உழைப்பு
விடிய விடிய உழைத்தும்
வியர்வை இல்லை
கடிகார முட்கள்.
பட்டினி
எந்த அரிசியிலும்
என் பெயரில்லை போலும்
பத்துநாள் பட்டினி!
தேர்தல்
விதவைச் சுவர்கள்
சுமங்கலியாகும்
தேர்தல் ...
வெற்றி
வெற்றியை விரும்பும் நமக்கு
தோல்வியை தாங்கும் மனம் இல்லை …!
தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும்
ஒரு வெற்றி தான் .!
இதயம்
அவள் என்னை
பிரிந்த விட்டால்
என்பது எனக்கு தெரியும்
பவம் என் இதயத்துக்கு தெரியாது
அது உனக்காக இன்னும்
துடித்து கொண்டு இருக்கிறது
தோல்வி
தோல்வி எனக்கு புதிதல்ல
அதனாலதான் அவனை
மறக்க வேண்டும்
என்று நினைக்கும் போது
கூட
என் மனதோடு போராடி தோற்று போகிறேன்
உன்னிடம் கொண்ட காதல்
நான்
உன்னிடம் கொண்ட காதல்
உன்னை சுற்றி உள்ளவர்க்கெல்லாம்
தேரிந்து விட்டது
உன்னை தவிர ……
ஒந்த சிந்தனை :
சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது !
சுகமாகவே ஏன் நாளும் வாழ்ந்து விடவும் முடியாது !
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இறுதிநாள் தான் நம் -மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மாற வாதீர் ..
கண்கள்
பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில்
உன் கண்களை மூடிக்கொள் .
உன் உதடுகளை விட ,
உன் கண்கள்தான் அதிகம் பேசுகின்றன "
கடைசி ஆசை
அன்பே:
ஏன் பிரிந்தாய்?
நம் பிரிவை உயிர்
மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.
எப்படி பிரிந்தாய்?
நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்
நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்.
சொல் கண்ணே சொல்
நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட
நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.
எங்கே நீ சொல்
அன்பே சொல்..
உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது
என் கண்ணீர் எனும்
மழையாலும்
உன் நினைவெனும்
புயலாலும்.
வா அன்பே வா…
நீ
என்னை வாழ
வைக்க வேண்டாம்
வாழ விடாமல்
வைத்துவிடு
அது போதும்
உனக்காய் வாழ்ந்து
உன்னால் இறந்தேன்
என்பதே என்
வாக்குமுலமாய்
இருகட்டும்.
வா அன்பே வா
எப்போது சொல்வாய்.................
ஒரு பார்வையால்
ஒராயிரம்
கதை சொல்லி
என்னை பதறவைக்கும்
உன் கண்கள் பிடிக்கும்
நிலவுக்குள்
மின்னலடித்தது போல்
என்னை நோக்கி
நீ வீசும் உன்
புன்னகை பிடிக்கும்
நள்ளிரவில் தெரியும்
நட்சத்திரமாய்
உன் கூந்தலில்
ஒய்யாரமாய்
உட்கார்ந்திருக்கும்
ஒற்றை ரோஐh
பிடிக்கும்
ஆயிரம் பேருக்கு
மத்தியில்
நீ வந்தாலும்
உன்னை எனக்கு
உணர்த்தும்
உன் கொலுசின் ஒலி
பிடிக்கும்
தேர் கொண்ட
பார்வையால் நான்
பார்க்கும் போதெல்லாம்
நானிக் கவிழும்
உன் பெண்மை
பிடிக்கும்
உன்னில் எல்லாம்
எனக்கு பிடித்துப்போக
நீ எப்போது
உன் செல்விதழால்
சொல்வாய்
என்னை பிடிக்குமென்று!!!!!!!!!!!!!!
Prakash G
அவர்களிடமிருந்தே வந்தேன்
அவர்களே வளர்த்தார்கள்
அவர்களாலே வளர்ந்தேன்
அவர்களுக்காகவே வாழ்கிறேன்
இப்போதும்,
அவர்களுக்கு
பிடித்த மாதிரி
வாழ்கிறேன்
எனக்கு
பிடிக்காமல்...................
பூவே தாலாட்டு
தலையாட்டும்
பூவே...
நீ...
