NINAIKKA VAITHA VELAI...! - PITCHAIKKARARKAL - அன்பு செல்லமே

NINAIKKA VAITHA VELAI...!

மயக்கும் வண்ண மாலையிலே !...
என்னை மயக்க வந்த
பூங்குயிலே !...
என்று நினைக்க வைத்த வேலை !...
இன்று நீ அணிந்து வந்த
பச்சை நிற பாவாடை சட்டையின்
வேளை..!
பாவையே.!.!.!...

PITCHAIKKARARKAL

வேலை பார்க்காமல்
நாட்சம்பளம் வாங்கும்
அதிகாரிகள்.....!
பிச்சைகாரர்கள்

அன்பு செல்லமே

அன்பு செல்லமே.. உன்னோடு தான்
என்றென்றும் வாழ விரும்பினேன்.
எந்தன் நெஞ்சிலே நீ வந்ததும்
என்றென்றும் உன்னை நினைக்கிறேன்.
உன் சுவாசம் தீண்டும் போது
பெண்மையாகிறேன்.
உன் பார்வை நீளும் நேரம்
வெட்கம் கொள்கிறேன்.
இருந்தும் என் நெஞ்சிலே - சில காயமென்னவோ
நீ வந்த சுவடின் வண்ணமோ ?

கண்கள் மூடினேன்
அந்த இருளில் தெரிகிறாய்.
மேகமூட்டமாய் என் நெஞ்சில்
மெல்ல வருடினாய்.
என் இதழ்கள் பேசும் வார்த்தை
உன் பார்வை தின்னுதே.
நீ மெல்ல சீண்டும் போது
என் உள்ளம் மகிழுதே.
நானாக இருந்தபோது - எனக்கு
நாதியில்லையே.
நீ வந்து சேர்ந்த பின்னே - நாம்
பாதியில்லையே.
இருந்தும் என் நெஞ்சிலே - சொல்
காயம் நேருதே.
உன் குரல் கேட்குமந்த நொடியில்
காயம் மாறுதே.

மேகம் என்பது வெறும்
பெண்ணிற்குவமை இல்லை,
உன்னை கண்டதும் என் எண்ணம் மாறுதே.
மேக கூட்டமெல்லாம் - உந்தன்
அன்பின் சின்னமோ?
என் சுவாசம் தீண்டும் போது துளி வீழுதே.
உண்மை காதல் எங்கு எங்கு ?
நானும் தேடினேன்.
என் ஜீவன் கொள்ளும் காதல்
உண்மை என்கிறேன்.
என் ஆசையெல்லாம் சொல்ல இந்த
ஜென்மம் போதவில்லை.
இருந்தும் உன் இதழில் சொல்ல நினைக்குறேன்..
இருந்தும் என் நெஞ்சிலே.
சில வெட்கம் குட்டி போடுதே.
உன்னை சேருமந்த நாளை தேடுதே!

கற்பனை கூட

இது என்ன ஈர்ப்பு?
என்னவள் காந்த கண்களில்.
விழுந்தும் அடிப்படவில்லை
என்னவள் கன்னங்குழியிகளில்.
சுட்டெரிக்கும் சூரியனில் விண் மீன்ன்கள்
என்னவள் வியர்வை துளிகள்.
நறுமணமின்றி உதிர்கிறதே-மலர்கள்?
என்னவள் புன்னகை பூக்கையில்.
கவிதை பேசும் ரோஜாப் பூ
என்னவள் இதழ்களில்.
புதுப்புது இலக்கியம் தோன்றுதே
என்னவள் வெட்கத்தில்.
ஒப்பனையில்லா வென்னிலவோ
என்னவள் பூ முகத்தில்!
கற்பனை கூட செய்ய முடியாது
இந்த பூ உலகத்தில்!

பிரம்மா

உழைப்பென்ற சொல்லே
பிழைப்பின்றி உழைத்தவன்.
களைப்பென்ற சொல்லே
கலைந்திட உழைத்தவன்.

பூமியை தோண்டி
உண்மைகள் உரைத்தவன்.
பூவுலகெல்லாம் தன்
வியர்வையால் செய்தவன்.

மணிக் கணகில்லாமல்
அயராது இருப்பவன்.
மானுடன் வாழ்ந்திட உண
வெல்லாம் விளைத்தவன்.

சிந்திய வியர்வையில் கூட
சிக்கனம் இல்லாதவன்.
கடல் கடந்து உழைத்தும்
நம் தலைக் காப்பவன்.

