மழைத் துளிகளே! - கெளரவ நட்பு - உன் பிம்பத்தை

மழைத் துளிகளே!

ஓ!...
மழைத் துளிகளே!
நீங்கள் அதிஷ்ட்டசாலிகளா...?

உங்களில் எத்தனை பேர்
புண்ணியம் செய்தீர்கள்...?

ம்!...
புண்ணியம் செய்த துளிகள் மட்டுமே
இந்தப் புனிதம் நிறைந்தவளின்
மேல் விழுவீர்கள்!

கெளரவ நட்பு

எதற்காக என்று புரியாத
சில கேள்விகள்
சற்றும் பொருத்தமற்ற
சில பதில்கள்
சில மன்னிப்புகள்
பல நன்றிகள்
ஒவ்வாமைகள்
ஒத்துழைப்புகள்
மிகுந்த கெளரவமாவே
காணப்படுகின்றது நம் நட்பு....

உன் பிம்பத்தை

உன் பிம்பத்தை சுமப்பதனால் தானோ
இந்த உலகம் என் கண்களுக்கு அழகாய் தோன்றுகிறது

உன்னையே நினைப்பதால் தானோ
நானும் காதல் யோகி ஆனேன் .

உன்னை போல் ஒருத்தியை காண்பதால் தானோ
எனக்கு அந்த ஒருத்தியையும் பிடித்துள்ளது.(சரி சரி இது கற்பனை முறைக்காதே )

உன் விழிகள் வருடியதால் தானோ
என் கன்னம் சிவந்தது.

உன்னை நினைத்த நானே இப்படி கவிதை எழுதிகிறேனே
பாவம் அந்த பிரம்மன் உன்னை படைத்தவன்
இந்நேரம் பிரம்மலோகத்தில் பேப்பர் பஞ்சம் வந்து இருக்கும் ........

உள்ளம்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி -
நெஞில் தூங்கிக் கிடப்பது நீதி

கண்ணமாவின் காதல்

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)


நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் - நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே ! - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)

உன்னை பிடித்திருக்கிறது

உன்னை பிடித்திருக்கிறது காரணம் தெரியாமல்
மல்லி மாலையில் மலரும் தெரிவதில்லை
மணமது விசும் மறைக்கமுடியாமல்
என்னுள் மலர்ந்த மலரா ?
நேசம் வருகிறது மறைக்க முடியாமல் .....

வாசம் விசும் உன் பார்வை
தேசம் கடந்து மடல் கொண்டுவருகிறது ...

கொலுசு தவழும் பாதம்
புது வரிகளை மிச்சம்
வைத்து போகிறது என் கவிதைக்காக ....

வானவில் பேசுகிறது இன்று
எட்டவது வண்ணம் பிறக்குமாம்
உன் கார்மேக குழல் கண்டு .....

சில வரி உரையாடல் போல்
நீண்டு கொண்டே போகிறது நிமிடங்கள்
உன் தரிசனம் காணாமல் என்கிறது என் விழிகள் .....

வழி விழி இவை அனைத்தும்
உன்னுடன் வரு மொழி ஒளி
இவைக்கு தானோ தவமிருக்கிறது .....

உன் பாடசாலை இன்னுமொரு காவியம் சொல்லும்
அழகிய நினைவுகள் தவழும் அங்கே
ஏன் நீ படித்து முடித்தாய் என்ற ஏக்கத்துடன் ......

பூக்களும் காயம் செய்யும்

போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு
ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!
காதல் தானடி
என்மீதுனக்கு?
பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?
தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?
நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?
இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்
இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -
என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -
வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -
சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்
வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -
நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.
சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?
நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்
உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்
இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி
உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்
காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது
காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்
இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?
என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே
உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?
இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?
என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ
உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது
நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது
பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்
இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்
என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி
நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்
நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்
ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்
உணர்ச்சி பழையது
உற்றது புதியது
இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை
தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை
என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்
உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்
தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்
புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்
நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது
உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது
இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்
சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.

உன் மனம்

என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்

உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்

பூகம்பம்

பூமியன்
ஆவேசம்
பூகம்பம்

புன்னகை மட்டும்

புன்னகை மட்டும் காயப்படுத்தவில்லை
உன் அன்பும் தான் நீங்காத
உன் இதய சிறை தந்துவிட்டது .....
தவித்து முழித்தால்
குழந்தை ஆக்கி என் வயதையும் கொன்றுவிட்டது ....
தத்தி தவழும் என்னக்கு
நடை கற்று கொடு
உன் மெலிய விரல் கொண்டு ...
இல்லை என்றால் அழுவேன் .....
ஆசை முத்தம் தர வேண்டும்
என் அழுகை நிறுத்த .....
என்ன செய்ய போகிறாய் .....

காதலிக்கும் தேவதை

உனக்காக இருக்கவா..?
உன்னோடு இருக்கவா..?
என்றால்

உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு

நியமாக உன்னோடு
வரமுடியாமல்
போனாலும்

என் நிறமாவது
வருகிறதே
உன் நிழலாக

நீ
பயத்தோடு
வருவதைக் கண்டாலே

நான்
தனியா பேச வந்ததை
மறந்து விடுகிறேன்

நீ
படபடப்பதை
யாரும் பார்த்தால்
பயத்தை விரும்பும்
கோழை என என்னை
நினைக்கப் போறார்கள்

நீ என்னைக்
காதலிக்கிறாய்
என்பதை

என்னால்
நம்பமுடியாமல்
இருக்கிறது

பொறுக்கியை
எப்பிடி தேவதை
காதலிக்கும்..?

