நவயுக நட்பு - நட்பு வேண்டும் - அன்புடன் நட்பு…

நவயுக நட்பு

முல்லை மொட்டுக்களாய்...
பள்ளிச் சிட்டுக்களாய்...
பகை மறந்து,
பை சுமந்து,
சென்றோமே பள்ளிக்கு....!!!
பதின் ஒரு வருடங்கள்.
பசுமையான வருடல்கள்.
மறக்க முடியா மங்கள நினைவுகள்.
தனிமையில் மீடிப்பர்த்தேன்.
என் இளமை அழுகிறது...!!!
நாங்கள் அடி வாங்காத ஆசிரியர் இல்லை
எங்களின் பகிடி வதைக்கு பலிஆகத
ஆட்களும் இல்லை...!!!
நாங்கள் அங்கு செய்யாத சேட்டையும் இல்லை....!!!
பராமுகமுடன் படித்தோம்,
பக்க விளைவை எதிர் கொள்ள
முடியாமல் தவித்தோம்...!!!
பரீட்சை குறுக்கிட்டது
எங்களின் படிப்புக்கே
முற்றுகை இட்டது.
பெறுபேறும் வந்தது...!!
ஆனந்தத்துடன் இருந்தனர் சிலர்,
அழுகையுடன் இருந்தனர் இன்னும் சிலர்,
மரமாய் இருந்த எம் நண்பர் கூட்டம்
இன்று செடியாய் மாறியது.
உயிர் தோழி மூவருடன்
உயர் தரத்தில் தடம் பதித்தோம்.
புதுப்புது முகங்கள்...
சற்றே ஆறுதலடைண்டன அகங்கள்...
மீண்டும் ஆரம்பம்,
எங்கள் அன்பின் போராட்டம்.
பழைய ஜாபகங்கள் படர்ந்தன.
பிரிந்த தோழிகளின்
நினைவலைகள் நீண்டன...!!!
எமது பாடசாலை
வாகை மரத்திடம் கேட்டுப்பார்,
நாங்கள் செய்த சேட்டைகளை
அது மொழிபெயர்க்கும்...!!!
இதற்குள் உயர்தர வாழ்க்கை
உருண்டோடி விட்டது...!!!
இதை தனிமையில் நினைக்கையிலே
இதயம் சோக கீதம் பாடுது...!!!
அதற்குள் சிலர்,
திருமணமும் முடித்திருப்பார்!
சிலர் பல்கலைக்கழகமும்
சென்றிருப்பார்......!!!
கண்ட இடத்தில் ஒரு புன்னகை
வருடத்துக்கு ஒரு முறை
வாழ்த்து மடல்.....!!!

நட்பு வேண்டும்

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

அன்புடன் நட்பு…

எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும் நட்பு

*
என் நண்பனை
அறிமுகப்படுத்தினேன்
சந்தோசப்பட்டனர்
என் நண்பியை
அறிமுகபடுத்தினேன்
சந்தேகபட்டனர்

*

காதலி கொடுத்த பூ
வாடிப்போனது
நண்பி கொடுத்த பூ
வாடவில்லை
அதுதான் நட்பு

*

காயப்படுத்திய கரம்
நட்பென்றாலும் அதே
கரத்தையே தேடும்
குணப்படுத்த நட்பு

நண்பி.... நண்பி.....

நட்பு....
சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு
உன்னை காணும் வரை
ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே
அன்பு காட்டும் உலகில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன்
அன்பை எண்ணி வியந்து போகிறேன்....

நண்பி.........
மொழிகளோ....
தூரங்களோ........
வயதோ.......
மற்ற எதுவுமே - நட்பை
எதிர் பார்ப்பதில்லை...
உன்னாலே புரிந்து கொண்டேன்..
என் வாழ்க்கைத் தோட்டத்தில்
எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும்
மலர்ந்து மணம் வீசவில்லை
கால வெள்ளத்தில்
சிதறுண்டு போகும் உறவுகளில்
நண்பி.............தொடர்வாயா
உன் நட்பை
இறுதி வரை..........?

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு,
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு,
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

புகழ் எதிர்பார்க்காதது நட்பு,
சுயநலம் தெரியாதது நட்பு,
தலைக்கனம் இல்லாதது நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

குழந்தையில் விளையாடிட நட்பு,
இளமையில் குறும்புகள் செய்திட நட்பு,
முதுமையில் கலந்துரையாடிட நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

உனக்கு உறவாக வாழ்வது நட்பு,
உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு,
உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

உன்னை மனிதனாக்குவதும் நட்பு,
உன்னை உணரவைப்பதும் நட்பு,
உன்னை உயர்த்துவதும் நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு,
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு,
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு

உன் நண்பர்களை புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...

