முயற்சி
மூச்சு விட்டு கொண்டிருப்பவன் எல்லாம்
மனிதன் இல்லை. அந்த
மூச்சிருக்கும் வரைமுயற்சி செய்து
கொண்டிருப்பவனே மனிதன்.......
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்ப்பதில்லை....
தன்மேல் நம்பிக்கை
இல்லாத மனிதன்
ஜெயப்பதே இல்லை......
காதலர் தினம்
பூக்களுக்கு அன்று அமோக விற்பனை தான்!
உன் தலையில் பூச்சூடவா? இல்லை...
உன் பாதங்களில் கசங்கிடவா?
இல்லை...இல்லை...
என் கல்லறையை அலங்கரிக்க...!
காலமெல்லாம் காத்திருப்பேன்...
கல்லறையிலும் உயிர்த்திருப்பேன் ...
கருப்பை கொடியின் உறவை விட
காதலியின் தாவணி தான் தன்னை சுமப்பதாய் ....
அப்பப்பா....கனவுகளில்
பறந்த இப்பட்டாம் பூச்சிகள்
சிறகிழந்து சீர்குலைந்து ....!
இதற்காக தானா
இத்தனை தவம்?
காதலர் தினம்
வரம் தரவில்லை....!
தரம் கெட்டு தெருவில்
தருதலையாய்
தலை விரித்தாடுகிறது....!
டேட்டிங்கும் டேன்சிங்கும்
"செல்"லரித்த எஸ் எம் எஸ்களும்
நவ நாகரித்தனிடையே நசுக்கிவிட்டது...
காதலின் புனிதத்தையும்....
காதலர் தினத்தின் புரிதலையும்....!
உயிராய் உறைந்த நேசத்தை
உன்னவனு(ளு)க்கென
பரிமாறிக்கொள்.....
நீ இழந்த....இறந்த....இரந்த....
உயிரும்....உணர்வும்...உறவும்...
உன்னருகே ....இந்நாளில்....காதலர் தினத்தில்...!
கனவுகள்
கண்களை மூடினால் தான்
கனவுகள் பிறக்கும்
கண்களை திறந்தர்ல்தான்
கனவுகள் பழிக்கும்........
புன்னகை
கண்ணீர் சிந்தும் கண்களை விட
அதை மறைத்து புன்னகை
புன்னகை சிந்தும் இதழ்களுக்கே
வலி அதிகம் .............
நேசம்
நீ நேசிக்கும் ஒன்று உன்னை விட்டு
பிரிந்தாலும் ,உன் நேசம் நிஜமானால்
அது உன்னை மீண்டும் தேடி வரும் .........
கசப்பை நேசி
கசப்பான அனுபவங்கள்
இல்லை என்றால் .......................
இனிப்பான வாழ்க்கையை
நாம் உணர முடியாது.......
எனவே கசப்பை நேசி .....
சுவையான இன்பங்கள்
உன்னை நேசிக்கும் ....
இமைகள்
சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது !
சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விட வும் முடியாது !
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இறுதிநாள் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர் ..
கோயம்பத்தூர் பெருமை
கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு
இந்நகரைக் "கோவை" என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்!
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!
வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்! தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்! இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி! அதனைக் கேட்டு
முன்னவனே நாடாள வேண்டு மென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்!
தனியாகச் சாத்தனுடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று!
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!
நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!
அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு,
குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன்.
----கவிஞர் கண்ணதாசன்
நட்பு
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
மௌனம்
என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மௌனம் போதும்…
வட்டம்
இரவு போனதும்
நிலவும் போனது
பிரிவு போனதும்
நினைவும் போனது
நிலவு போனதும்
வானம் இருண்டது
நினைவு போனதும்
வாழ்க்கை இருண்டது
வானம் இருண்டதும்
இருள் சூழ்ந்தது
வாழ்க்கை இருந்ததும்
உன் புன்னகை சூழ்ந்தது
இருள் சூழ்ந்ததும்
உலகம் ஓய்ந்தது
புன்னகை சூழ்ந்ததும்
மனம் ஓய்ந்தது
உலகம் ஓய்ந்ததும்
இரவு போனது
மனம் ஓய்ந்ததும்
பிரிவும் போனது
போர்
என்னக்குள்ளே போர்
வெற்றியும் இல்லை
தோல்வியும் இல்லை
ஆனால், இறுதியில்
மடிந்து மண்ணாவது நான்.
