nee sammadhithaal - theerndhu vidumo? - அழகு பதுமையா?

nee sammadhithaal

நீ சம்மதித்தால்
கால் வலிக்கும்
வரை.....
உன் விரல்
பிடித்து நடக்க
வேண்டும்!
இரண்டு வயது
குழந்தையாக!............

theerndhu vidumo?

நீ அதிகம்
பேசினாலும்!
அதிகம்
சிரித்தாலும்!
எனக்கு பிடிப்பதில்லை....
தீர்ந்து விடுமோ?!
என்று.......

அழகு பதுமையா?


பெண்ணவள் அழகு பதுமையா?
கர்வ குமரியா?
படித்த குழந்தையா?
போலி மங்கையா?
பேசி பழகினாள்..
அடடா அன்பு செவிலியா?

மனம் விட்டு பேசுகையில்.,
மனதோரம் பாரமில்லை.
உண்மையை சொன்னாலும்
பொய்யொன்றும் தூரமில்லை!

குழந்தைக்கு துயரென்ன?
தெரியவா போகுது?
தெரிந்தாலும் துயரம் தான்
புன்னைகையாய் மாறுது.
சில்மிஷ பேச்சுக்கள்
நட்போடு இழைந்தது.

பிழையோடு பேசும் வார்த்தையும்,
செந்காற்றில் போனது.
தெரியாமல் இந்த உறவை சுற்றி,
பிறார் கண் வேலியானது!
யாருக்கும் தெரியாது
இவர்கள் அன்பு போலியானது!

பிழை செய்ய பார்த்தால்,
நான் கேட்டால்?
இருந்தும் குழந்தை போல்
தலையாட்டி பார்த்தாள்.
என் மனமெங்கிலும் ஒன்றுமில்லை.
அதை உணரும் பக்குவம் இன்று அவளுக்கில்லை.

பிடிக்குமென்று சொன்னேன்.
பிடித்தது, அன்பெனும் பைத்தியம்.
ஓர் சொல்லில் உடைத்தாள்
அது தான் அவள் வைத்தியம்.

என்னோடு..
ஒன்று கூடி பேசினாள்
பிறார் கண்ணும் பரப்பரக்க..
நெஞ்சம் துடிதுடிக்க..

சொல்லாமல் விலகி விட்டால் பெண்மை.
அவள் அறிய மறுத்தாலே,
நடந்த உண்மை!

மன்னிப்பு கடிதம் எழுதி வைத்தேன்.
ஓர் பார்வை பார்த்தால்..
அடடா.! இது காதல் கடிதமென்றெண்ணி
குப்பையில் போட்டால்.?
கசங்கிய கடிதம் சொன்னது..?
பெண்ணே! இது காதல் கடிதமல்ல..
மன்னிப்பு கடிதம்.

அவளோ.. நீ நடித்தது போதும்
இனி எமாற மாட்டேன் என்று முனுமுனுத்தாள்.
தொலைவில் இருக்கையில்
கைபேசி அழைத்தால்?
மறுமுனையில் சத்தம் இல்லை
அவள் எடுக்கவில்லை என்பதில் எனக்கு சித்தம் இல்லை!

போலியாய் ஒரு நாடகம்,
நடப்பதை உணர்ந்தும்..
அதை முடிக்க நினைக்கவில்லை அவளும்.
இன்று ஒன்றும் பேச முடியாமல் நானும்.!

ஓட்டாண்டி

எம் எழிலுற்ற பாரதத்தை
துகிலுரித்து கூரிட்டார்.
அற எனும் இயல் கொள்ள
பொருளள்ளி தானிரைத்தார்.
தேரென்னும் ரதம் தல்ல
கைக் கூப்பி தான் கேட்டார்.
வாக் கேட்க - தம் நாக்
கொண்டு பொய் பூசி பார்த்தார்.

கேட்காதோர் பலர் தன்னை
பயம் தந்து பனிய வைத்தார்.
இல்லாதோர் பலருக்கிங்கு
செல்வத்தை தான் திணித்தார்.
வெற்றியின் பக்கத்தில்
வலிகளையும் தான் நினைத்தார்.
பொய் வாக்குத்தி - யாசித்து
தன் மானம் காத்தார்.

தன் மானம் காத்தெந்தன்
தாய் நாட்டை பங்கிட்டார்.
ஓட்டெச்சை வாங்கி தின்று
தலை மேல் ஏறி நின்றார்.
தம் வாக்கென்னும் பலம் - தன்னை
எம் மக்கள் தான் மறந்தார்.
தலை குனிவாம் அன்றாடம்
சோத்துக்கு வாக்குரைத்தார்.

