என்னிடத்தும் சொல்லாமல்...!
உண்மையை
மறைக்க மாட்டாய்
உன் வீட்டில்
என்னிடத்தும்
மறைக்கவில்லை
ஆனால் என்ன
ஒரு துணிச்சல்
நான் என் காதலை
உனக்கு கூறினேன்
ஆனால்
மறைத்து விட்டாயே
உன் காதலை
வீட்டிலும் சொல்லாமல்
என்னிடத்தும் சொல்லாமல்...!
தண்ணீரும் அழகு தானடா...!
பல வண்ணம் கலந்த
கலவை மட்டும்
அழகல்ல...
ஒரு வண்ணம்
கொண்ட
வெண்ணிலவும்
அழகு தான்...
ஒரு வண்ணம் கொண்ட
நள்ளிரவும்
அழகு தான்...
ஒரு வண்ணம் கொண்ட
கடல் கூட
அழகு தான்...
இதையெல்லாம்
விட
உன்னிலிருந்தும்
என்னிலிருந்தும்...!
வெளிப்படுகிற
கண்ணீர் என்ற
நிறமில்லா
தண்ணீரும் அழகு தானடா...!
என் கவிதையும் என் கற்பனையும் என் கனவும் ..!
கவிதை எழுத
நினைத்து
கற்பனையை
எழுப்பினால்
அது
கனவிடம்
தஞ்சம்
அடைகிறது
சரி என்று
கனவிடம் தூது
சென்றால்
அது
உன்
நினைவிடமே
செல்கிறதடி..!
என் கவிதையும்
என் கற்பனையும்
என் கனவும்
எல்லாமே
நீ தானடி...!
கண் கொண்டு பார்க்க மாட்டேன்...!
இதயம்
இருக்கிறதா
என்று உன்னிடம்
நான் கேட்க மாட்டேன்
அது இருக்கிறதா இல்லையா
என்று தெரியாமல் இனிஉன்னை
ஒரு காலும் கண் கொண்டு பார்க்க மாட்டேன்...!
சில பெண்கன்!!!
என் சில பெண்னின் மனதை பற்றி புறிந்துகொள்ள முடியவில்லை என்று இபோதுதான் புரிந்து எனக்கு.
என் அவளிடம் மனதே இல்லை!!!!!..
சில பெண்கன்
சுருங்கிய மலர்களே தெறிக்கிறது...!
திரும்பிய
பக்கமெல்லாம்
அரும்பிய மலர்களாய்
காட்சியளிக்கிறது
விரும்பிய
உன்னிடத்து
மட்டும் இருந்து
சுருங்கிய
மலர்களே
தெறிக்கிறது...!
மரம் வளர்ப்பது எப்படி...!
மரம்
வெட்டி உழைத்த
பணத்தில்
தன் பிள்ளையை
அனுப்பினான்
மரம் வளர்ப்பது எப்படி
என்ற பயிற்சிக்கு...!
புதை குழி பள்ளம்...!
காதல் எல்லாம்
காட்டாற்று வெள்ளம்
காணாமல் போனது
கவிஞனின் உள்ளம்
தடுமாறி விழுந்தது
புதை குழி பள்ளம்...!
என்னை மன்னித்துவிடு.
ஒரு வயிற்றில் பிறந்தோம்
ஒன்றாக இருந்தோம்
ஒன்றாக வளர்ந்தோம்
ஒன்றாக சிரித்தோம்
ஒன்றாக அழுதோம்
ஒன்றாக உழைத்தோம்
ஒன்றாக உயர்ந்தோம்
இருப்பதை உண்டோம்
இடர்களை பகிர்ந்தோம்
எத்தனைமுறை சண்டையிட்டாலும்
அத்தனைக்கும்மதிகம் அன்பானோம்
நீ இருக்கும்போது உன்னை யாசித்தேன்
நீ இல்லாதபோது உன்னை யோசித்தேன்
உலகமே நிலா அடியை தேடுகிறது - நான்
உன் காலடியை நாடினேன்
-இன்று-
எதிரில் நீ வந்தாலும்
தாமரை இலை
தண்ணீராய் சந்திக்காமலே
கண்ணீரோடு உனை கடக்கிறேன்
உன்னிடம்
பேச துடிக்குது மனசு
எனை வெளியேற்றிய
அதிர்ச்சியில் தடுக்கிறது புத்தி
யான் என் செய்வேன்
என் சகோதரனே?
எனக்கொரு மனமுண்டு
அதிலும் சில ஆசையுண்டு
நாளைக்கு மாற்றமுண்டு
எனக்கு வெற்றியுண்டு
அன்று
நான்
வருவேன்
வெற்றிகளை
கொண்டாட
'உன்னோடு'
அதுவரை
என்னை
மன்னித்துவிடு................................
