ஆசை - அன்பு - என்ன பொருத்தம்

ஆசை

நி தண்ணீர்
எடுக்கும் தண்ணீர்
குடமாக நான் மாறி
உன் கொடி இடையில் அமர

உன்
சேலை முந்தானையாய்
நான் மாறி உன்
சிறு இடையில் அமர

உன் குழ்ந்தையாய்
நான் மாறி உன்
கரு இடையில் அமர.

அன்பு

அன்பு இல்லாமல் பேசும்
ஆயிரம் வார்த்தைகளை விட
உரிமையோடு திட்டும்
ஒரு வார்த்தையில் இருப்பது தான்
உண்மையான அன்பு

என்ன பொருத்தம்

ஆஹா என்ன பொருத்தம்
ஊர் மக்களே வியந்தனர்
நீயும் - நானும் ஒன்றாக
சாலையில் நடந்த போது ....
விதி மாற்றியது
ஜாதகம் சரியில்லை என்று ....

காதல் பிரிவு

காதலுக்கு கண் இல்லையாம்
யார் சொன்னது
கண் இருந்தும் காதல் இல்லையே எனக்கு

புவியீர்ப்பு விசையை
கண்டு பிடித்து விட்டார்கள் - ஆனால்
உனது விழி ஈர்ப்பு விசையை ...

என் காதல் புத்தகத்திற்கு
முகவுரைதானே எழுத சொன்னேன்
முடிவுரை ஏன் எழுதினாய் ....

நீ பிரிந்தற்காக வருந்தவில்லை
புரிந்து கொள்ளாமல் சென்றுவிட்டாய்
என்பதுதானே என் வருத்தம்.

பிரிவு என்பது
மறக்க முடியாத சோகம்
கண்ணீரால் நடத்தப்படுகிற யாகம்.

காலம்

பெண்ணே - உன்
கண்ணீரை ஏன்
தலையணைக்கு தடவி கொடுக்கிறாய்
தரணிக்கு தெரியப்படுத்து
காலம் பதில் சொல்லும் - நீ
கற்புள்ள கண்ணகி என்று ....

உயிர்ப்பு

கண்ணில் மணிபோல
நெஞ்சில் உனைவைத்து
உள்ளம் தனை எரித்து வாடிய
பூ இது
போதையேனும் நீறூற்றி மீண்டும்
உயிர்த்தது......

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு
பட்டாம்பூச்சி மாதிரி.......
லேசா பிடிச்சா
பறந்து விடும்!
இறுக்கி பிடிச்சா
இறந்து விடும்............

எப்படி சொன்னாய்

தோழி நலம் விசாரித்த போது
நலமாய் இருக்கிறேன் என்று
எப்படி சொன்னாய் - என்னை
நீ பிரிந்து சென்ற பின்பும் கூட....

அன்றும் இன்றும்

அன்று நீ ஏற்றி வைத்த
காதல் அகல் விளக்கு
இன்றும் எரிகிறது - என்
வாழ்க்கையில் கண்ணீராய்....

உண்மை

கரை மீது ஆசை கூண்ட மீனுக்கும்,
பெனின் ஆசை கூண்ட ஆணுக்கும் ,
முடிவு ஒன்று தான் அது ,
மரணம் ....!


தாய் பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....

தாயின் மடியும் ஒரு காலம்
பிள்ளை பருவம் ஒரு காலம்
படிப்பின் நேரமும் ஒரு காலம்
விளையாட்டு பருவம் ஒரு காலம்
காதலின் நேரமும் ஒரு காலம்
மண வாழ்வும் ஒரு காலம்
கணவனின் அன்பும் ஒரு காலம்
பிள்ளையின் அன்பும் ஒரு காலம்
அனால் தாயின் காலம் மட்டு்ம் காலமில்லாத காலம்

அவள் மடி நிறையும் போது
அவள் மனம் நிறைவடைகிறாள்
உள்ளிருக்கும் ஜீவன் ஆசையும் பொழுது
அவள் அதை ரசிக்கிறாள்
அவள் கண்ணுக்கு அவள் பெற்ற பேரு
உலகமே
அது ஆறிலிருந்து அறுவதுவரையும் அவள் செல்வமே
அவள் கண் கூடா பார்ப்பது அவள் பெற்ற செல்வம் ஒன்றே
கணவனும் பின் வாங்குகிறான் இந்த உறவில்

அறுசுவை ஊட்டி ரசிக்கிறாள் அந்த நிறைவை
அழுகுரல் கேட்டு ஓடி வருகிறாள் அரவணைக்க
உன்னால் முடியாதடி என் அம்மவைபோல என்ற பட்டம் அவளுக்கே சொந்தம்
வீரனையும் மடியவைக்கும் உறவிது
ஏழைக்கும் பணக்காரனுக்கும் வித்யாசம் இல்லாத உறவிது

தாலாட்டு என்றும் மாறாது
அவள் உலகத்தில் யுகம் என்பதில்லை
பிள்ளையின் ஊனம் அவள் அறியாள்
எது வாகிலும் அவள் சுமப்பாள்

தாய் பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....

