நிறைவு - இவ்வளவு தானா நம்பிக்கை - Kanneerai Thodarndhu

நிறைவு


நேசிப்பது எல்லாம் கிடைத்துவிட்டால்
கண்ணீருக்கு மதிப்பில்லை
கிடைப்பதையெல்லாம் நேசித்துவிட்டால்
கண்ணீருக்கு வேலையில்லை

இவ்வளவு தானா நம்பிக்கை


நாலு வருஷமாச்சு
வயித்துல இன்னும்
ஒரு புழு பூச்சிக்கு வழியில்லைன்னு
மருமகளை வெளுத்துத்தள்ளும்
அம்மாவே -

என் மேல் எவ்வளவு நம்பிக்கை உனக்கு!!

Kanneerai Thodarndhu

Andru un kaalgalai thodarnden, nee vasikkum un veetin vazhi ariya....
Indru en kaneer odaiyai thodargiren un ninaivugal illaatha vazhi ariya!

மரணம்


மரணம் ஏற்படுவது
சுவாசிக்க மறக்கும்போது அல்ல
நேசிக்க மறுக்கும்போது!!!

காத்திருக்கிறேன்

அன்பே,
உன் கண்களால் கைது செய்தாய்.....
பொறுத்துக்கொண்டேன்!
உன் சிரிப்பால் போர் முரசிட்டாய்...
பொறுத்துக்கொண்டேன்!
உன் இதழ் சிந்தும் முத்தங்களால் போரிட்டாய்
அதையும் பொறுத்துக்கொண்டேன்!
இப்படி நீயாக வலிய வந்து, என் இதய களத்தில் காதல் போர் தொடுத்துவிட்டு
சட்டென்று இப்பொழுது மௌனதவத்தில் அமர்ந்துவிட்டாய்?!!!
இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது!
காரணம் எதுவாயினும் சரி....!
உயிரே,
இந்த உலகை வெறுத்தேன்...
உன் நினைவோடு வாழ!
நான் ஷாஜகான் அல்ல உனக்காக தாஜ்மகால் எழுப்ப!
சாதரண மனிதன்! உள்ளமெங்கும் உன்னை நிரப்பி, அதில் கனவுகளுடன் நீந்துபவன்!
உன் இந்த மௌனதவம்...
நான் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும் என் பிழைக்கு நீ தரும் தண்டனையா?!
அல்ல
ஆயுள் முழுவதும் உன்னையே நினைக்க வேண்டும்
என்ற உன் பேராசைக்கு நீ கையாளும் யுக்தீயா?!
பதில் அரியாமல் நான் உன்னை விடமாட்டேன்!
காத்திருக்கிறேன் உன் இதய கதவுகளின் வாயிலில்...
நீ எட்டியாவது பார்ப்பாயென்று!

வலி


வலி சுகமானது
உடல்கள் இணையும் போது!!!

வலி சுமையாவது
உள்ளங்கள் பிரியும் போது!!!

----ஆண்டனி

காதல் தோல்வி

காதலில் தோற்பவர்கள்
பிணமாகிறார்கள் அல்லது
பிணமாக வாழ்கிறார்கள்
நினைவுகள் மட்டும் உயிரோடு !!

முதியோர் இல்லம்

குருதியை
பாலாய் தந்தவளின்
குருதி,
கண்ணீராய் போகிறது!!!!

------ ஆண்டனி

காணல்....


தொன்ன்டைக்குழியை வறளச் செய்யும்
இந்தத் தாகம் பயமுறுத்தினாலும்
உயிர் பறிக்கவில்லை இன்னமும்

தூரத்தில் தெரியும் நீர்ப்பரப்பானது
கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாய்
தவிர்த்து வருகிறேன் மரணத்தை

காணல் நீராயிருப்பின் தயவுசெய்து
அதை என்னிடம் தெரிவிக்க வேண்டாம்

தாகத்தை விடவும் அந்த ஏமாற்றமே
என்னை விரைவில் கொன்றுவிடும்

பிரிவை நான் தாங்கிக்கொண்டிருப்பதன் காரணம்
நீயும் அதையெண்ணி வருந்துகிறாய்
என்கிற நம்பிக்கையில் தான்

ஏதோ ஒரு நாள் நாம் சந்திக்க நேர்கையில்
என்னை உன்னோடு இணைத்துக்கொள்ளவிடினும்
பிரிவுத் துயர் ஏதும் எனக்கில்லை
என்று மட்டும் கூறிவிடாதே

அதைமட்டும் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது..


