரியும் நீ
என் க‌ண்க‌ளில் மட்டும் ஏன‌டா சிறு குழ‌ந்தையாய் ம‌ட்டுமே
தெரிகிறாய்?

நம் காதல்

உன் மீது நான் கொண்ட‌ காதலை
யாரிட‌மும் சொல்லாதே என்று என்‍
ந‌ண்பியிட‌ம் சொல்ல‌த் தெரிந்த‌ என‌க்கு
என் க‌ண்க‌ளிட‌ம் சொல்ல‌த் தெரிய‌வில்லையே
பார் எப்ப‌டி காட்டிக் கொடுத்து விடுகின்ற‌ன‌ ந‌ம் காத‌லை!

உன் பார்வை

உன் பார்வை அம்புக‌ளால் நீ என்னை கொலை செய்யும்


போதெல்லாம்;


என் இத‌ய‌ம் புதுப் பிற‌ப்பு அடைகின்றதே தோழி!

என் க‌ண்க‌ள்

காத‌லிடம் இருந்து தான் பிற‌ந்து கொண்ட‌தா வெட்க‌ம்?

உன் மேல் நான் காத‌ல் கொண்ட‌தும்

என் க‌ண்க‌ள் வெட்க‌ப் பூக்க‌ளை அணிந்து கொண்ட‌ன‌வே!

விடுதலையாக‌ விரும்ப‌வில்லை

என்றுமே விடுதலையாக‌ விரும்ப‌வில்லை

உன் விழிச்சிறையில் அக‌ப்பட்டுக் கொண்ட பின்ன‌ர்!

காத‌ல்!

காற்றிட‌ம் இருந்து கூட‌ த‌ப்பி விட‌லாம் நீ
ஆனால் என் க‌ண் அசைவிலிருந்து த‌ப்ப‌ முடியாத‌ ப‌டிக்கு என்

காத‌ல்!

கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன!

நம் காதலில் தானடி
இதயங்கள் பேசிக்கொண்டன‌
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன!

இமைக்கதவு காதல்..

விழி தேடல் விடியும்..
விடிந்தபின்னும்
விடியாமல்
மூடும் இமைக்கதவு
காதல்..

கண்கள் பேசினால்!

இதயம் பேசினால் மட்டுமா காதல்? கண்கள் பேசினால்!

தவிப்பு!

பொய் சொல்கிறவனும் சந்தர்ப்பவாதியும்

தொடர்ந்து ஜெயிக்கும் இவ் வுலகில்

கடவுளையும் உண்மையையும்

தேடித் தேடியே களைத்துப் போனான்

அப்பாவி நியாயஸ்தன்!

நிரந்தர முகவரி

நிரந்தர முகவரி;

விண்ணப்ப படிவத்தில் நிரப்பும் போதெல்லாம்

வலித்தது வாடகை வீட்டில் குடியிருப்பவனின்

மனம்!

யாதுமாகி நின்றாய்

என் உடல் முதல் உயிர் வரை
என் அகம் முதல் புறம் வரை
துன்பத்தில் தோள் கொடுத்து
என் இன்பத்தை பகிர்ந்து கொண்டு
என்னில் இன்றி அமையாதவனாய
முச்சு காற்றாய்
யாதுமாகி நின்றாய்
உயிர் தோழா ....

நட்பு கவிதை

உன் இதயமும் ...
என் இதயமும் ...
பேசிக் கொண்டிருந்தன
மௌன மொழியிலே...
அதனால் ...
இன்று நாம் நட்பு கவிதையானோம்...

நட்பிற்கு இல்லை

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை

நமக்கான நட்பை

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....

உனக்கு மடல் எழுத

உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன

ஆழமான நட்பின் வெளிப்பாடு

அமைதியான இரவு..

சில்லேன்ற காற்று..

அலைகளின் தாளம்..

படகு மறைவில் காதல் ஜோடிகள்..

இருவர் மட்டும் வெட்டவெளில்..

அவன் தோளில் அவள் தலை சாய்ந்து

விசும்பி கொண்டு இருக்கிறாள்..

சமுகம் அவர்களை கேலி செய்தது

கள்ள காதல் என்று..

எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர்

ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!

நண்பா நீதான் !

நட்பின் இலக்கணத்தை மாற்றும் காலமிது
நட்பிற்கு விலை கேட்கும் மனிதர்கள்
நண்பா கவனமாயிரு
நட்பை விற்று விடாதே
கோடி வருடமானாலும் உன்னால்
மீளப்பெற முடியாது ..

Post a Comment (0)
Previous Post Next Post