காதலோ காதல்-பாரதியின் கவிதை - உன் பிரிவை விட. . . - வீழ்ந்து எழுதல் வேண்டாம்

காதலோ காதல்-பாரதியின் கவிதை

கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,
எண்ணுதலுஞ் செய்யேன், இருபதுபேய் கொண்டவன்போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க,
கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய்

ஒன்றே யாதுவாய் உலகமெலாந் தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறுபடுமோ? யார் படுவார்?
நாளொன்று போயினது; நானு மெனதுயிரும்,

நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்,
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சி நின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்,
(வஞ்சனை நான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால்,

புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்,
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை யென
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே
நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச்

சென்றுநான் பார்க்கையிலே, செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின்
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெல்லாம்
வேறெங்கோ போயிருப்ப வெம்மைக் கொடுங்காதல்
மீறலெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக்

காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன்

உன் பிரிவை விட. . .

நீ பிரியும்
தருணத்தில் வழியனுப்ப
மனமில்லாமல்
பேசுவதற்கு வார்த்தைகள்
இல்லாமல்
நான் தவித்து நின்றேன்.

கன்னம் நனைக்கும்
கண்ணீருடன் நீ
சொன்னாய்.
"உனக்கு வர்ற
மனைவி கொடுத்துவச்சவடா"
என்று.

உன் பிரிவை விட
அதிகமாய்
வலிக்கிறது
உன் வாழ்த்து.

வீழ்ந்து எழுதல் வேண்டாம்

பயத்தில் ....

மீண்டும் வருமா காதல் ?
அது அதிகம் அருகில் வேண்டாம்!!

மீண்டும் கண்கள் வேண்டாம்
வீழ்ந்து எழுதல் வேண்டாம்

மீண்டும் ......

வீழ்ந்து எழுதல் வேண்டாம் .........!!!

காதல் தோல்வி

நீ அழைக்கும் போது
கடவுள் போல வந்துவிடுவேன்
எங்கிருந்தாலும்!

நீ சொல்லும் போது
அடியாள் போல செய்துவிடுவேன்
எந்தவேலையையும்!

நான் நினைத்துக் கொண்டிருந்தேன்
நாம் காதலித்துக் கொண்டிருப்பதாய்!
பிறகு தான் புரிந்தது
நான்மட்டும் காதலித்துக் கொண்டிருப்பது!


நம்பமுடியவில்லை

மாலை வேளையில் தூக்கியெரியும்
நீ சூடிவாடிய மல்லிகையுடன்
என்காதலும் குப்பைக்கு போனதை
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை!

உனக்கு ஒருநாள் புரியும்

குமுறி வெடிக்கும் இதயம்

சாவை நோக்கிஅழைக்கிறது

நெருப்பு நீரில் குளித்தெழும்ப

மனம் என்னை இழுக்கிறது

நினைத்துக்கூடப் பார்க்கவில்லை

நிம்மதி தந்தவள்

நிறுத்திவிடுவால் என்று

காற்று நின்று இதயம் அடித்து

கண்கள் மூடும்வேளை

கானல் நீராய்ப்போன வாழ்க்கை

குறுகிப்போய்விடும் என் உடல் கருகிப்போய்விடும்

உடல் எரியும் சாம்பல் மேட்டில்

ஊளை இட்டு நாய் வாலை ஆட்டும்

காதல் நிலைத்தது எனக்காட்ட

காலால் கிளறும் என் இதயத்தை

ஆப்பொழுது தெரியும்

நாய்க்குத்தெரிந்தது

எனக்குத்தெரியவில்லையே என்று

முற்றுபுள்ளி

இனியவனே
தோல்விகள்
தொடர்கதைதான்
காதலுக்கு!
தோல்விதான்
முற்றுபுள்ளி
எனக்கு.

உங்கள் முடிவென்ன?