நட்பிற்கு முகமில்லை

எப்போதும் கண்கள்
பார்த்துப் பேசும்
பழக்கம் எனக்கு.

முகம் பாராமல்
நட்பொன்று வளரலாம்
என்பதே தொலைபேசியில்
நீ அறிமுகமானபோதுதான்
தெரிய வந்தது.
உன் குரல் வசீகரமும்
சரளமான பேச்சும்

உனக்கோர் முகத்தை
என் மனதில் வரைந்தது.

நீயும் எனக்கோர்
முகம் வரைந்திருப்பாய்.

நம் நட்பு வளர்வதில்
உடன்பாடுதான் என்றாலும்,
சந்திப்பு நிகழ்வதில்
உடன்பாடில்லை.

உனக்கான என் முகமும்
எனக்கான உன் முகமும்
அழிந்து போவதில்
எனக்கு விருப்பமில்லை

கல்லூரி நட்பு!

எங்கோ பிறந்தோம்!
எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால
சிந்தித்துக கொண்டோம்!

முகங்களைப் பற்றி
யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து
நேசித்ததுமில்லை!

எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!

அவரவர் கருத்துக்களை
இடம் மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !

சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!

கவலைகளை
கிள்ளி அறிவோம்!
இலட்சியஙகளை
சொல்லி மகிழ்வோம்!

உழைப்பை பெருக்க
உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க
நம்பிக்கை தருவோம்!
நன்மைகள் வளர
முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து
சாதிப்போம்!

மரணமே வந்தாலும்

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது

நட்பில் கரைந்த ஞாபகங்கள்!!

ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

உயிரில் கேட்கிறதே!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

இயற்கை சந்தோஷிக்கிறது!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்…
வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!

இதயம் உணர்கிறது!

ஒரு சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!

ஆயிரம் மழைத் துளி

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்…
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!
உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை…..
தாகமில்லை……
மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்

காதலின் சுகம்
போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

இதயம் போதுமே!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!

மனதின் குரல்

ஆளப்பதிந்த ஈட்டியின் பதிவுகளாய்
கல்லூரித்தாயின் நினைவுகள். – யாரும்
ஓரம்கட்டிவிட முடியாத அந்தப் பசுமையின் உணர்வுகள்.
பட்டப்பெயர் சொல்லி அழைப்பதிலே எமக்கிருந்த
பஞ்சுமிட்டாயின் சுகங்கள்.

கல்லூரியில் எமையாண்ட ராஜாக்கள் காலமது.
அவர்களுக்கு நாம் விட்ட டிமிக்காக்கள் பலவிதம்.
சொல்லில் அடங்காத சிந்தனைச் சிரிப்புக்கள் அவை.
காவ்ரைமோடு களவாக வீடுசென்ற நாட்கள்,
ரிப்போட்டில் போட்ட நண்பனின் திருட்டுக் கையெழுத்து,
மேசையில் எழுதப்பட்டிருந்த நண்பியின் அழியாத பெயர்.
அதற்காய் வாங்கிக்கட்டிய பிரம்படிகள்.
அத்தனையும் சித்தப்பிரமையாய் தித்தித்ததெப்படி?...
விடைகான முடியாத வாலிபலோகம் அது.

சேவிஸ் கிளப், அந்த சைக்கிள் பாக்,
சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ், மதில் மேலிருந்து பார்க்கும்
கிரிக்கட் மெச், பாதி மீதியாய்ப் பகிர்ந்துண்ணும்
உப்புத்தூள் மாங்காயும் கடலை வடையும்
கற்பனைக்குள் அடங்காத அத்தனை சொர்க்கம்.

பரீட்சைக்காலத்தில் உறங்காத இரவுகள்,
நண்பிகளோடு செய்த பந்தயங்கள்,
கால் புள்ளிக்கூட கணக்குப் பார்த்த காலங்கள்.
அத்தனை கெட்டிக்காரர்களும் கெட்டிக்காரிகளும்
ஒன்றாய் இருந்த வகுப்பறைகள். - இப்போ.....
திக்கொன்று திசையொன்றாய்
எட்டமுடியா தூரங்களில் ஒருபுறம்.
களங்களில் ஆடி
காவியமான வீரர்களாய் மறுபுறம்.
அவர்களுக்காய் ஒரு கணம் தலைகுணிந்து மௌனமாகி
தொடர்வோம் வாழ்க்கையின் படிகளை.

நட்பைக் காப்பாற்றியவள்

நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்
நீ

உன் குரல்

அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
''எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்''
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்

எந்த மொழி

தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்

நமக்கான நட்பு

என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு

Post a Comment (0)
Previous Post Next Post