காதல் கடிதங்கள் - கடவுள் நாத்திகன் - நிலவுக்காதல்

காதல் கடிதங்கள்

நிலவுக்கு வந்த
கோடி காதல் கடிதங்கள்
நட்சத்திரம்!

கடவுள் நாத்திகன்

கடவுள் கூட நாத்திகன் தான்
தன் சிலையை
காப்பாற்றாமல் இருக்கும் போது !

நிலவுக்காதல்

நிலவென்று சொல்லி காதலித்தான்
தேய்பிறை போல் என்னை கழட்டிவிட்டான்...

கண்ணடிக்கிறது உன் விழிகள்

இப்படி பேசி, எழுதியே என்னை

ஈர்க்காதே என்று கண்டிக்கிறாய் நீ,

உனக்கு தெரியாமல்......

உன் விழிகள் கண்ணடிக்கிறது என்னை

ஒரு முறை சாய்ந்து கொள்ள

உன் நினைவலைகள் வேகமாக மோதிக் கொண்டிருக்கின்றன.......

மலையாக இருந்தால் சாய்ந்திருக்கும்....
என் உள்ளம்......உன் காதல் மட்டும் இருப்பதால்........
உன் தோள் தேடுகிறது, ஒரு முறை சாய்ந்து கொள்ள.........

காதல் இல்லை

மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை.
காதல்

காதலில் தோற்ப்பது

காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.

கல்பனா சாவ்லா

மறைந்த உடல்
மறையாத புகழ்
கல்பனா சாவ்லா

அழகு

ஒரு பெண் அழகாக இருப்பதால் அவளை நீ நேசிக்கவில்லை .
நீ நேசிப்பதால் தான் அவள் அழகாக தெரிகிறாள்

இதயம்

இதயத்தை இரும்பாக தான் வைத்து இருந்தேன் …
யாருக்கு தெரியும் அவள் காந்தமாக இருப்பால் என்று ...!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

விழிநீரில் தெரித்த ஓவியமே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என் மனதில் படர்ந்த பனித்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

மௌனம் விளிக்கின்ற மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என் இரவுகள் இமைகண்ட முழுநிலவே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இமையின் கருவினில் தான் பிறந்து
என் இதயத்தின் துடிப்பில் நீ கலந்தாய்....!

உன் நிழலின் பிம்பம் உரசுகையில்
என் நினைவினில் உன்னை நீ அறிவாய் !

உன்னில் என்னை நானறிய
உன் உயிரில் உறைவதை நீ உணர்வாய் !

உன்னை உணரும் போதினிலே
என் வெட்கம் விடுதலை செய்திடுவாய் !

உணர்வின் ஈரம் உதிரத்திலே
நாணும் பெண்ணே நீ அறிவாய் !

மண் - இயற்க்கை

விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை...

வேண்டும்

தனிமை வேண்டும் - அதில்
இனிமை வேண்டும்

ஆற்றல் வேண்டும் - யாருமதை
போற்றல் வேண்டும்

நேர்மை வேண்டும் - எப்போதும்
உண்மை பேசவேண்டும்

கனிவு வேண்டும் - என்றும்
பரிவு யாரிடத்திலும் வேண்டும்

ஏற்றமிகு எண்ணம் வேண்டும் - அதை
எப்போதும் காத்தல் வேண்டும்

பெருங்கனவொன்று வேண்டும் - அதுவும்
பொய்க்காது நடவவேண்டும்

மனையாளொருத்தி வேண்டும் - என்றும்
அவளிடமே காமம்வேண்டும்

நண்பனொருவன் வேண்டும் - அவன்மேல்
நம்பிக்கை எப்போதும் வேண்டும்

பகைவன் வேண்டும் - அவன்
தீயஎண்ணங்களாக இருக்கவேண்டும்

இறைவனை புரிய வேண்டும் - அவன்
ஒருவனே என்றுலகறிய வேண்டும்

நல்லோரை எல்லோரும் காணவேண்டும் - நாம்
இல்லாரை எந்நாளும் உயர்த்தவேண்டும்

எம்மொழியும் செம்மொழியாக வேண்டும் - அதில்
நம்செந்தமிழே உயர்ந்ததென போற்றவேண்டும்

மொழிப்பற்று நாட்டுப்பற்று இருக்கவேண்டும் - அனால்
இனவெறியை மதவெறியை அறுக்கவேண்டும்

யாரும் தான்யாரென்றறிய வேண்டும் - யாரும்
மனிதன்தானென்று எல்லோருக்கும் புரியவேண்டும்..!