இதயக்கண்ணாடி!!!

அன்றாடம் ஆயிரமாயிரம் முகங்களை என் விழிகள் பார்த்தாலும்
எப்பொழுதும் பிரதிபலிப்பது
என்றோ பதிவு செய்த உன் முகத்தைத்தான்.

காதல் காலாவதி!


என் முகம் நீ பார்த்ததில்லையே என்றேன்
உன் அகம் பார்த்திறுக்கின்றேனே என்றாய்.

என் குரல் நீ கேட்டதில்லையே என்றேன்.
உன் குணம் தெரிந்திருக்கின்றேனே என்றாய்.

என் நிறம் நீ அறிந்ததில்லையே என்றேன்
உன் நினைவிலேயே அலைகிறேனே என்றாய்.


இருதியாய்

என் விருப்பத்தை நீ விரும்பவில்லையா என்றாய்
உன் செவி சேர்ந்திட மௌனமே கொண்டுள்ளேன் என்றேன்.

ஆனால்

இம்மௌனம் சம்மதம் சொல்வதற்கில்லை!
உன் காதல் பயணத்தை முடித்திடவே!

chinnaiyan.yes.yem

தணல்.....

வற்றிய வயிறோடு
வறண்ட நெஞ்சோடு ...
வயக்காட்டை
பிளந்துப்போட்ட
விவசாயக்காதலனிடம்
தாகம் தீர்த்துக்கொண்டது
உச்சி சூரியன் !
அன்புடன் எஸ்.எம்.சின்னையன்
.கும்பகோனம்

une payer than karanam

une payer solla uthaviyathalthan

yen uthadukalukkum unavalikiran

சில மணி நேரங்கள்

நீ என்னுடன் பேசிக்கொண்டிருந்த சில மணி நேரங்கள் வினாடியாய் கழிந்தது!

உனக்காக காத்திருக்கும் சில வருடங்கள் வினாடியாய் தெரிகிறது.

வாக்குமூலம்

எனக்கான உன் தருணங்கள்....

காற்றுக்குக் கூட இடம் தராமல்
நீ இறுக்கி அணைக்கும் விநாடிகள்...

"மாலை சந்திப்போம்" என்று
பேசும் உன் காலை நேரக் கண்களின்
மெல்லிய சோகம்....

உதடுகள் காதுமடல் உரச
ரகசியமாய்
நீ சொல்லும் ஐ லவ் யு க்"கள்.."

எனக்காகவே நீ படிக்கும்
தபூ ஷங்கர் புத்தகங்கள்....

ஒவ்வொரு இரவிலும்
நீ வைக்கும்
செல்லப்பெயர்கள்....

மின் அரட்டைகளின்
Status Messageஇல்
எனக்காக நீ வைக்கும்
நீ வைக்கும் காதல் வரிகள்....

தினமும் மாலையில்
முதன் முதல் சந்திப்பது போல்
என்னைப் பருகும்
உன் கண்களின் பார்வை...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்படி நான் சுமாராக எழுதுவதையும்
படித்து சுவையோடு நீ சொல்லும் பாராட்டுக்கள்...
.
முடிவில்லாமல் நீள்கிறது
எனக்கான உன் தருணங்கள்....

குட் நைட்

நீ விழித்திருப்பாய் என்ற நம்பிக்கையில்

நான் நிம்மதியாக உறங்கப் போகிறேன்
இதயத்தைப் பார்த்து இமைகள் சொன்னது
குட் நைட்

தேடி சோறு நிதம் தின்று

தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் — என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் — இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து — மதி
தன்னை மிகத்தெளிவு செய்து — என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

நட்பு ஒரு சுமையல்ல

அம்மா வயிற்றில் சுமந்தால் !
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பன் உன்னை சுமக்கவில்லை ஏனெனில்
நட்பு ஒரு சுமையல்ல ........
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது ..

Post a Comment (0)
Previous Post Next Post