மனைவி
கவிதை எழுதச் சொன்னாள்
என் மனைவி... தன்னைப்பற்றி
காதலிக்கும் போது உன்னைப்
பார்த்தால் கவிதையாய் வருதுன்னீங்க
இப்போ வரலையா என்கிறாள்
இப்போது வரும் நினைவுகளைக்
கவிதைஎன்று நான் எழுதினால்
எனக்கு வீட்டில் மதிப்பு இருக்குமா?
கவிதையிலும் உண்மையல்லவா சொல்லிப்பழகிவிட்டேன்!
போகிறது பொய்யாவது எழுதலாம் என்றால்
பொய் சொன்னால் பொசுக்கென்று கண்டுபிடித்து விடுகிறாள்! காதலிக்கும் போது சொன்ன பொய்களை இரசித்தாள் இப்போதோ என்னிடம் எப்படி பொய் சொல்லலாம் என்று சண்டைக்கு வருகிறாள்.
உண்மையைச் சொல்லிவிடலாம் என்றால்
என் அம்மாவுடன் அவள் போட்ட சண்டை நினைவுக்கு வருகிறது.. அதைப்பற்றிச் சொன்னால் இன்னொரு சண்டைதான் வரும் ... பணத்தை அவள் வீண்செலவு செய்தது நினைவுக்கு வருகிறது... அவள் நீங்கள் வீணடிக்கவில்லையா என்பாள்... அவள் சமையல் சிலவேளைகளில் சகிக்கவில்லை என சொல்லத் தோன்றுகிறது... அப்புறம் கிடைக்கும் சோத்துக்கும் வேட்டு வந்துவிடுமோவென அச்சம் மேலிடுகிறது.
aa
சே சே உண்மை வேண்டாம் மீண்டும் பொய்யே செல்லிவிடலாம் என்றேன்
நீ பேரழகி என்று சொல்ல ஆரம்பிக்கும் போது
நான் பேருக்குத்தான் அழகி எனக்கு அந்த நகை வாங்கிக் கொடுக்கவில்லை என்று அவள் மூக்கை உறிஞ்சுவாளோ எனத் தோன்றிது
நீ புத்திசாலி என்று சொல்லலாம் என யோசித்தேன் அப்புறம் ஏன் உங்கள் பிள்ளை என்னைப் போல அழகாயும் உங்களைப்போல புத்தியுடனும் பிறக்க வேண்டும் என்றீர்கள் என்பாள். என் பிள்ளையும் அவள் அளவுக்குப் புத்திசாலி என்றால் என்கதி என்னவாவது?
நான் புத்திசாலியாய் இருந்தால் போயும் போயும் உங்களுக்குக் கழுத்தை நீட்டியிருப்பேனா என்கிறாள்.. அப்படியென்றால் அவள் புத்திசாலித்தனத்தைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்
ஏதாவது கவிதை எழுதியாக வேண்டும்
யாராவது உதவி செய்யுங்களேன் என்று கேட்கலாம் என்றால் ... கவிதையிலும் காப்பியா உங்கள் சொந்த மூளையை எப்போதுதான் உபயோகப் படுத்துவீர்கள் என்கிறாள்
காதலிக்கும் போது அழகான இராட்சசி என்று சொன்னதை இரசித்தாள் ஆனால் இப்போது அதைச் சொன்னால் அவள் காதில் இராட்சசி மட்டும் கேட்கிறது .. எவளையோ அழகி என்று சொல்வதைப் போல நம்பிக்கை இல்லாமல் பார்க்கிறாள்... இப்போதொல்லாம் கண்ணாடியில் முகம் பார்க்கிறாள் போலும்!
என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள்!
அவளும் என் தாய்தானே
தொப்புள் கொடி உறவுகள் அறுத்து
என் உயிர்கொடி நெஞ்சில் சுமந்தால்
அவள் என் உயிர்
அடுத்த பிறவியை என் கண்முன்னே
காட்டியதால் அவள் என் கடவுள்
அவள் மடியில் என்னைதாலாட்டியதால்
அவள் என் தாய்
பூவுக்கும் பூவைக்கும் ஒற்றுமை
பூக்கள் சிரித்தாள் சருகாக உலரும்
பூவை சிரித்தாள் காதலாக மலரும்
இசையோடு வாழ்க்கை
இசை இருக்குது
அம்மாவின் தாலாட்டில் இசைந்தாடும்
தூளிக் காற்றில் மயங்காத மழலை உண்டோ.