கைரேகைகள் தேய்ந்தும்
கவலைகள் மறப்பவன்.
தன் கையே தன் நாட்டிற்கு
உதவி என்ற உண்மை உரைப்பவன்.

மரணத்தின் படுக்கையிலும்
உழைப்பையே நினைப்பவன்.
உழைப்பதையே வெறும்
கனவாய் நினைத்தவன்.

இறைவன் உரைத்தை
பாதையில் இன்றும் நடப்பவன்.
தன் ரத்தத்தை
கொடுத்து தான் என்றும் வாழ்பவன்.!

காதல் பிள்ளை

பிரம்மன் என்ற சிற்பி
செய்து வைத பெண் சிலையோ?
வானவில்லை கொண்டு
வண்ணம் தீட்டும் ஓவியமோ?
பாரதி சொன்ன தமிழ் மகளாய்
நாகரிகம் தெரிந்தவளோ?
எந்தன் நெஞ்சை பறிக்கொடுத்தேன்
இது கனவோ? நினைவோ?

உலகில் உள்ள அதிசயமெல்லாம்
உன்னை கண்டு மலைக்கிறது.
ஏனோ அதுவெல்லம் இன்று
உன் அழகை தினம் ரசிக்கிறதோ?
மார்கழியில் சிந்தும் பனிதுளியில்
உன் பூ முகம் தெரியும் பாரு.
இடி மினலும் புயலும் கூட
உன் அழகால் வருமே நூறு.
நீர் வீழ்ச்சியில் தோன்றும்
வானவில்லாய் எனக்கென பிறந்தாயோ?

பெண்மையென்னும் மேகம்
நெஞ்சில் மெதுவாய் பொழிகிறதே.
அந்த மேகம் சிந்தும் துளியில்
என் காதல் தெரிகிறதே.
சுவடில்லா விண்மீன்கள் - அந்த
வானம் நிறைகிறதே.
சுவடின்றி வந்தாயே.. - என்
உள்ளம் மகிழ்கிறதே!
நான் தவம் செய்து பெற்றேடுத்த
காதல் பிள்ளை நீ தானோ?

NEE UN KATHALAI SONNA PIRAGU...!

வண்ணத்து பூச்சியின்
வாழ்நாள் கூட
வேண்டாம் ...!
என்னிடத்து
நீ உன் காதலை
சொன்ன பிறகு ....!

KADIKARA SANDAI

சண்டை போட்ட
கடிகார
முட்கள்
திரும்பவும் ஒன்று
சேர ..!
ஒரு மணி நேரமாகும் ...!
ஆனால்
உன்னை விட்டு பிரிந்து
ஒரு நொடி கூட
என்னால்
இருக்க முடியாது .....!
பெண்ணே. .!.!.!

KAGAM POL

வற்றிய குளத்தில்
நீரை தேடி
அலையும் காகம்
போல் ...!
ஈரமில்லாத உன்
இதயத்தில்
நான்
என்னை தேடி
அலைவதும் சுகம்
தான்...!.
அன்பே .!.!.!

NEELA KADALIN AALAM

நீல கடலின்
ஆழத்திலிருந்து
அதிகாலை
வேளையில்
சூரியன்
உதிக்கும்
காரிருள் மறையும் ...!
அது போல்
என்
மன கடலின்
மையத்தில் இருந்து
மலரொன்று
மலர
என்
துன்பம்
துகளாகிறது....!
அந்த மலர்
நீ தானடி....!

UN MOUNATHIL THAN!...

வானவில்லின்
வண்ணங்கள்
பிறப்பது
வானத்தில் என்றாலும்
அடைவது மண்ணை
தான்...!
நான் வாழ்வது
மண்ணில் என்றாலும்
நான்
இருப்பது உன்
மனதில் தான் ..!
அதை
அழகாய் மறைப்பது
உன்
மௌனத்தில் தான்...!

UNNAI PADAITHAN...!

கடவுள்
எனக்காக
காற்றைப் படைத்தான்!
கடலைப் படைத்தான்!
நெருப்பைப் படைத்தான் !
விண்ணைப் படைத்தான்!
மண்ணைப் படைத்தான் !
இவ்வைந்தையும்
சேர்த்து
எனக்காக
உன்னைப் படைத்தான் ...!
பெண்ணே ...!
ஆனால்
நீயோ
காற்றாக கரைந்து!
கடலோடு மறைந்து!
நெருப்போடு எரிந்து!
விண்ணோடு பறந்து!
மண்ணோடு புதைந்து..!விட்டாயே ..!
ஏனடி...!