என்னை
தாலாட்ட
வருவாயா...
என் காதல் சொல்ல நேரமில்லை
என் காதல் சொல்ல
உண்மையில் நேரமில்லை
இன்றும் சொல்லாமல் காதலித்துக்
கொண்டிருக்கிறேன் இறுதி
வரை என்னால் சொல்லவும்
முடியாது ஆனால்
இது ஒரு தலைக்
காதலும் இல்லை
இது இரு தலைக்
காதலும் இல்லை
எப்படி சொல்வேன்
என் காதலை
அம்மா அப்பா அண்ணன்
நட்பு மனிதம் மிளிரும்
மனிதர்கள் பாசம் மிக்க
விலங்குகள் உணவு தரும்
தாவரங்கள் உயிரற்ற பொருட்கள்
ஒவ்வொன்றாக சென்று
என் காதல்
சொல்ல நேரமில்லை
அனாதையின் அவலம்!
சந்தோஷ சில்மிஷங்களின்
சில்லறை மீதமாய்
கருத்தரித்த உறவு...!
தாஜ்மஹால்
என்னை கட்டியவனும் இல்லை
கட்ட சொன்னவலும் இல்லை
இருந்தாலும் வாழ்கிறேன் உண்மையான
காதலர்களை காண்பேன் என்ற நம்பிக்கையில்
தாஜ்மஹால்
கயிற்று பொம்மையாய்
கயிற்று பொம்மையாய்
கயிற்று பொம்மையாய் வாழ்க்கை
நூலிழையில் என்னடா வேட்கை.
கரைந்து போய்விடும் சேர்க்கை
இதில் மரணம் கொண்டதே யாக்கை.
உன் மெய்யாள்வதே கொண்டவன் தானடா.
இதில் பொய் கூறுகள்..
நம்மிடம் ஏனடா?
நீ இன்று கொண்டாடும்
மெய்யின்று உனதில்லை.
நிலம் தாங்கும் உந்தன் உடல் தான்,
இருந்தாலும் உன் மெய்யில்லை.
உன் மெய்யென்ற மெய் கூட..
பொய் தானே வேறில்லை.
இருந்தாலும் ஆசை கொள்ளும்,
அவை தானே விதியின் எல்லை.
தேனுள்ள பூக்களை போல்
வாடிவிடும் வாழ்க்கை.
மெய் ஞானத்தை தேடுதல் தானே
நிலையான வேட்கை.
இருக்கும் வரையில் பிறார் மதிக்க வாழு,
அதில் தானே.. மனிதா..
அன்பென்ற சொல்லில் தானே
அண்டமெல்லாம் இயங்கும்.
பிழைருந்தும் காதலில் தானே
மனித வாழ்க்கை தொடங்கும்.
மனிதம் கொண்ட மனமும் தானே
இறந்த பின்னும் வாழும்.
இதமான காற்றில் தானே
மழை மேகம் பாடும்.
உண்மைகள் உணர்ந்து வாழ்ந்திட வாழாய்..
பொய்மைகள் இருந்தும்,
உதரி தள்ளாய்... மனிதா..
Thaayin kanneer.....
முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர்:-
மகனே!
நீ இருக்க
ஒரு கருவறை இருந்தது
என் வயிற்றில்.......
நான் இருக்க ஒரு
இருட்டறை கூடவா இல்லை
உன் வீட்டில்.........
Naan vendum varangal!
நான் வேண்டும் வரங்கள்:-
*தினம் தினம் பௌர்ணமி....
*நினைத்த உடன் மழை.......
*சாலையோர பூக்கள்......
*அதிகாலை பனித்துளி.......
*இரவு நேர மெல்லிசை.......
*கள்ளமில்லா சிரிப்பு........
*பொய்யில்லா நட்பு......
*தினம் நூறு கவிதைகள்.......
*கவலையற்ற கல்லூரி நாட்கள்.......
*தோள் சாய உண்மையான தோழன்.....
*பாசம் உள்ள சகோதரன்.......
*தாய் மடி தூக்கம்......
*தூக்கத்தில் மரணம்.........
kaadhalikkiren
கவிதை எழுதினால்
காதல் மலரும் றன்றால்
நிச்சயமாக நான்
காதலிக்கிறேன்
ரன் தாயின்
***அன்பை***