உன்மத்தன்..!

அவள்,
கரு விழியாள்
பெரு விழியால்

ஒரு வழி இல் - நம்
உயிர் வலியில்

இவன்,
பெண் விழியால்
பெரும் பழியால்

விதி வசத்தால்
மது ரசதால்

மதி இழப்பால்
மனக் கசப்பால்
பவுசு கெடுப்பார்..!

நம் நாடு ..!

நானும் நீயும் சேர்ந்துதான் நாடு - இதில்
நான் நீ என்ற பிரிவினைகள் ஏது
அப்பனும் ஆத்தாளும் சேர்ந்துதான் வீடு - அதில்
பிரிவு வந்தா நாரிபோகும் பிள்ளைகள் பாடு


மேலை நாட்ட பாத்து - நம்
நாட்ட குத்தம் சொல்லுறவன் பிள்ள
அடுக்குமாடி வீட்ட பாத்து - நம்ம
வீட்டு மேல எச்சில் துப்புறது இல்ல


விஷயம் நல்லதுன்னா ஒத்துக்கணும் - அது
விஷமமா இருந்தா ஒதிக்கிடனும்
இக்கரைக்கு அக்கரை பச்சைதான் - அதுவெல்லாம்
நம்ம நாட்டுக்கு மிச்சம்தான்

திருத்தம்..!

வாழ்ற வாழ்கை
கொஞ்ச காலம்தான்,
அதில் வருத்தம் இல்லாம
வாழ்ந்து போகத்தான்
அவனவன் அடுத்தடுத்து
தப்பு செய்யுறன் - நல்லது
செய்ய விருப்பமில்லாம
பழகி போய்டான்..

வாழ்கைல அங்கங்க
வருந்தியாகணும்
அப்பப்ப திருந்தியாகணும்
வருத்தம் வந்தா கொஞ்சநேரம்தான்
அதுவே வடுவா மாறிட்டா
நீ கொஞ்ச காலம்தான்..

படிச்சு முடிச்ச உடனே
வேல பாத்து வெச்ச
பணத்த சம்பாதிச்சு சேத்துவெச்ச
உயிர் கொடுத்தவளுக்கு செஞ்சுபுட்ட
உன் நாட்டுக்கு நீ என்ன செஞ்ச

நாட்டு மேல குத்தம் சொல்லாதே - அதில்
நீயும் ஒருத்தன் மறந்துவிடாதே
தப்பு செஞ்சா திருந்தி விடு - இங்கே
தப்பு நடந்தா திருத்தி விடு..!

துருவங்கள்..!

இரவும் பகலும்
நீரும் நெருப்பும்

வடக்கும் தெற்கும்
வானும் மண்ணும்

நன்மையும் தீமையும்
நாமமும் பட்டையும்

மதமும் மனிதமும்
சாதியும் சமத்துவமும்

எதிர் துருவங்களே - எப்போதும்
இவைகள் இணைவதில்லை

சந்திப்பதில்லை உனை

இனி சந்திப்பதில்லை உனை என்றாய்
பொய்யாய் எடுத்துக்கொண்டேன் அதை
உண்மை என்று சிந்தித்து உயிர் விடவெல்லாம்
தயாரில்லை நான்
உயிர் வாழ வேண்டும் உனக்காக


எவர் சொன்னது தென்றல் மென்மையானது என்று
நீ உரசி நொறுங்கி போன கொடுமையை
அனுபவித்தவன் நானன்றோ

துன்பம்

எனக்கு ஒரு துன்பம் என்றால் தோழி இடம் சொல்வேன்...
தோழியே ஒரு துன்பம் என்றால் யாரிடம் சொல்வேன்!!!!.....




கண்கள்

தண்ணீரில் தான் மீன்கள் துள்ளி
விளையாடும்.........

முதன் முறையாக மீன்களில்
தண்ணீர் துள்ளி விளையாடுவதை
காண்கிறேன் அவள் அழுகும்போது.......

Post a Comment (0)
Previous Post Next Post