ரசிக்கும் கண்கள் - வட்டம் - கடிகாரம்

ரசிக்கும் கண்கள்

கண்களின்றி ரசிக்கின்றேன்..
என் கண்களாக நீ அல்லவா..
உயிரின்றி நான் வசிக்கின்றேன்..
என் உயிர் நீ அல்லவா..

வட்டம்

இரவு போனதும்
நிலவும் போனது
பிரிவு போனதும்
நினைவும் போனது

நிலவு போனதும்
வானம் இருண்டது
நினைவு போனதும்
வாழ்க்கை இருண்டது

வானம் இருண்டதும்
இருள் சூழ்ந்தது
வாழ்க்கை இருந்ததும்
உன் புன்னகை சூழ்ந்தது

இருள் சூழ்ந்ததும்
உலகம் ஓய்ந்தது
புன்னகை சூழ்ந்ததும்
மனம் ஓய்ந்தது

உலகம் ஓய்ந்ததும்
இரவு போனது
மனம் ஓய்ந்ததும்
பிரிவும் போனது

கடிகாரம்

இரண்டு முட்கள் -
அவர்களுக்குள் ஒட்டப்பந்தயம்,
உனது அழைப்பு வந்ததும்
அவர்களுக்குள் கண்ணாமூச்சியாட்டம்.

இலை உதிர் காலம்

பசுமை நினைவுகள்
மறைந்தபின், பாரமான
உயிரற்ற தினங்களை
உதிரும் காலம்.
இது இலை உதிர் காலம் .

இறுதி வேண்டுகோள்

வாயலில் காவல் நிற்கும் காலனை
சற்று நேரம் காக்க விடு

இதற்கு தானடி இந்நாள்வரை காத்திருந்தேன்
என் கரம் ஒருமுறை பற்றி விடு
உலர்ந்த என் உதட்டில் முத்தமொன்று இட்டு விடு

இம்முறை உன்னை தொலைத்து விட்டேன்
சென்று வருகிறேன் விடை கொடு

இருளில் ஒரு கனவு

காரிருட்டில் ஒளிக்கும்
நிலவு வேண்டும்

அதன் கீழே தனியாய்
நானிருக்க வேண்டும்

அங்கே மனதை வருடும்
நிசப்தம் வேண்டும்

என்னுள் எதையும் சிந்திக்காத
சிந்தை வேண்டும்

மணல்தரியில் படுத்து
உறங்கிட வேண்டும்

பிடித்தவை எல்லாம்
கனவாக வேண்டும்

அக்கனவில் ஒரு வாழ்க்கை
நடத்திட வேண்டும்

நல்லவை எல்லாம்
நடந்திட வேண்டும்

அங்கு எப்பொழுதும் பாடும்
மனிதன் வேண்டும்

தீவையை எண்ணாத
மனங்கள் வேண்டும்

மதங்கள் இல்லாத
மக்கள் வேண்டும்

துன்பத்திலும் மனிதன்
சிரித்திட வேண்டும்

சிரிப்பே தேசிய கீதம்
ஆகிட வேண்டும்

சிறு குழியிலும் தண்ணீர்
தோன்றிட வேண்டும்

பின்னர் என் கனவுகள் கலையாமல்
நிரந்திரம் ஆகிட வேண்டும்.

மவுனம்

மழையின் மவுனம் - அவள்
விழியின் மவுனம்

வானவில்லின் மவுனம் - அவள்
புன்னகையின் மவுனம்

காற்றின் மவுனம் - அவள்
சலனத்தின் மவுனம்

மின்னலின் மவுனம் - அவள்
சீண்டலின் மவுனம்

மவுனம் - அவள்
ஒரு புயலின் மவுனம்

எல்லாம் சில காலம் தான்

காதலியும், கண்ணீரும், கனவுகளும் -
எல்லாம் சில காலம் தான்
புரட்சியும், முற்போக்கு சிந்தனையும், சவால்களும்-
எல்லாம் சில காலம் தான்
உறவினர்கள், நண்பர்கள், பிணைப்புகள்-
எல்லாம் சில காலம் தான்
பகை, நட்பு, நன்றி -
எல்லாம் சில காலம் தான்
வாக்குறிதிகள், அழிவில்லா நினைவுகள் -
எல்லாம் சில காலம் தான்
நிரந்தரமானதும், வாழ்வில் சிக்காமல் இருப்பதும் -
எல்லாம் சில காலம் தான்
இன்பமும், துன்பமும், கவலைகளும் -
எல்லாம் சில காலம் தான்
எல்லாம் சில காலம் தான்
எல்லாம் சில காலம் தான்

இடைபட்டவள் நீ.....

