ஆச்சர்யம் - ஒரே ஒரு கவலை - உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்

ஆச்சர்யம்

ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…

ஒரே ஒரு கவலை

நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?….

உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்

நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும்
சொல்
உனக்கும்
சேர்த்து நானே
காதலிக்கிறேன்….

மவுனம்

என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

உன் காதல்

எனக்கு மட்டுமல்ல
கடைசியில் உனக்கும்
கிடைக்காமலே போய்விடும்
உன் காதல்….

விரும்புகிறேன்

வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….

மறக்க மறந்துவிட்டேன்

மன்னித்து விடு
நான் உன்னை
மறக்க மறந்துவிட்டேன்….

உதவி செய்

என் வாழ்க்கை புத்தகத்தில்
உன் பெயர் எழுதிய தாள்களை
கிழித்து ஏறிய முயல்கிறேன்
இதர்காவது உதவி செய்.

போர்

என்னக்குள்ளே போர்
வெற்றியும் இல்லை
தோல்வியும் இல்லை
ஆனால், இறுதியில்
மடிந்து மண்ணாவது நான்.

பிரசவம்


உன் தாய்

நீ அழுவதைக் கண்டு சிரித்த
ஒரே ஒரு நாள்

ஆண்டவன் படிக்காத அரிச்சுவடி


மனிதனுக்கு 'மதம்' பிடித்தது..
ஆயுதங்களோடு அணி திரண்டான்!!

வெட்டரிவாள் வீச்சரிவாள்
வெடிகுண்டோடு
வீதியில் வலம் வந்தான்

அன்றைக்குப் பார்த்து அப்பாவித்தனமாக
பூமியைப் பார்வையிட வந்த
ஆண்டவன் அவர்களிடம்
அகப்பட்டுக் கொண்டான்!

'வெட்டு' என்றது ஒரு வீரக் குரல்
'விவரம் கேட்டுவிட்டு வெட்டு'
என்றது இதயம் உள்ளதோர்
ஈரக்குரல்

'எந்த மதமடா நீ?'
- கேட்டது கூட்டம்

அர்த்தங்களுக்குள் அர்த்தமாய் இருக்கும்
ஆண்டவன்
அர்த்தம் புரியாமல் விழித்தான்!!

வாழ்க்கை


இழந்ததைத் தேடுவது..
தேடும்வரை வாழ்வது..
கிடைத்தபின் பார்த்தால்
மற்றொன்றை இழந்திருப்பது..

காதல் வெல்லும்


மணப்பதால் மட்டுமல்ல
மறப்பதால் கூட
காதல்
ஜெயித்து விடுகிறது..

மனம்


பாறையில் மோதும் மேகங்கள்
நீர்த்துளியைச் சிதறி,
சூன்யத்திற்குள் பயனிக்கும்
மழைக் குடில் ஒன்றில்
சீடர்கள் மூவர்
குருவிடம் கேட்டனர்;
"கடவுளுக்கு அருகில்
செல்வது எப்படி?"

உள்ளிழுத்த காற்றை
லயமாக வழியனுப்பி
சீடர்களின் கேள்விக்கு
குரு பதில் சொன்னார்
"உங்கள் மனதின் எண்ணங்களை
ஒரு சில நொடிகள் உற்றுப் பார்த்து
தோன்றியவற்றை
எழுதிக் கொண்டு வாருங்கள்"

நொடிகள் கடந்தன..
முதல் சீடன் எழுதினான்;
"பலா மரத்திலிருந்து
உதிரும் இலைகள்..
வருத்தம் எதுவுமில்லை"

இரண்டாம் சீடன் எழுதினான்;
"கதவு திறந்த பின்
அறையின் இருட்டிடம்
வெளிச்சம் பேசும் ஓசை"

மூன்றாம் சீடன் எழுதினான்;
"குளிர், தேநீர், எதிர் வீட்டுப் பெண்,
எப்போதோ குடித்த மது, தற்கொலை,
மலைப்பாதை நாய்,
குருவுக்கு ஒற்றைக்கண்,
கூர் தீட்டாத பென்சில்."

மூன்றையும் படித்த குரு
புன்னகையுடன் சொன்னார்;
"முதலிரண்டு சீடர்களுடையது
ஒழுங்கு படுத்தப் பட்டதாய்
காட்டிக் கொள்ளும் மனம்"

'நான்' என்னும் அடையாளம்
அதில் இன்னும் அழியவில்லை!

மூன்றாம் சீடனின் மனமே
கடவுளின் பாதைக்கு ஏற்றது.

'மனம்' என்பது
பைத்திய எண்ணங்களின் தொகுப்பு!
காற்றில் மிதக்கும் தூசிகளுக்கு
திசை என்பது இல்லை..

காதலெனப்படுவது யாதெனின்


காதல் -

எதிர்பார்க்கும் அளவு கிடைக்காதது
எதிர்பார்க்கிற அளவு கொடுக்கப்படாதது.

வெறுமை


உறக்கமில்லை என்றாலும்
ஒரு கோடிக் கனவிருக்கு
இறக்கவில்லை என்றாலும்
எனக்கெங்கே உசிரிருக்கு

விதி


எதனால் என்னவாவோம்
என்பது மதி
எப்போது என்ன வருமென்பது விதி

தன்வினை தன்னைச் சுடுமென்பது மதி
எவன் வினையோ உன்னைச் சுடுவது விதி

ஊரோடு ஒத்து வாழ்தல் இயற்கையான மதி
ஊரே இயற்கையால் அழிவது விதி

பணக்காரன் ஆரோக்கியம் தேடுவது மதி
பரதேசி பூரண ஆரோக்கியனாயிருப்பது விதி

பிள்ளைப் பேரு வேண்டி விஞ்ஞானத்தை நாடுவது மதி
வேண்டாதோர்க்கு மந்தையெனப் பிறப்பது விதி

ஊரோடு வீடோடு வாழ்தல் மதி
நாடற்ற வீடற்ற நாடோடிக்கு விதி தருவதோ நிம்மதி!!

பொய் சொல்லிவிட்டாள்


நான் சொல்வதெல்லாம் உண்மை
உண்மையைத் தவிர
வேறொன்றுமில்லை

அவள் பார்த்தாள்
என்னைத்தான் பார்த்தாள்
பொய் சொல்கிறாள்
அவள் பார்த்தது
என்னை இல்லையாம்

அவள் சிரித்தாள்
என்னைப் பார்த்துத்தான் சிரித்தாள்
பொய் சொல்கிறாள்
அவள் சிரித்தது தோழியைப் பார்த்தாம்

அவள் காதலித்தாள்
சத்தியமாய்க் காதலித்தாள்
பொய் சொல்கிறாள்
அவள் காதலித்தது என்
செயல்களை மட்டுந்தானாம்

நீதிபதியே!
பொய் சொல்லிவிட்டாள்!
தண்டிக்க வேண்டும் என்னவளை
கட்டாயம்! இதோ
தண்டனைப் பட்டியல்

அவள்
கட்டாயம் வாழ்ந்தாக வேண்டும்
நூறு ஆண்டுகள்
மனம்போல் மணக்க வேண்டும்
பெற்றோர் சொன்னவனை
கண் கலங்காமல் இருக்கவேண்டும்
காலம் முடியும்வரை!!

இரு(இ)தயத் துடிப்பு


இதயம் கூட
இடைவெளி விட்டுத்தான் துடிக்கும்

அந்த இடைவெளியிலும்

என் மனம்
உன்னைத்தான் நினைக்கும்

உயிரிலே கலந்தது


என்றுமே உன்னை நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்

Post a Comment (0)
Previous Post Next Post