நிமிடங்கள் நின்ற

நிமிடங்கள் நின்ற விழிகளில்
நில்லாது வழியும் துளிகள்
விழிகள் பார்க்காமல் நடிப்பதால் ..........
நடிப்பது உன் மனம் தானே
என்னை விரும்பும் உன் விழிகளை
ஏனடி சிறை வைகிறாய் .....
பாவம் அவைகள்
உன்னை கேளாமல் என்னை பார்க்கிறது ...
அலைகள் கரையை தொட்டுச் செல்வதுபோல் .......

உன்மத்தன்..!

அவள்,
கரு விழியாள்
பெரு விழியால்
ஒரு வழி இல் - நம்
உயிர் வலியில்

இவன்,
பெண் விழியால்
விதி வசத்தால்
மதி இழப்பால்
மது ரசதால்
பெரும் பழியால்
மனக் கசப்பால்
பவுசு கெடுப்பார்..!

கணக்கை இங்கே யார் காணுவார்?

வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு, இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்???

யாரோ அவள்

யாரோ அவள் கண்ணிமை மறக்க வைத்தவள்
யாரோ அவள் என் சுவாசத்தின் கீதமானவள்
யாரோ அவள் வண்ணத்தின் நிறமானவள்
யாரோ அவள் வாசலில் கோலமானவள்
யாரோ அவள் வார்த்தைகளின் சொல்லானவள்
யாரோ அவள் கண்ணாடி பிம்பமானவள்
யாரோ அவள் நினைக்காமல் நினைவில் இருப்பவள்
யாரோ அவள் நிலவின் குளிரானவள்
யாரோ அவள் இன்னிசையின் சுரமானவள்
யாரோ அவள் சோலைகளின் பசுமையானவள்
யாரோ அவள் வாழ்கையின் வரமானவள்
யாரோ அவள் மலரின் மனமானவள்
யாரோ அவள் மாலைகளில் மலரானவள்
யாரோ அவள் விடியலின் வெளிச்சமானவள்
யாரோ அவள் சிறகுகளுக்கு பறக்க கற்றுத்தந்தவள்
அவளே என் சுகமான நினைவானவள்.

நீ வெக்கப்பட்டு

நீ வெக்கப்பட்டு மறுத்தால் என்ன
உன் விட்டு தலையனை சொல்லிவிடும்.
அந்தச் செல்லக் கொஜ்சலை ...

உனக்காய் உனக்காய் மட்டுமே!

அன்பாக அரவணைக்கும்
உன் தோள்களிலே
தலை சாய்த்து
உன் மார்பு சூட்டில்
குளிர் காய்ந்து
உன் மடி மீது
முகம் புதைத்து

வாழப்போகும்
அந்நாட்கள் தரும்
இன்பத்தை……
சொர்க்கத்தை……

இன்னொரு ஜென்மம் எடுப்பினும்
தரமுடியுமா
இவர்களால் எனக்கு?

உன்னாலே உயிர் பெற்றேன்
உன்னாலே உணர்வுகளை
சுவாசிக்கின்றேன்

உனை பிரிவதனிலும்
பிரிவது என் உயிராயிருக்க
ஆசைப்படுகின்றேன்
அன்பனே
அன்பானவனே

அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!

என் ஒவ்வொரு நாளையும்
உனக்காய் உனக்காய்
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன்
நீ எனக்குள் வாழ்வதால்!

உனை சிந்திக்க மறந்தால்
என் இதயம்
சின்னாபின்னம்தான்
உயிர்ப்பதாயினும்

உனக்காய் உயிர்க்கவே
ஆசைப்படுகின்றேன்
உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்

என்னவனே எனக்குள்ளேயே
தொலைந்துவிடு
என் இறுதிவரை!

துருவங்கள்..!

இரவும் பகலும்
நீரும் நெருப்பும்

வடக்கும் தெற்கும்
வானும் மண்ணும்

நன்மையும் தீமையும்
நாமமும் பட்டையும்

மதமும் மனிதமும்
சாதியும் சமத்துவமும்

எதிர் துருவங்களே - எப்போதும்
இவைகள் இணைவதில்லை

வைரமுத்துவின் சுனாமி கவிதை

ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா

உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?

உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்.

எவ்வளவு பிடிக்கும்

எவ்வளவு பிடிக்கும் என்று சொல்லட்டுமா
அழுகின்ற குழந்தையை அரவணைக்கும் தாயின் அன்பை விட
பாலைவனம் ஏங்கித் தவிக்கும் மழை நீரை விட
தேன் உன்ன காத்து கிடக்கும் தேனீ கடமை விட அதிகமாக
எளிமயாக சொன்னால்
அன்னையை காணாமல் அழுகின்ற குழந்தை இடம்
உன் அன்னையை எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டால்
அது தன் இரு கைகளை விரித்து இவ்வளவு என்று சொல்லி
தன்னால் அதனை முழுதை சொல்ல முடியாமல் விழிக்கும்
அது போலத்தான் நானும் இப்பொழுது....

Post a Comment (0)
Previous Post Next Post