நிழலுக்கும் நிஜதிற்கும்
இடைபட்டவள் நீ

கடலுக்கும் கரைக்கும்
இடைபட்டவள் நீ

கடல் நுரைக்கும் காற்றிற்கும்
இடைபட்டவள் நீ

தோழிக்கும் காதலிக்கும்
இடைபட்டவள் நீ

இடையில் வந்தவளே
விடைபெற்று சென்று விடாதே....

நினைவில் நின்ற தோழிகளுக்கு...

நாம் எதிர்பார்க்கவில்லை
சந்திப்போம் என்று !
நாம் எதிர்பார்க்கிறோம்
பிரியப்போகிறோம் என்று !
நான் எதிர்பார்க்கிறேன்
என்னை மறக்கமாட்டீர்கள் என்று !

தலைமுடி நரைத்தப் பிறகு
தலைமுறை ஒன்று கடந்த பிறகு
என்றோ ஒரு நாள் சந்தித்தால்...

நன்றாய் பழகினோம் என்று
நாம் பேசிய வார்த்தைகள்
நினைவில் இருந்தால்...
அன்று கூறுவோம்
நம் நட்பு கடல் என்று !

எங்கள் நினைவுகளை
நெஞ்சில் பதித்துவிட்டேன்
என் கையெப்பப் புத்தகத்தில்
கையெழுத்து இடுங்கள் !

உங்கள் முகங்களை
நினைவில் நிருத்திக் கொண்டேன்
இருப்பினும் உங்கள்
புகைப்படங்கள் தாருங்கள் !

காலம் நினைத்தால் மீண்டும் சந்திப்போம்
சரித்திரம் படைத்தவர்களாக !
நீங்கள் சரித்திரம் படைக்க
என் வாழ்த்துக்கள் !!

அம்மா

என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .

என் முதல்
தோழியும் கூட . . .

என் செல்ல
குறும்புகளை
செல்லமாய்
திட்டியபடி
ரசிப்பவள் . . .

இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .

அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .

காதல்

காதலுக்கு கண் இல்லை என்பது பொய்.
உனது கண்களை பார்த்த பிறகுதான் உன்னை காதலிக்கவே தொடங்கினேன்

நெஞ்சுப் பொருக்கு தில்லையே

அன்று...
பசுத்தோல் போர்த்தி இருந்தன புலிகள்
அது காலத்தின் கட்டாயம்
பசுக்களோடு பழகுவதற்கு
புலியின் அடயாளங்களை மறைத்தோம்


பசுத்தோல் போர்த்திய
புலிகளாய் இருந்த காலம் போய்
பசுக்கலாகவே மாறிவிட்டன புலிகள்
பல கர்ஜிக்க மறந்து விட்டன
சில மாடுகளைப் போல கத்துகின்றன
சில பாய்ச்சலை மறந்து
மேய்ச்சலுக்கு தயாராகின
சில பால் கறக்கவும் ஆரம்பித்தன
சில புல்லை திங்கவும் தயாராகின

அதையும் தாண்டி
பெருமையுடன் எருமையாய்
பரிமானம் கண்டது இன்னொருக் கூட்டம்

புலிக்கு பிறந்தது எப்படி பசுவாகும் ?
தமிழனுக்குப் பிறந்தவன் தமிழன் தானே ?
பெருமைப் பட வேண்டிய அடையாலம்
அதை ஏன் மறைக்க வேண்டும் ?