என்னிலை என்னவென
எனக்கேதும் பிடிபடவில்லை
காப்பாற்ற வேண்டிய கணவன்
கண்மூடி கிடக்கிறான் கல்லறையில்!

நான் பிறந்ததிலிருந்து
என்னை அலங்கரித்த
பூவையும் பொட்டையும்
அவனோடு புதைத்துவிட்டனர்!

விதவையாக வெள்ளையுடுத்தி
வெளிஉலகை காணமல்
இருந்துவிட இயலுமா
இருபத்தியொராம் நூற்றாண்டிலும்?

என் பிள்ளைகளுக்காக
வேலைக்கு செல்லுகையில்
சிலர் வெறித்து பார்க்கின்றனர்
வேலியில்லா செடியென!

ஆதரவாக பேசிடும் ஆண்களெல்லாம்
ஆசையோடு பேசுவதாகவே தோன்றுகிறது
மறைமுக பேச்சுகளையெல்லாம்
மனதிற்குள் மறைத்துவிட்டு!

நிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால்
ஏசுவதற்காக இருக்கின்றனர் சிலர்
காதுகளை பொத்திக்கொண்டு
கடமைகளை செய்திடும் எனக்கு!

விடிவொன்று வேண்டும்-இந்த
வீணாய்ப்போன சமூகத்திலிருந்து
முடிந்தால் நீங்கள் கொடுங்கள்
இல்லை நானே எடுத்துக்கொள்கிறேன்!.

கண் அசைவு

இனியவனே
ஒரு நொடி போதும்
உன் கண் அசைவிற்கு!
என் காதலை ஏற்றதற்கும்!
நூறு கோடி ஆண்டு வேணும்
உன் இதய வசத்தில்
அடிமயாவதற்கு....!

தீர்ப்பு

இதுவரை
காதல் சரியா? தப்பா?
என்று
அறியாமல் இருந்தேன்!
உனைக்
கண்டதும்
தீர்வை
கண்டேன்!!!

புதைந்த காதல்

உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
புதைத்துக்கொண்டது ஏன்?
என்றாவது ஒரு நாள்
நம் காதல்
செத்துப்போகும் என்றுதானே!

முதலில் நாம் ஒன்றாக இருந்து
காதல் செய்தோம்
பின்னர் நீ அங்கிருந்தும்
நான் இங்கிருந்தும்
அதற்கு காரியம் செய்தோம்
உன் நினைவும் என் நினைவும்
வரும்போதெல்லாம்
அதற்கு திவசம் கொண்டாடுகிறோம்
ஒரு புதையலைப் போல பொக்கிஷமாய்
மனதிற்குள் பூட்டி பூஜிக்கிறோம்
வெட்கம்கெட்டு வெளிப்படையாய் திரிகிறது உடல்

மறக்காதே!!!

சிரித்தாய்...!
இதயத்தை தொலைத்தேன்;
காதலித்தாய்...!
உலகை மறந்தேன்;
மறந்தால்
உயிரையும் துறப்பேன்!

என் காதல் எந்த நிறம்?

உன்னிடம் சொல்லிவிடத் துடித்த போதெல்லாம்
ஓடி ஒடி ஒளிந்து கொண்டதே!
அப்படி வெட்கப் பட்டு வெட்கப்பட்டு சிவந்து கிடந்ததோ என் காதல்?

எப்போதும் உன்னுடைய நினைவுகளை மட்டுமேப்
பசுமையாய் சுமந்து திரிந்ததே!
ஒரு வேளை பச்சை நிறமாய் இருந்ததோ என் காதல்?

உன் காதல் எவ்வளவு பெரியது என்று கேட்டவர்களிடமெல்லாம்
வானைப் போலப் பரந்தது என்பேனே!
நீல நிறமாயிருந்ததோ என் காதல்?

உன்னைப் பார்த்துப் பிறந்ததுதானே என் காதலும்?
ஒருவேளை உன்னைப் போல அதுவும் பொன்னிறமோ?