மக்களாட்சி தான் மறந்து
பலியாடாய் தான் விழித்தார்.
ஓசிக்கு செவி சாய்த்து
தினம் ஓட்டாண்டி ஆனார்.
இன்று- நல்லாட்சி வந்தால் தான் - தன்
நிலை மாறும் மறந்தார்.
-

mudhal yaedhiri

இதயத்தின் முதல் ஏதிரி
கண்கள் தான்...
ஏனென்றால்,
இதயம் மறைத்து வைக்கும்
அனைத்தையும் கண்கள்
காட்டி கொடுத்து விடும்....

மழலையாய்


வெற்றுளியாய் தாய்
கருவரையில் வீழ்ந்தாய்.
மெல்லெனவே யாக்கை
கொண்டெ ந்னுமெழுந்தாய்.
ஈரைந்து திங்கள்
இருள் நீரில் மிதந்தாய்;
அவள் உட்க் ஓண்ட உணவின்
மீதியில் வளர்ந்தாய்.
எட்டி உதைத்து வலிகளில்
சுகம் தன் தாய்.
தன்னு யிர்காத் துதுன்னுயிர்
உலகிற்கு தர தாய்.
இறைனாள் குறித்த
நொடியில் 'மண்மீ திருந்தாய்.
மழலையாய்'!
-கவிசதிஷ்

நிர்வாணமாய்...

கைக்கூப்பி நின்ரென் தன்
வாக்கு கேட்டான்.
என் ஆள்க் காட்டிவி ரல்தன்னில்
பொய் பூச பார்த்தான்.

எம் வாக்கேட்டு நாக்கோடு
பொய் பேசிப்பார்த் தான்.
தன்மானத் தைவிட் டெந்தன்
கையையா சித்தான்.

எம்வாக் கை கேட்க
தம்வாக் கை கொண்டான்.
நீரில்லை;சாக் கடையில்
பால் வருமென்றான்.

ஓட்டிட் டிட்டதெல்லாம்
பிரிந்த தென்றான்.
புது ஓட்டிட,எம் ஓட்டை
தன் சின்னத் தில் பதியென்றான்.

நானு மிட்டேன் என்
வாக் கென்னும் ஓட்டை.
இருப்பினும்???
நிர் வாணமாய் கண்ட் ஏன்

என் தாய் திரு நாட்டை!

-கவிசதிஷ்

வெட்கத்தில் சிரித்தாள்

தினதோறும் தேடினேன்
உந்தன் கால் தடத்தை.
அதில் தெரியாத சுகம் உணர்ந்தேன்
எந்தன் மனப் புறத்தே.
நீ வருவாயா என்று பார்த்திருப்பேன்
நீ வரும் இடத்தே.
எனை அறியாமல் உனை தொடர்வேன்
உன் திசை புறத்தே.
நீ மலர்வாய என்றீருபேன்
உன் இதழ் நனைத்தே!
நீ தெரியாமல் உனை ரசிப்பேன்
என் விழிகள் உறுத்தே.
நாம் பேசுவோமா தெரியாது
பல யுகங்கள் மறைத்தே.
நம் இரு விழியாலே பேசினோம்
மனம் மறைத்தே.
நீ வெட்கத்தில் சிரித்தாயே
உன் தலை குனிந்தே.!

நரகத்தை தந்தாலும்

விழி நீரில் உள்ளம் நிறைகின்றதே.
வழிந்தோடி உயிரில் உறைகின்றதே.
உறவென்று சொல்ல நீ வந்த போதும்.
பிழையான சொல்லால் உடைந்தேனே நானும்.
மனம் ரெண்டுமிங்கு ஒன்றான போதும்
ஊரின்று தடுக்க கண்ணீரில் நானும்.

அன்பான உள்ளங்கள்;பறிமாறும் இதயத்தில்
சேர்ந்திங்கு வாழ விதி வேண்டுமே.
தடையேதுமில்லாமல் பிழை யாரும் சொல்லாமல்
மெய்காதல் உலகொன்று இனி வேண்டுமே.
உயிர் கொஞ்சம் கிழித்து உணர்வெழுதும் காதல்
பொய்த்தொன்றும் போகாத நிலை வேண்டுமே.

அன்பென்ற சொல்லிற்கு அர்த்தங்கள் தெரியாத
உயிர் மாண்டாலும் பிழையில்லையே.
உயிர் தந்த காதல் பிழையென்று சொன்னால்
உன் உயிர் தாங்கும் உயிருக்கு வழியில்லையே.

நரகத்தை தந்தாலும் காதல் சொர்க்கம்.
நீ பிழையென்று சொன்னாலும் நாம் காதல் வர்கம்.
இந்த நிலைபாடு மாறாது என்றும் எதற்கும்.
அது மரித்தாலே அப்போது உலகம் நிற்கும்.