துயர் சரிதை


சிரிப்பால் கவர்ந்த இவன்
மௌனமாகச் சிரித்தவன்
மெளனமாக அழுதவன்
மௌனத்தால் சோகங்களை வென்றவன்
மௌனத்தில் தன்னை இழந்தவன்

தனிமையை
மௌனத்தில் மொழிபெயர்த்தவன்
மௌனத்தில் ஆழ்ந்தவன்
மௌனத்தையே வாழ்ந்தவன்

மௌனமாகவே காதலித்தவன்
மௌனத்தை மணந்தவன்
ஞானத்தைப் பெற்றவன்

மௌனத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவன்
ஒரு 'ஊமைக்காவியம்'!
அவள் மட்டும் படித்திருந்தால் இவன்
ஒரு 'உவமைக்காவியம்'!

ஆனால்
புரியாத இந்த 'பதரை'
புரிந்துகொள்ள அவளும் அறியவில்லையே

இவன் மௌனமாயிருந்ததால்
இவன் வாழ்வு ஊமையானது

மௌனம் - சொல்லின் ஊனம்
இவன் - வாழ்வின் ஊனம்

மூச்சுக்காற்றால் அவள் உயிர் வருட மட்டுமே
இவன் சுவாசம்

இந்த மௌனத்தால்
தன் உயிராகியவளை
தன் வாழ்க்கையை
இழந்தான்

இந்த மௌனத்தை வெறுத்தான்!
மரனத்தால் அறுத்தான்!

இப்போது மௌனத்தையும் கடந்து
மரனத்தில் வாழ்கிறான்!
மரனத்தையும் மௌனமாகவே வாழ்கிறான்!

மரன வாழ்க்கையிலும் உயிரோட்டமில்லை
உயிர் இன்னும் அவளிடத்தில்

அவள் முகம் காணும் நம்பிக்கையில்
மரன வாழ்க்கையின் மௌன ஓட்டம்..

இங்கும் அவள்
'கானல்' நீரானால்
இங்கும் அவளைக் காணமுடியாமற் போனால்

மரனத்தையும் வெறுப்பான்!
மரனத்திலும் இறப்பான்!
திருந்தாத முட்டாள்..

இவன்
அறிவில்லா மேதை
அன்பான தீவிரவாதி
அழகான அசிங்கம்

அவள் ரசிக்கத்தவறிய வானவில்
அவள் புரிந்துகொள்ளாத ஓவியம்
அவள் காக்கத்தவறிய மாணிக்கம்
அவள் கொடுத்து வைக்காத வாழ்க்கை!

நலம் கெடப் புழுதியில்
அவள் வீசிஎரிந்திட்ட
இவன்

இனிமேல் பூக்காத குறிஞ்சி!!!

நீ நான் காதல்

நான் உன்னை காதலித்தும்
உன் காதலை நான் ஏற்கவில்லை!!!!

காரணம் - நீ பொக்கிஷம் !!!

வைரம் தங்கத்தில் பதிக்கப்பட வேண்டும்
தகரத்தில் அல்ல !!!!

------- ஆண்டனி

மனிதனா?


வயிற்றில் இடம் தந்தவளுக்கு
வீட்டில் இடம் தராதவன்
மனிதனா?

------------- ஆண்டனி

வாழ்க்கை விளையாட்டு


பந்தில் காற்றடைத்து எட்டி உதைக்கிறோம் - விளையாட்டு
சதையில் காற்றடைத்து எட்டி உதைக்கிறான் -
வாழ்க்கை!!!

