ரோஜா - N R I - முதிர்கன்னி

ரோஜா

நீ பறிக்க வருவாய் என்று
முள்ளில்லாமல் பூத்தது ரோஜாப்பூ.

N R I

ஆற்றில் ஒருகால்
சேற்றில் ஒருகால்
அயல்நாட்டுத் தமிழர்

முதிர்கன்னி

சாமிக்கும் சாமிக்கும்
திருக்கல்யாணம்
ஒரு கல்யாணமும்
நடக்காத முதிர்கன்னி
விரதமிருந்தால்!

சட்டம்

எல்லோரும் வாழ
ஏற்றமிகு திட்டம்
அடிக்கல்லில்!

மரணம்

என்னிடம் இன்னும் உயிர் இருக்கும்
என்றெண்ணி அதை பறிக்க இறைவன்
அனுப்பும் இரண்டாம் கருவி

தேர்

எத்தனைபேர் கூடி இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்!

கண்கள்

இரண்டே புள்ளிகள்தான்
ஆனாலும் அழகிய கவிதை
அவள் கண்கள்...!

சுமை

பாரம் தூக்கும் தொழிலாளி
அங்கலாய்த்துக் கொண்டான்
தன் குழந்தையின் புத்தக பாரம் கண்டு

என் உலகம்

சிறு குழந்தையை பார்த்து
"இவ்உலகை விவரி ?" என்றேன்

அவளின் ஒற்றை வரி பதில்

" என் அன்னை "

Vaan Nila


எனக்கு பிடித்த எல்லாமே
தொலைவில் தான்
தொட முடியாத உயரத்தில் தான்
நீல வானமும்
நிலவும்
ஏன் நீயும் கூட

Piranthu nal Vazhthu

இருபதே
இல்லை என்று
உன் உருவம்
சொன்னாலும்
இதோ இன்று
இன்னொரு
பிறந்த நாள் உனக்கு
பூங்குழலி
உன் புன்னகை மின்னும்
பூ முகமும்
பூ விழியும்
என்றும் மாறாமல்
எழில் நிலவாய்
வண்ண மலராய்
குளிர் தென்றலாய்
கோடை மழையாய்
நலம் பெருகி
வளம் வளர்ந்து
வாழ்ந்த நாட்களை விட
வாழும் நாட்கள் பெருகிட
அன்பான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்

Nilaa Pen

நினைவுகளில்
கோட்டை கட்டி
நிலவுப் பெண்ணே
அதில் உன்னை அமர்த்தி
நிதம் பார்த்திருக்கிறேன்
கனவுகளில் கூட
உனக்கு கவிதை சொல்லி
காத்திருக்கிறேன்.
கானல் நீராய்
கடந்து விடுமோ கனவுகள்
என்றே நினைத்திருந்தேன்

ஆனால்

சம்மதம் இல்லா
என் சண்டைகளும்
சத்தமில்லா
உன் மௌனங்களோடும்
கழிந்த அந்த நாழிகைகள்
கனவுகள் அல்ல
நெஞ்சோடு
நீங்காத நாழிகைகள்
நினைக்கும் போதே
இனிக்கும்
தெவிட்டாத தேன் துளிகள்
ஆயிரம் விண்மீன்
கண்ணைப் பறித்தாலும்
என் மன வானில்
ஒரே வெண்ணிலவு
நீ தான்
என் நிலவுப் பெண்ணே

Poojai Malar

தீப்பந்தம் அல்ல
பெண்ணே - நீ
அகல் விளக்கு
அணையாமல்
அணைத்து
செல்ல வேண்டிய
கற்பூர தீபம் .........

காட்டுப் பூவல்ல
கண்ணே - நீ
பூந்தோட்டத்தில்
பூத்துக் குலுங்கும்
பூஜைக்குரிய மலர் .......

Ithaya kovil

ஏன் விழுந்தாய்
என் விழியில் - நீ
அன்றே தொலைந்தேன்
உன் நினைவில் - நான்

உன் நினைவு
மலைகளில்
உளி கொண்டு
உன் உருவம்
செதுக்கி
என் இதயக்கோவிலில்
இருத்தி வைத்துள்ளேன்

நிதம் நிதம்
நான் கண்டு
தரிசிக்க
நிஜமாய்
என்று வருவாய்
என்னோடு

Ematram


ஏமாற்றம் என்றாலும்
என் வாழ்வில் - நீ
மாற்றம் தான்
மாற்றம் தந்தவள் தான் - நீ

Vasantham

வானவில் போல
வந்து போகச்
சொன்னேன் - அன்று

வண்ணத்
தாமரைப் போல
வருவாயோ - இன்று

காத்திருந்து
காண்பது
இனிமை

பிரிந்திருந்து
சேர்வது
சுகம்

சுந்தரப் பைங்கிளியே
உன் வருகை
எனக்கு வசந்தம்

Vaanavil

நாளை என்பது
நிச்சயமில்லை...
இன்று என்பது
நிற்பதும் இல்லை...

நிலைப் பொழுதும்
நீ இல்லாமல்
எனக்கு
நிம்மதி இல்லை...

உன்னைக் கண்டால்
மட்டும் ஓய்ந்திடுமோ
என் மனதின்
பிரளயங்கள் பெண்ணே...

கணப்பொழுது
கண் சிமிட்டி
மறைந்து போகும்
வானவில் போல
வந்தாவது
போய் விடேன்

சித்திரை திருநாள்

ஆதவன் அனலாய் அவதரிக்க
தீமைகள் எரிந்து,
நன்மைகளை மேலும் செம்மையாக்கும்
திருநாள்.
உழைப்பால் உயரும் தமிழரின்
வாழ்வெல்லாம் வசந்த காலமாய்
ஒளிர வைக்கும்
இன்பத் திருநாள்.

நாணல் என நிலம் நோக்கும்
வெட்கத்தில் கீழ்வானம் தோற்க்கும்
தமிழ்ப் பெண்ணின்,
புன்னகைப் போல்
மத்தாப்புப் பூக்கும் சித்திரைத் திருநாள்.

வள்ளுவனின் வாக்காய்
சோழரின் வம்சமாய் வாழ்ந்திருக்கும்,
திரைக் கடல் ஓடி திரவியம் தேடும்
தமிழருக்கும்,
தாய்மண்ணை தங்கமாய் மாற்றி கொண்டிருக்கும்
மறத்தமிழருக்கும்
என் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

எல்லைக்கோடு

இதயமே!
உன் கண்ணீருக்கு காரணமென்ன?
காதலா...? இல்லை காலமா...?
இரண்டுமே... உன் எல்லைக் கோட்டுக்குள் இருக்கவேண்டும்!
இல்லையென்றால்...
உன் வாழ்கை கோடு முடிந்துவிடும்...rvm!

EN ORUVANAI THAVIRA.!.!.!...

உன் தலையில்
இருந்து விழும்
பூவை கூட
தரையில் விழும்
முன்
கையில் ஏந்தி
கொள்வேன்
பூவுக்கு
வலிக்கும் என்றா
இல்லை
உன்னை விட்டு
வந்த எந்த
உயிருக்கும்
வலிக்க கூடாது
பெண்ணே...!
என்
ஒருவனை தவிர !.!.!....

Post a Comment (0)
Previous Post Next Post