வைரமுத்து !

தமிழனை!
தமிழ் பேச தூண்டியவன்-அவன்
நாம் தமிழை படித்தோம்-அவன்
தமிழை குடித்தான்

பாக்கடலை கடைந்த சிவன்
விஷத்தை தான்னுண்டு
அமுதத்தை தேவர்களுக்கு
தந்ததைப் போல்

பல துன்பங்களையும்
துயரங்களையும் தாங்கிக் கொண்டு
தமிழ அமுதை நமக்கு தந்தவன்....
வைரமுத்து

வைரமும் முத்தும்
சேர்ந்தால் கூட
அவன் த்மிழுக்கு
இனை ஆகாது.........

உயிரில் ஊருவதுதான் காதல் !

காதல் மனதில் முளைப்பதில்லை
மனதின் முடிவில்தான்
காதல் தொடங்குகிறது !

மனம் ஆசைகளை உருவாக்கும்
கருவி மட்டுமே
அதையும் தாண்டி
உயிரில் ஊருவதுதான் காதல் !

காதல் வரிகள்

எந்தன் நெஞ்சில் உந்தன் முகம்
மெல்லிழையாய் உன் உள்ளே தான்.
சென்றவுடன் ஹொர்மொனுக்குள்
மெல்ல மெல்ல சில்மிஷம் செய்தாய்.
உந்தன் குரல் கேட்டவுடன்
தென்றலை தான் உணர்ந்தேன் நான்
உந்தன் விரல் பட்டவுடன்
மெல்லிசையை ரசித்தேன் நான்

உன்னை இங்கு பார்த்த நொடி
என்னென்னொமொ செய்தாய் பெண்ணே.
உந்தன் பார்வை சரியும் பொழுதில்
இதயம் மெல்ல கொய்தாய் கண்ணே.
தென்றலை போல் என்னை தீண்டி
ரத்தமின்றி பரித்தாயே.
பறித்தவுடன் இதயப் பூவை
தலையில் சூடி சிரித்தாயே.

காதல் இங்கு போர்க்களமாய்
ஆனதுண்டு பெண்ணாலே.
வெடித்திருந்த இதயம் தன்னில்
நீர் இரைத்தாய் உன் அன்பாலே.
மெய் சொல்ல பொய்கள் உண்டு
காதல் பொய் தான் என் உயிரே..
உணர்வென்ற தீயில் எறிந்த்தால்
இதயம் குளிரும் உன்னாலே.

எதோ எதோ உள்ளம் சொல்லும்
உன் பார்வை பட்டால் பின்னோடுதே.
நீ போன பின்னே இதழ்கள் பேசும்
வார்த்தை மட்டும் எட்சமாகுதே.

கல்லறையானேன்

'நிலமாய் இருந்தேன் - நீ நடப்பாய் என்று..
மலராய் இருந்தேன் - நீ சுமப்பாய் என்று..
கல்லறையானேன் அப்போதாவது - நீ
என்னை நினைப்பாய் என்று'!

கோடை மழை

கோடை வெயிலில் மழை.......,
உன் மனதில் இருக்கும் எனக்கு............?



உன் மார்பின் வியர்வையால்.........!

காதலும் சுமையா?

நினைவுகளில் நெஞ்சம் சுழல்கிறதே
ஒரு நொடியில்
விழிகளில் அடை மழையே.
முகம் பார்த்த கண்கள்,
உந்தன் முகம் தேடுதே..
முடியாமல் இதயமதிலே
கானல் வரி பாடுதே.
பிரிவேதுமில்லாமல் காதல்
உணர்வேது நெஞ்சமே..

பார்கின்ற பொழுதுகளில்
எந்தன் மனம் தான் தடுமாறவில்லை.
பழகிய நாட்களுமே..
உடன் கரை தான் சேரவில்லை..
மனம் கொண்ட வலிகள் அதிலே
சொல் இறகாகினாய்.
மனம் உலர்கின்ற வார்தைக்கும்
மொழி சூடி உறவானாய்
வலிகளை நினைத்தால் காதலும் சுமையா?

ரெயில் பயணங்களில்

விழிகள் இரண்டும்
மௌனமாக மேய்ந்ததே.
இடை வெளியில்
வார்தையெல்லாம் மறைந்ததே.
சுற்றி சுற்றி
பார்க்கும் அந்த முடிவிலே
உன்னை கொஞ்சம்
மெல்ல மெல்ல பார்க்கிறேன்.
பார்க்கும் நொடியிலே,
உன் பேரென்ன?
ஊரென்ன கேட்கிறேன்..
நீ அழகு தமிழடி
என் மார்பின் சுவையடி
என் இதயம் களவும் செய்யும்
ஒரு பெண்மை காந்தம் நீ..