ஆலையத்தின் கூட்டில் ஆராதனை
பாட்டில் உருகாதோ மானிடநெஞ்சம்.
இலைமீது தென்றல் மோதி இளைப்பாறும்
நெஞ்சம் கோடி உறங்காதோ நிழலைத்தேடி.
ஈமத்தின் சாமத்தில், ஓலமிடும் நேரத்தில், மிரட்டாதோ உடுக்கையின் தாளம்,
உரல் மீது உலக்கை குத்தி, தொடர்ந்துவரும் மங்கையின் சுதி, ஒதுங்காதோ உரலுக்குள் உமி.
ஊடல் கொள்ளும் ஆண்மையின் வீரம்,
அலைபாயும் பெண்மையின் கானம்,
அடங்காதோ சாமத்தில் காமம்.
என்னவள் மௌனம் கொள்ள, என் இதயம் வெளியில் துள்ள, இசைக்காதோ
அவள் காதினில் மெல்ல
ஏற்றம் போடும் காளைச் சலங்கை,
இரைந்து செல்லும் வாய்க்கால் வழிச்சாலை, தலை அசைக்காதோ வளர்ந்திடும் சோலை.
ஐந்தும் இணைந்தது பைந்தமிழ் இலக்கியம், உலகின் மகிழ்ச்சியோ இயல் இசை நாடக தீபம்.
ஒன்றாய் கலந்திடும் மேகம்,
மொழிந்தாலோ இடிஎன்னும் கானம், கனிந்தாலோ மழையெனும் காமம்.
ஓயாது அலைகடல் அலை, உறவாடும்
கரையோடு தினம், களவாடும் காண்பவர் மனம்.
ஒளவையின் தேன்தமிழ் சொற்கள் முழங்காதோ இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள்.
ஒவ்வொரு உயிரிலும்,
ஒவ்வொரு விசையிலும்,
ஒவ்வொரு படைப்பிலும்.
காதல்
வெள்ளை காகிதத்தில்
ஒற்றை வரிக் கவிதை
காதலியின் பெயர்....
காதல் கடன்
காதல் கடனில்
வட்டியும் முதலும்
மொத்தமாய்.....!
முத்தம்......!
காதலி
தொட்டுவிட
துடிக்குதடி
தூரல்.
உன்னை
கட்டிக்கொள்ள
நினைக்குதடி
சாரல்.
படமெடுத்து
போகுதடி
மின்னல்.
உன்
கை பட்டதால்
கருப்பு
குடைக்கு
கூட
உன் மீது
காதல்......
தனிமையும் பிரிவும்
அன்பில் துளையிட்டு
ஆனந்தம் கொண்டாடும்
கருவண்டு
உணர்வுக்கு தீயிட்டு
உள்ளத்தை கல்லாக்கும்
உள்நின்று
தனிமைக் கடலில்
நினைவலைகளில்
தத்தளிக்கும் மனது
சூரியன் இல்லா
பகல் போல
நிலவு இல்லா
இரவு போல
பிரிவும் தனிமையும்
கனவு
கண்கள் உறங்கியவேளை
நினைவு பிம்பங்கள்
இறந்தகாலம் முதல்
எதிர்காலம் வரை
பயணிக்கும் நேரம்.
கண்திறந்த உலகத்தில்
கூலி நீ என்றாலும்
கண்மூடிய நேரத்தில்
கோமகனாய் நீவருவாய்
பள்ளி மாணவனாய் நீ இருந்தால்
மாநிலத்தில் முதல் மதிப்பெண்
நீ எடுக்க காண்பாய்
காதல் அரும்பு கட்டியவன்
நீ என்றால் காதலியின்
தலை சூடி மகிழ்வாய்
ஓர்நாள் உன்தாய் மடியில்
பிறக்க காண்பாய்
மறுநாள் உன்தாய் மடியில்
இறக்கவும் காண்பாய்
மரணத்தையும் ஜனனத்தையும்
காட்டும் நேரம்
சிறகுகள் இல்லா மனிதஉடல்
வானம்நோக்கி பறந்துசெல்லும்
ஏனோ கண்கள் விழித்ததினால்
கழுதையின் கானமகிப்போவதேங்கே
கனவு
அவள் ஒரு தேவதை
உன் மடியில் தலை வைத்து
உன் முகம் பார்க்கையில்
அன்பே நான் கண்டேன்
நாணமும் பரிவும் கலந்த தேவதை...
பல காதல்
பல காதல் சுமந்து
கனமாய் பூத்திருக்கிறாள் என் தேவி
முடியவில்லைதான் முன்போல்
அவளாகிய என்னின் உயிர் வழி
வீதி எங்கும் சலனமற்று வீற்றிருக்க.