உன்னிடம் என் காதலைச் சொல்லும் வரை
அது எந்த நிறமென எனக்கும் சந்தேகம்தான்…

ஆனால் உன்னிடம் சொல்லியபின்தான்
நீ மறுத்துவிட்ட துக்கத்தை சுமந்து
எப்போதும் கருப்பாய்த் திரிகிறதடி என் காதல்!
என்னைப் போல…

கண்ணீர் இல்லா காதலும் இல்லை

இரத்தம் சிந்தா போர் இல்லை
பிறந்து அழாத குழந்தை இல்லை
விரல் சுடாத தீயும் இல்லை
கண்ணீர் இல்லா காதலும் இல்லை
தோல்வி என்பது நிலையும் இல்லை!

கல்மனசு

இந்த மலையைக் குடைந்து ரயில்பாதை
அமைத்தவனுக்காவது தெரியுமா உன்
கல்மனசுக்குள் நுழைவது எப்படி என்பது.

அன்பே எனைக் காதலி

எதற்க்கும் அடி பணியாதவள்...
உன் அன்பிற்கு அடிமையானேன்..!
எவற்றுக்கும் அஞ்சாதவள்
உன் பார்வைக்கு அஞ்சினேன்..!
என்னுள் ஏற்பட்ட இத்தனை மாற்றமும்
நீ உதிர்க்கும் அந்த ஒரே ஒரு
ஒற்றை வார்த்தைக்காக
‘அன்பே எனைக் காதலி..!’

தவறாமல் விழுந்துகொண்டிருக்கிறேன்

புவியின் ஈர்ப்பு விசையில்
எப்போதாவது தவறி விழுந்திருக்கிறேன்.
உனது விழியின் ஈர்ப்பு விசையில்
எப்போதும் தவறாமல் விழுந்துகொண்டிருக்கிறேன்.

ஒரே ஒரு நொடியில்..!

அருவமாய் இருந்த எனக்கு
கருவில் உருவம்
கொடுத்தாளென் தாய்…
அதற்குப் பத்து மாதங்கள் ஆனது..!
கிள்ளையாய் இருந்த என்னை
நல்ல பெண் பிள்ளையாய்
மாற்றினார் என் தந்தை…
அதற்குச் சில ஆண்டுகள் ஆனது..!
களி மண்ணாய் இருந்த என்னை
சிறந்த கல்விமானாக
மாற்றினாள் என் ஆசிரியை…
அதற்குப் பல ஆண்டுகள் ஆனது..!
என்ன மாயம் செய்தாயடா..?
ஒரே ஒரு நொடியில்
நான் உந்தன் காதலியாகி விட்டேன்..!

நீ இல்லாத இரவுகளனைத்தும்..!

குளிர்ச்சியான மார்கழி இரவு..!
வெண்பனி போர்த்திய
வெள்ளை நிலவு..!
நீல வானக் கானகத்தில்
பூத்துச் சிரிக்கும்
நட்சத்திரக் கூட்டங்கள்..!
உரசிச் செல்லும்
வெண் மேகக் குவியல்கள்..!
இரவில் மலரும்
அல்லி மலர்கள்… - என
எத்தனையோ ரசிப்பதற்கு
இருந்தாலும்..?
நீ இல்லாத இரவுகளனைத்தும்
எனக்கு கோடை வெயிலாகத்தான்
தோன்றுகிறது..!

கவிதை என்றாலே..!

கவிதை என்றாலே
பொய் என்பார்களே ..?
நீ மட்டும் எப்படி
உண்மையான கவிதையாக
என் கண் முன்னே நிற்கிறாய்..!

பார்த்தல்

சாலையில் செல்லும் பொது
அவள் என்னை பார்த்தாள்
சிரித்தாள்
குழி விழுந்தது
அவள் கன்னத்தில்
அவளை பார்த்தேன்
நான் சிரித்தேன்
அடி விழுந்தது
என் கன்னத்தில் .

Post a Comment (0)
Previous Post Next Post