எதற்காக எந்த துடிப்பு
துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்
ஆனால் நின்று விட்டால் !
அனைவரும் துடிப்பார்கள் ....
எதற்காக எந்த துடிப்பு ?
புரியாத நட்பு
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை
நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விடதோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது
விழுவதே முக்கியம்
இரவெல்லாம் விடியாமல் நீண்டுகொண்டே இருக்கிறது
நாளை உன்னை பார்க்கத் துடிக்கும் என் மனதின்
வேதனை அறியாமல் !
விடிவது முக்கியம் அல்ல உன் விழிகளில் விழுவதே முக்கியம்
நட்பு என்பது
நட்பு என்பது சூரியன் போல் எல்லா நாளும் பூரணமாய் இருக்கும் !
நட்பு என்பது கடல் அலை போல் என்றும் ஓயாமல் அலைந்து வரும் !
நட்பு என்பது அக்னி போல் எல்லா மாசுகளையும் அழித்துவிடும் !
நட்பு என்பது தண்ணீர் போல் எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் !
நட்பு என்பது நிலம் போல் எல்லாவற்றையும் தாங்கி கொள்ளும் !
நட்பு என்பது காற்றைப் போல் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் !
ஏக்கம்..(கவிதை).
பெட்டைக் குயிலோசைக்கு
எசபாட்டாய் ஒற்றைக் குயிலோசை
மரங்களெல்லாம் தாண்டி
மனம் மாற்றிக் கொண்டன..
ஏனோ இப்போதெல்லாம்
ஒற்றைக் குயிலின்
உரத்த ஓசையில்
மற்றக் குயில் அடங்கியே போகிறது
எப்போதேனும்
சேர்ந்து கூவிடினும்
சுருதி ஏனோ
பேதமாகவே ஒலிக்கிறது!
என் தனிமை
உன் நினைவுகளுடனான என் தனிமை
சந்தோஷமாயிருக்கிறது
உன் நினைவுகளுடனான என் தனிமையே
துடிக்கவைக்கிறது
எவன் சொன்னது?
தொடுவது உணர்ச்சியென்று
எவன் சொன்னது?
உன் முதல் முத்த நினைவை
எப்படி என்னால் உணர முடிகிறது?
பிரிந்திருக்கும் நினைவுகள்
பிரிந்திருக்கும் நினைவுகள்
நோவாகிறது
சேர்ந்திருக்கும் நினைவுகள்
மருந்தாகிறது
பிரிந்திருக்கும் நேரம் அதிகமென்பதால்
மருந்தாகவேனும் என்னோடிருப்பாயா?
காத்திருக்கிறேன் உனக்காய்
காதலே ரோகமாய்
காதலே சிகிச்சையாய்
காதலே மூச்சாய்
காதலே பேச்சாய்
காதலே பசியாய்
காதலே உணவாய்
காதலே எல்லாமுமாய்
காதலோடும் கண்ணீரோடும்
காத்திருக்கிறேன் உனக்காய்..
சொன்னால் கேட்கிறாயா நீ
சொன்னால் கேட்கிறாயா நீ
ரோஜாச் செடி அருகில் போகாதேயென்று!
இப்போது பார்! உன் உதட்டோடும்
கன்னத்தோடும் போட்டியிட்டு
இரண்டுமாய் குழம்புகிறது!
நீயும் நானும்
நீயும் நானும் ஒரே ஐஸ்கிரீம் தானே வாங்கினோம்
என்னுடையது பாறையாயிருக்க
உன்னைப் பார்த்ததும் உன் ஐஸ்கிரீம்
எப்படி உருகி தளர்ந்திருக்கிறது பார்!
திடீரென மழை பெய்யாதாவென!
உன்னோடு வெளியில் செல்லும் போதெல்லாம்
மனம் வேண்டும்..
திடீரென மழை பெய்யாதாவென!
சட்டென்று முந்தானை போர்த்து
அணைத்துச் செல்வாய் அல்லவா
யார் பார்த்தாலும் கவலையின்றி...
மனிதர்களா?
உச்சி வெயில் போதில்
உருகும் தார்ச் சாலையில்
உருட்டித் தள்ளி
என் காலுக்கு லாடம்..
ஓரமாய் மர நிழலில்
ஊசியால் குத்துப் படும்
என் தாத்தனின் தோல்
என் எஜமானனுக்கு செருப்பு..
செத்தும் கொடுத்தான்
எனப் பார் புகழ
நாங்களென்ன
மனிதர்களா?
மையெழுத்து!
எல்லோரும் கண்ணுக்கு
மைதான் எழுதுகிறார்கள்
நீ மட்டும் எப்படி
மையல் எழுதுகிறாய்?
மையலெழுதிய கண்ணில் ஏனோ
பொய்யுமெழுதிப் போகிறாயடி
என்னைக் காணாதது போல்!
குழந்தையானோம்!
உன் மடியில் நானும்
என் மடியில் நீயும்
உறங்கும் கணங்களில்
குழந்தையாகி
குழந்தையாக்கும்
விந்தையெங்கு கற்றாயடி செல்லம்?
உயிர்-மெய்!
உன் பெயரில் எல்லாம்
உயிரெழுத்துக்கள்
அதை உச்சரித்தே உயிர் வாழ்கிறேன்
என் பெயரில் எல்லாம்
மெய்யெழுத்துக்கள்
சொல்லிப் பாரென் காதலைச் சொல்லும்
இலக்கணம் பேசாதே என்னவளே
காதல் என்று இலக்கணத்துக்கு கட்டுப்பட்டது?
தவம்!
மோட்சம் வேண்டி
மோனத் தவமிருந்த
முனிவனைக் கடந்து போனாயா நீ?
உன் வாசம் தந்த தெளிவில்
காதலே மோட்சத்துக்கு வழியென
கதறித் தவிக்கிறான் பார்!
என்னவள்!
யுக யுகமாய்
உன்னைக் காதலித்திருக்கிறேன் போலும்..
அதனால்தான் உன்னைக் கண்ட நொடியில்
யாரிவள் எனக்கேட்காமல்
உன்னவள் என்றதென் மனது!
மறக்க வேண்டும் உன்னை
உன்னை மறக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து…
என் நினைவுகளில் ஒட்டி கொண்ட உன்னை
இப்பொழுது எல்லாம் உன்னை மறக்க
வேண்டுமென்று நினைக்க
மறக்கடிக்கிறது ஒட்டிக்கொண்ட…… உன் நினைவுகள்.
காண வந்த நிலவே
இரவில் வந்த உறவே ..
என்னை காண வந்த நிலவே...
என்னைக் கண்ட பின்னும்
இன்னும் தொலைவில் இருப்பது ஏன்..
நான் வாழ்வது உன் வெளிச்சத்தில் தான்..
நானும் தேய்கின்றேன் உன்னைப் போல் ...
என்றும் உன் நினைவுகள் தொடர்வதால்...