PANIPUKKALAE...!

பனிப் பூக்களே...!
நீங்கள் விழித்து
விட்டிர்கள்
என்னவள்
இன்னும்
விழிக்கவில்லையே..!ஏன்
அவள் இன்று
உங்களை
சூடுவாளா ..!மாட்டாளா..!
என்று கவலையோ ..!
விடுங்கள்
கவலையை ..!
அவள்
நிச்சயமாய் இன்று
உங்களை
சூடுவாள்
ஏனேன்றால் இன்று
என்னை
பார்க்க வருவதாக
கூறி இருக்கிறாள் ...!

முதல் முத்தம்

தாயின் அரவணைப்பை ,,,,,
தந்தையின் பாசத்தை ,,,,,
அவனின் காதலை ,,,,

உணர்விலே உறைந்து
உயிரிலே கலந்து
உருகுகிறேன்.....!!!

மீண்டும் அந்த முதல் முத்தம்,,,!!

நட்பு

காதல் எனும் தலைப்பில் எழுத சொல்லியிருந்தால்...
உடனே எழுதியிருப்பேன், கல்லறையென்று!
நட்பெனும் தலைப்பிலல்லவா எழுத சொல்லிவிட்டாய்...
எழுதால் எழுதக்கூடியதா நட்பு? இதயதுடிப்பல்லவா அது...
துடிப்பை உணரதான் முடியும்...rvm!

Thedal

தேடல்

பசுமை கண்ணுக்கு
இனிமை .....
பாடல் செவிக்கு
இனிமை.....
சுத்த காற்று சுவாசிக்க
இனிமை ........
தேடல் வாழ்வில்
இனிமை ......

குயிலின் தேடல்
ஒரு கூடு .......
மயிலின் தேடல்
மழை மேகம் .....
குழந்தையின் தேடல்
தாயின் மடி ....
குமரனின் தேடல்
குமரியின் ஸ்பரிசம்.

பொருள் தேடல்
வளமை தரும்
புகழ் தேடல்
பெருமை தரும்

என் தேடல் என்ன?
தெரியவில்லை
பெண்ணே ...
எனக்கு
தெரிந்தால் சொல்
கண்ணே
அதை நீ எனக்கு


Nee Vendum

நீ இல்லை என்றால்
வாழ்கையும் இல்லை
என்பதல்ல ......

நீ எனக்கு
வசந்த பூங்காற்று
உன் நினைவெனக்கு
செந்தமிழ் தாலாட்டு
உன் புன்னகை
பூ மழை தூவும்
என் காதல் தேசம்
உன் பூவிழிகள் தான்
புதைந்து போன என்
கவிதைகளை
புத்துயிர் பெற செய்தவை

நீ இல்லை என்றால்
வாழ்வில்லை என்றில்லை
பூந்தோட்டமல்ல
என் வாழ்வு
மலர் பாதைகளும் அல்ல
என் பாதைகள்
மானுடத்தின் துன்பங்களும்
மகிழ்ச்சியான தருணங்களும்
உண்டு என் வாழ்விலும்

தவறில்லாமல்
வாழ நினைத்து
தவறியவர்களில்
நானும் ஒருவன்
நானும் வாழ்ந்து
பிறர்க்கும்
உதவிட விருப்பம்
எனக்கு
என் வாழ்வு
எனக்குண்டு

என் தவறுகள்
யாருக்கும் காயமில்லாமல்
என் வாழ்வில்
நீ வேண்டும்

நீ இல்லை என்றால்
வாழ்வில்லை என்றல்ல
நீ என் மனவசந்தம்
வாசம் வீசும் வண்ணப் பூ மலர்
எனவே தான்
நீ வேண்டும் எனக்கு

Pun siripu

புன்சிரிப்பு

பசுமையும்
பனியும்
மலரும்
சோலையும்
மலையும்
அருவியும்
குயிலின்
ஓசையும்
குருவியின்
பாஷையும்
குழந்தையின்
சிரிப்பும்
இதயத்துக்கு
இதமானது

ஆனால்
பெண்ணே .....
இவையெல்லாம்
இணையில்லை
உன் ........
புன்சிரிப்புக்கு முன்னே

vanam

தினம்
உன்னை
தேடும்
மனம்....

நீ
இல்லை
என்றால்
என்
மனம்
வனம்.....

vanam

தினம்
உன்னை
தேடும்
மனம்...

நீ
இல்லை
என்றால்
என்
மனம்
வனம் ...

Post a Comment (0)
Previous Post Next Post