--------ஆண்டனி

சொர்க்கம்


இறந்த பின் சொர்க்கம் வேண்டுமா
புண்ணியம் செய்யுங்கள்
இருக்கும் போதே சொர்க்கம் வேண்டுமா
காதல் செய்யுங்கள்

பேச்சு


பிறந்து இரண்டு வருடங்கள் வரை தெரிவதில்லை
நாக்கை எப்படிப் பயன்படுத்துவது என்று

இறக்கும் வரை தெரிவதில்லை அதை
எங்கே எப்படிப் பயன்படுத்துவது என்று

நினைவுகள் மட்டும் உயிரோடு

கைது செய்தாள்
என்னை
கயல் விழிகளால்
அவள் இதயத்தை
திருடியதற்கு !!!!

என்னுடனே இருந்தாள் - எப்பொழுதும்
என்னைத்தான் நினைத்தாள்
எனை கண்டவுடன் களித்தாள்

பிரியவில்லை என்னை
என்னருகில்
மறந்து நின்றாள் தன்னை

வாழ்ந்து வந்தாள்
என்னுடன்
காதலியாய் என் கண்மணியாய்

சேர்ந்தே நடந்தாள் - விரல்
இடைவெளியில் விரல் வைத்து
எனை முழுமை செய்தாள்

தீடிரென வந்தாள் - திருமண
அழைப்பிதழ் தந்தாள்
மறந்து விடு என்றாள்

மாற்றி இருந்தாள் என்னை
சூர்யகாந்தியாய் - அவள் இல்லாமல்
மனம் வாடி இருந்தது

என் நிழலாய் இருந்தவள்
உடலின் உயராய் இருந்தவள்
இன்றில்லை என்னுடன்

நடைபாதை விளக்கும்
கடற்கரை மணலும்
அவளை நினைவூட்டியது

சாரல் மழையிலும்
அழகான பூக்களிலும்
அவள் முகம் பார்கிறேன்

தென்றல் காற்றும்
மாலை குயிலும்
அவள் பெயர் சொன்னது

நான் காதலித்த அவளை
மறக்க முயலவில்லை
இறக்க துணிந்தேன்

நான் இறந்து
என்னுடன் சேர்த்து அவள் நினைவையும்
இழக்க விரும்பவில்லை

ஆதலால் மட்டும்
வாழ்ந்து வருகிறேன் - அவள் நினைவுகளோடு
ஒரு நடை பிணமாக!!!

------- ஆண்டனி

பைத்தியம்!

பைத்தியம்
பைத்தியம் என்று - நீ
பலதடவை சொன்னாய்.

என் உலகமே
நீ என நினைத்து
பாசமே இல்லாத
உன்னைச் சுற்றிச் சுற்றி
பைத்தியமாய் அலைந்தேனே !

அதனால்தான்
பைத்தியம் என்றாயோ?

வந்தே மாதரம் என்போம் – பாரதியார்

பல்லவி

வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

சரணங்கள்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

பாசம்

கூட்டில் குஞ்சுகளை

பொத்திப் பாதுகாக்கும்

தாய்ப்பறவை நெஞ்சிலிருப்பதும்

வீட்டில் குழந்தைகளை

போற்றிப் பாதுகாக்கும்

தாயின் நெஞ்சிலிருப்பதும்

ஒன்றே...

சுதந்திர இந்தியா

அப்போது
சுதந்திரத்தை விற்றோம்
இப்போது
சுய பண்பாட்டை விற்கிறோம்
அப்போது
பெண்ணுரிமை கேட்டோம்
இப்போது
இட ஒதுக்கீடு கேட்கிறோம்
அப்போது
மதச் சண்டை வளர்த்தோம்
இப்போது
இனச் சண்டை வளர்க்கிறோம்
அப்போது
சாதிச் சண்டை வெளிப்படை
இப்போது
சாதிச் சண்டை உட்கிடை
அப்போது
ஆங்கிலேயர்களுக்கு அடிமை
இப்போது
நமக்கு நாமே அடிமை

1 Comments

Post a Comment
Previous Post Next Post