தலைப்பில்லை, எனக்கு தலைபாயுமில்லை
சமுதாய கிருமிகளும்
மத வெறி நாய்களும்
பொய் பிசாசுகளும்
பித்தலாட்ட குள்ள நரிகளும்
உயிர் உறிஞ்சும் ஒநாய்களும்
பிணம் தீனி கழுகுகளும்
வாழும் அரசியல் சாக்கடையை
பயம் என்னும் கருவி கொண்டு
தூர் வார கிளம்புங்கள்
இவர்களையும் மக்களை சேவிககும்
நன்றயுள்ள நாயகளாக்குவோம்
இல்லாததை நினைத்து
போதையிளே ஊரிக்கொண்டு
பெண்ணை என்னி வாடிக்கொண்டு
செல்வம் தேடி ஓடிக்கொண்டு
பேர் புகழ் நாடிக்கொண்டு
கற்பனையில் மிதந்துக்கொண்டு
கேடு கெட்டு நாறிக்கொண்டு
எதிர்காலம் தேடி
நிகழ் காலம் துளைத்தேன்
கனவைத் நாடி
நினைவை துறந்தேன்
இல்லாததை நினைத்து
இருப்பதை மறந்தேன்
கணவு களைந்து
கண் விழித்துப் பார்க்கும் பொழுது
எல்லாம் முடிந்து விட்டது
வாழ்க்கைப் பயணம்
நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவில்லை
இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை
என்ன கொடுமை சார் இது
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
ஒன்னும் தெரியாமலயே
பயணிக்கிறேன் ........
கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை
தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது......
எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......
உன் பெயர்
இரவில் உறங்கும் முன்
உன் பெயரை ஒரு முறை சொல்லிவிட்டு தான் உறங்குகிறேன்.
உறங்கியவன் உறங்கியே விட்டால்
கடைசியாய் உச்சரிதது உன் பெயர் ஆக வேண்டும் என்று.
தமிழ்க்கிருக்கன்
குற்றவாளி
உன் தந்தை ஒரு குற்றவாளி!
ஆம்... புதயல் கிட்டியதை அரசுக்கு தெரிவிகாமல் மறைத்து விட்டார், நீ பிறந்த போது.
-தமிழ்க்கிருக்கன்
கூண்டில் கிளிகள்
கணினி மூலம் கருத்து பரிமாற்றம்,
செல்ஃபோன் வழியே சண்டை சச்சரவுகள்,
சாட் ரூமில் நலம் விசாரிக்கும் சுற்றமும் நட்பும்.
என்றோ வந்தமரும் குருவிக்காக காத்திருக்கும்
ஒற்றை பனைமரம் போல்,
எப்போதோ வருகின்ற விடுமுறைக்காக
தனிமையில் காத்திருக்கும் உறவுகள்.
கடற்கரையில் நமக்காக காத்திருக்கும் உறவுகளை துறந்து
ஒடி கொன்டிருக்கிறோம் அகப்படாத நண்டுகளின் பின்னால்.
நம் மனதில் சூட பூத்திருக்கும் காதல், கருணை, பாசம் எனும் மலர்களை பார்க்காமலே,
காசெனும் காகித பூவில் கண் மயங்கி கிடக்கின்றோம்.
வாழ்வின் செல்வங்களை செம்மை படுத்த யெத்தனித்து,
வாழ்வதையே மறந்து தான் போய் விட்டோம்.
அன்னை திருநாட்டில் கிட்டாத பொகிஷமோ,
அரபு நாடில் தேடுகிறோம்?
நெல் தீர்ந்து போகும், வேலைகள் தீராது,
கூண்டில் கிளியாய் நாம்!!
______________________
வேலைக்காக குடும்பத்தை விட்டு விட்டு ஆரபு நாடுகளில் பணி புரியும் லட்சக்கணக்கான இந்திய நண்பர்களுக்கு சமர்ப்பணம்
-தமிழ்க்கிருக்கன்.
என் தோட்டத்தில்
நீ பறிப்பதற்காக நான் வளர்த்த
என் ரோஜா தோட்டத்தில்
யார் யாரோ வந்து போகிறார்கள் பூக்களுக்காக
ஆனால் நீ வராமல் போனதால்
பூக்கள் பொலிவிழந்து காணப்படுகிறது ....