நெஞ்சுப் பொருக்கு தில்லையே
சில நிலை கெட்ட மனிதரை
நினைத்திவிட்டால்

இல்லாததை நினைத்து

போதையிளே ஊரிக்கொண்டு
பெண்ணை என்னி வாடிக்கொண்டு
செல்வம் தேடி ஓடிக்கொண்டு
பேர் புகழ் நாடிக்கொண்டு
கற்பனையில் மிதந்துக்கொண்டு
கேடு கெட்டு நாறிக்கொண்டு

எதிர்காலம் தேடி
நிகழ் காலம் துளைத்தேன்
கனவைத் நாடி
நினைவை துறந்தேன்
இல்லாததை நினைத்து
இருப்பதை மறந்தேன்

கணவு களைந்து
கண் விழித்துப் பார்க்கும் பொழுது
எல்லாம் முடிந்து விட்டது

வாழ்க்கைப் பயணம்

நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவில்லை

இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை

என்ன கொடுமை சார் இது
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
ஒன்னும் தெரியாமலயே
பயணிக்கிறேன் ........

கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை

தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது......

எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

இன்று ஞாயிற்றுக் கிழமை
அன்னையர் தினம்
கொண்டாட்டத்துக்குறிய நாள்
அன்னையிடம் ஆசி பெற்று
அவளுக்கு பரிசு தந்து

இன்று முழுவதும் அவளுடன்
இருக்க வேண்டும் !
பத்து மாதம் சுமந்து
பெற்று , பாதுகாத்து , வளர்த்து
இந்த சமுதாய சாக்கடையில்
நீந்த கற்று தந்தவள்
அல்லவா தாய் !

ஒவ்வொரு குழந்தைக்கும்
அதன் தாய் தெய்வம்- அல்லவா
தாய் இல்லாமல் நாம் இல்லை
தாயை சிறந்த கோவிலும்மில்லை
உண்மைத் தானே ?


அன்னையர் தினத்துக்கு
பரிசு தர வேண்டாமா ?
பரிசுடன் புறப்பட்டேன்
என்னை பெற்றதுக்கு - இலஞ்சம்


பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது
சென்ற ஆண்டு
அன்னையர் தினத்தில் பார்த்தது
ஆவலுடன் , பாசத்துடன்
புறப்பட்டேன் !

அன்னையைக் காண

என் அன்னை வாழும்
முதியோர் இல்லத்துக்கு !
நல்ல வேளை இன்று
ஞாயிறு விடுமுறை !
இல்லையேல் அடுத்த
ஆண்டு வரைக் காத்திருக்க
வேண்டும்!

அடுத்த அன்னையர் தினத்திற்கு !
அன்னையர் தினம் என்று
இல்லை என்றால்
பலர் தன் தாய்மாரை
மறந்திருப்பர் .........

நீ என் எதிரியா ?

எதிரி என்பவன் யார் ?
நிம்மதி கெடுப்பவன்
சந்தோசம் பறிப்பவன்- தானே எதிரி

அப்படியானால் - பெண்ணே


நீ என் எதிரியா ?

கவிதை எழுதுவதை விட்டு விட்டேன்

கவிதை எழுதுவதை
விட்டு விட்டேன்
இன்று முதல்
நீ இருக்கையில்
கவிதை எதற்கு

போர் ஆரம்பம்

போர் வாளைவிட
கூறிய ஆயுதம் ஒன்று தேவை
போராட ! போர்ப்புரிய !
தேடினேன் ! கண்டுக்கொண்டேன் !

ஆயுதம் ஏந்திப்
போராடக் கற்றுக்கொண்டேன்
போராட்டம் தொடங்கி விட்டது
நானும் போராளிதான் !

வாளினும் கூறிய
பேனா ஏந்துகிறேன்
வெற்றி எனக்குத்தான் !

பேனா !

இறுதி சொட்டு வரைப்
போராடும் போர் வீரன்
பேனா !

---------------------


மானிடத்தின் வழர்ச்சியும்
மாமனிதன் புரட்சியும்
பேனா மையிலிருந்தே
தொடங்குகிறது

Post a Comment (0)
Previous Post Next Post