உறவுகள்
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால் உணர முடிகிறதோ
அவர்கள்தான்.,
உனக்காக படைக்கப்பட்ட
உண்மையான உறவுகள்...
விதை வை - விதவை
பூ வளர்க்க ஆசைப்பட்டேன்
விதை வை என்றார்கள்
பூ வைக்க ஆசைப்பட்டேன்
விதவை என்றார்கள்
இதுதான் உலகம்
வெற்றுத்தாள்
மை காய்ந்த பழைய பேனா
டிராயரின் அடியில் கிடந்தது
நொடியில் தோன்றிய கவிதை ஒன்றை
மறப்பதற்குள்ளாக எழுத முனைந்து
கிறுக்கிப் பார்த்தும் எழுதவில்லை
குலுக்கிய விசையில் தெறித்த துளிகளில்
ஒளிந்துகொண்டிருக்கிறது என் கவிதை.
குழந்தை
கடவுளே வந்து குப்பிட்டலும்
குழந்தைகள் திரும்பி பார்க்காது
பட்டாம்புச்சி பிடிக்கும் போது
அத்தான் என் அத்தான் Song
அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி
அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படிச் சொல்வேனடி
அவர் கையைத் தான்
கொண்டு மெல்லாத் தான்
வந்து கண்ணைத் தான்
எப்படி சொல்வேனடி..
அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி
ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித் தான்
ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித் தான்
சென்ற பெண்ணைத் தான் கண்டு துடித்தான்
அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான் ....
எப்படி சொல்வேனடி
மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
முத்துத் தான் உடல் பட்டுத் தான்
மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
முத்துத் தான் உடல் பட்டுத் தான்
என்று தொட்டுத் தான்
கையில் இணைத்தான் வளைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான் ....
எப்படி சொல்வேனடி
அவர் கையைத் தான்
கொண்டு மெல்லாத் தான்
வந்து கண்ணைத் தான்
எப்படி சொல்வேனடி..
அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான் ....
எப்படி சொல்வேனடி
தாய் இல்லாமல் நான் இல்லை
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)
(தாய் இல்லாமல் நான் இல்லை)
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
(தாய் இல்லாமல் நான் இல்லை)
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
: MGR
காதல் கவிதை
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.
வாலிபனின் கவிதை
அப்பா அடிச்சா வலிக்கும்,
அம்மா அடிச்சா வலிக்கும்,
அசிரியர் அடிச்ச வலிக்கும்,
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது!!!
உன்னைப் பற்றிய நினைவுகள்
உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால்
பூக்கள் இதழ் விரிக்காமலே இருந்திருக்கக் கூடும்.
பிரிவோம் என நினைத்திருந்தால்
உன்னைப் பற்றிய நினைவுகள்
எனக்குள் வேர்விட்டிருக்காது
காதல் பூத்தும் இருக்காது
கொட்டியச் சிதறிய சருகுகள்
மக்கிச் சிதைந்து மரத்திற்கே உரமாவதுபோல
உன் சுணக்கமும்,ஒதுங்கல்களும் எனக்குள்ளே
புதைந்து என் கனவுகளுக்கு உரமிட்டு
உன் நினைவுகளை என்னுள் ஆழமாய்
வேறூன்றச் செய்கின்றன.
இந்த உலகை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
உன்னிடம் பேசும் வரை
பேசிய பிறகோ என்னையே வெறுத்துக் கொள்கிறேன்
காரணமே தெரியாமல்.
பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்
விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள்
ஏராளம்.
கவனம் தப்பாத உன் பேச்சுக்களில்
எங்கேனும் காதல் ஒளிந்திருக்குமோ
எனப் பார்த்திருப்பதும்
மட்டறுக்கப் படும் உன் வார்த்தைகளில்
எனக்கான நேசம் தூவப் பட்டிருக்குமோ எனத்
தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது
இலையுதிர் காலங்களுக்குப் பிறகு வசந்தம்
வந்துதானே ஆகவேண்டும்.
காத்திருக்கிறேன் வரும்வரை
நான் இன்னும் தனிமையில் உள்ளேன்!
என்னிடம்
எதுவும் தனியே
கிடைப்பதில்லை
உண்மை
ஒரு பொய்யோடும்
மனது
கொஞ்சம் காயங்களோடும்
காதல்
சில தோல்விகளோடும்
தனிமை
பல பிரியங்களோடும்......
ஆயினும்
நான் இன்னும்
தனிமையில் உள்ளேன்!
நேற்று, இன்று, நாளை…..
நேற்று, நீ தூரத்து வின்மீனாய்
என் கண்ணை பறித்தாய்…..
இன்று, நீ அருகிலிருக்கும் சந்திரனாய்
குளிர்ச்சி தருகிறாய்…….
நாளை, நீ என்னை ஆளும் சூரியனாவாயோ!
நீ வருவாய்…
நீ வருவாய்… எனை மீட்டெடுப்பாய்
பூமிக்குள் புதைந்துகிடக்கும்
என் கண்களை தோண்டி எடுப்பாய்
உன்மீது பதித்துக்கொள்வாய்
ஏளனமாய் பார்த்த பார்வைகளை எட்டி உதைப்பாய்
துவண்டுபோன என் கால்களை
உன் பின்னே வரவழைப்பாய்
மரத்துப்போன உடலை
உனக்காக மீண்டும் துடிக்க வைப்பாய்
பழைய நினைவுகளில் சிக்கிய மனதை
சிக்கெடுத்து சீராக்குவாய்
கடந்ததை கடத்தி நிகழ்வாய் நிகழ்வாய்
நிர்மூலமானதை நிச்சயம் செய்வாய்
இடைவெளிகளை உன் புன்னகையால் ஒட்டி
காலத்தை காலனுக்கு கொடுப்பாய்
காமத்தை காதலுக்கு பலியிடுவாய்
உன் ஆறடிக்குள் எனக்கும் ஓரிடம் நீ தருவாய்
காதல் ஆறா மனதில் ஆறாக ஓடும்!
எப்படி பிரிவேன்
எங்கும் வந்தாய், என் மனதோடு…………
எங்கும் தெரிந்தாய், என் கண்ணோடு……
எப்படி பிரிவேன், உன் நினைவோடு……..!
நீ இல்லாமல்…………!
விடை தெரியாத பல வினாக்கள் உண்டு……
முற்று பெறாத சில வரிகளும் உண்டு ………
அப்படியே இருந்து விட்டு போகிறேன் நானும், நீ இல்லாமல்…………!
நட்பென்னும் டெபாசிட்டை இழக்க எனக்கு தைரியமில்லையடா.....
உன்னுடைய மனதில் காதலி பதவிக்கு போட்டியிட்டு
என்னுடைய நட்பென்னும் டெபாசிட்டை இழக்க எனக்கு தைரியமில்லையடா.....
பிரமிடு
இது கல்லரையல்ல - 'பிரமிடு'
உள்ளே
செத்துவிட்ட ஆசைகள்
அழுகாமல் வாழ்கின்றன..
உணர்ந்தேன் நட்பை
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
எப்படி முடியும்…
எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….
உன்னால் மட்டுமே முடியும்
உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…
எப்படி மறந்தாய்
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…