கடந்து வந்த
பாதையெங்கும் பூக்கள் தான்.
உன் எதிரில் இருந்து
பார்க்கும் போது பூத்ததே.
புத்தகத்தின் இடை வெளியில்
நானும் தான்..
உன்னை பார்க்கும் போது
பேசவில்லை உலறினேன்.
சில்லென்ற காற்றும்,
உன்னை தீண்டும் போதும்
மெல்லென்ற கைகள்
உன்னை தீண்டும் பாரு.
நீ தொட்டில் பூவடி
தாலாட்டு பாடினேன்.
வெட்டில் பூச்சியாய்
தொட்ட போது ஓடினேன்.

உன்னை கடந்த பின்
எந்தன் உள்ளம் வேர்க்குமோ.
மனசை மறைத்து விட்டாய்
என்று என்னை கேட்குமோ.
என் கூந்தல் இழைகள்
உதரி விட்ட பூக்களை,
எடுத்து கொண்டு
மறைத்து வைத்து பார்க்குமோ.
தெரியாமல் நடந்த காதல் தொடர்
முழுமையாகுமோ.?
அறியாமல் விழிகள் செய்த
குற்றம் தொடர்ந்து நீளுமோ?
நான் கடந்து வந்த பெண்ணில்
பனி சிற்பம் தானடி.
உன்னை வெயில் படாமல் காப்பேன்
என் பேச்சை நம்படி!

தோழியே


தோழியே
என் தோழியே
ஒரு வார்த்தை பேசுவாயா?
பேசினால் பிழையில்லை
உணர்து கொள்ள வருவாயா?
என் நட்பெனும் விலும்பினிலே
நீ நடந்திடும் போதினிலே
என் அன்புன்னை மீட்டிடாதா?
உன் நட்பினில் வாழ்ந்திடாதா?

உனக்கும் பிடித்திருந்தால்
அதை உள்ளம் உரைத்திருந்தால்.?
மறைத்திட வேண்டுமா? நட்பு
கொள்ளவே!
யாரும் சொல்லி என்ன?
பல பேரும் உன்னை என்ன?
பிழைகளை மறந்து - நீ நட்பில் சேரவா!
நீ நான் என்று தோன்றும் நேரம்
நீளும் உயரமே.
நாம் தான் என்று சொன்னால்
அதில் நம் நட்பும் வாழுமே!

கள்ளம் கபடமில்லா
உள்ளம் சொல்லும் நட்பு
உடலினில் ஓடிடும் நரம்பை
போன்றதன்றோ!
பொய்கள் பூசி பேச
வெறும் வார்த்தை மட்டும் போதும்
நட்பெனும்
வீதியில் போக வேண்டுமன்றோ?
அன்பெனும் கண்ணியத்தோடு
காத்து நிற்கும் நட்பு.
அதில் பிழை தன் என்று வந்தால்
பெண் தான் அதற்கு
பொறுப்பு!


குறுந்தகவல்

கல்யாணத்தை எட்டும் வரை - 'காதல்'
ஒரு மொட்டை கடுதாசி

நிலமாய் இருந்தேன் நீ நடப்பாய் என்று..
மலராய் இருந்தேன் நீ சுமப்பாய் என்று..
கல்லறையானேன் அப்போதாவது - நீ
என்னை நினைப்பாய் என்று!

வெறும் இச்சையில் வந்ததடா காதல்
அது முடிந்தபின் மறைந்திடுமே அதன் தேடல்

எத்தனை நாள் பழகினோம் என்பது முக்கியமில்லை ;
எத்தனை நாள் உண்மையாக பழகினோம் என்பதே முக்கியம் !

மதம்

பாபர் மசூதி சுவற்றில்
ஓடி விளையாடியது
ராமர் கோடு போட்ட அணில்

என்னவள்

இருள் நீங்கும் முன்
ஒரு உதயம்
என்னவள் விழித்து விட்டாள்

அன்னப் பறவை
அன்னார்ந்துப் பார்த்தது
என்னவள் எழுந்து நடக்கிறாள்

மார்கழிப் பனியில்
நனையும் மஞ்சள் நிலா
என்னவள் கோலமிடுகிறாள்

தாமரை குளத்தில்
மல்லிகை வாசம்
என்னவள் குளித்து முடித்திருக்கிறாள்

சித்திரை வெயில்
சாரல் மழை
ஒ என்னால் கூந்தல் உலர்த்துகிறாள்

Post a Comment (0)
Previous Post Next Post