இதயமும், இசையும்
உன் பார்வைகள் போட்ட துளைகளினாலே
என் இதயம் புல்லாங்குழல் ஆனதடி...
உன் மூச்சு காற்று வந்து மோதி மோதியே
முழுதும் இசையாய் போனதடி ....
மறந்து
உனக்காவே பிறந்து...
நான் வாழ்கின்றேன்
என்னை மறந்து...
கனவே விழித்தெழு
தினமும் நான்
விழித்தெழுகிறேன்,
விழித்தெழ
விழி திறந்தால் நீ
விட்டு சென்றுவிடுவாய் என்று
என் கனவு மட்டும்
விழித்தெழ மறுக்கிறது
வற்றாத கடல்
காதல்
வற்றாத
கடல் என்று
உன் கண்களை கண்டுதான்
அறிந்தேன் .........!
வசந்தம்
உடல் மட்டும் நடக்க
உயிர் வாடும் ஜடம் நான்
வார்த்தைகள் தொலைந்த
மௌனத்தின் நிழல் நான்
என் வாழ்வில் வசந்தம் நீ
கொண்டு வந்தாய் நான்
இன்பத்தில் திழைக்க
நீ வைத்துசென்றாய்...........
ரோஜா
இதழ்கள்
இருந்தும்
மௌனம்
பேசும்
ரோஜா.........
தி.மு...! தி.பி....!
தி.மு...!(திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் )
*மேலிருந்து கிழே படியுங்கள்*
அவன் :ஆமாம், இதற்க்காகத்தானே இதனை நாளாக காத்திருந்தேன்...
அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா...!
அவன் :இல்லை,இல்லை நான் கனவிலும்
அதை நினைத்ததில்லை...
அவள் : நீ என்னை விரும்புகிறாயா...!
அவன் : ஆமாம், இன்றும் என்றென்றும்..
அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா..!
அவன் : அதை விட நான் இறப்பதே மேல்..
அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா...!
அவன் : கண்டிப்பாக,அது தானே எனக்கு மிகப்பெரிய சந்தோஷ தருணம்..
அவள் : என்னை திட்டுவாயா..!
அவன் : ஒரு போதும் இல்லை ,அப்படி செய்வேன் என்று நினைத்தாயா...
அவள் :நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து
வருவாயா....!
தி.பி....!(திருமணத்திற்கு பின் )
*கிழிருந்து மேலே படியுங்கள்*
என் காதலை..!
அவள் சொல்லாமலே
சென்று விட்டாள்...!
என்னை கொல்லாமலே
கொன்று விட்டாள்...!
என் காதலை..!
முத்தம்
குழந்தையாக இருந்தபோது
சில பெண்களிடம்
வாங்கிய கடன்
இன்று
திருப்பிக்கொடுத்தால்
அடிக்க வருகிறார்கள்!
முத்தம்
அன்று
பள்ளி வகுப்பறையில்
எழுதிய
அவளின் பெயர்
இன்று
வெள்ளையடித்து
புதுப்பிக்கப்பட்டது
என் நினைவுகளால் !
இறந் திரு
என்
கவி
நண்பனே
இருந்தும்
இறந்தவனாய்
இராதே (எழுதாதே)
இறந்தும்
இருக்கிறவனாய்
இரு (எழுது)
எம் பாரதி போல்............
IVR voice
செல் போன் சிணுங்கியது !.
ஆம் அவள்தான்!.
எப்போதும் அவளே பேசுகிறாள்!.
என் கல்விக்கு பதில் இல்லை !
இன்றும் வணக்கம் சொன்னால்!.
என் காதலி தினம் தினம் என்னிடம் பேசாமல் தூங்க மாட்டாள்.
நீ கவிதை
எதுகை மோனையாய்
வருவது மட்டும்
கவிதை அல்ல
நீ
என் எதிரே
வருவதும்
கவிதை தான் !
கடிக்கவிதை
உன்
விரல் பட்ட
செல்போன் பொத்தானும்
நீ அத்தான் என்று
அழைக்க ஆசைபடுதடி பெண்ணே!
உன் மடியில்
மலை
உச்சிள்
கூடஓர்
ஆண்டுகாலம்
வாழ்கிறேன்
அதற்குமுன்னால்
உன் மடியில்
ஓர் நிமிடம்
இடம் கொடு........!
மரணம்
சாதி மொழி மதம்
கடந்த உயிர்களின்
சங்கமம் மரணம்
பணம் பொருள் செல்வம்
நுழையாத உலகம்தேடிய
பயணத்தின் நுழைவாயில்
வலி வேதனை நினைவு
மறந்த உன்னத நிலை
மரணத்தின் அரவணைப்பில்
அன்பின் எல்லையை தாண்டிய
உடல் தேவையினை கலைந்த
உயிர்களின் நிலை
நிலமகளின் வயிற்ருக்குள்
கருவறை குழந்தைகளாய்
இன்னொரு ஜனனத்தை தேடி...
மாண்புமிகு மனிதன்
உருவமில்லாமல் உறங்கியது
கல்லுக்குள் தெய்வம்,
உளி கொண்டு உறக்கம்
கலைத்து, விழி கொண்டு
வீரம் புகட்டி, பெயர்கொண்டு
பெருமை தந்து, நிலையென்று
நிறுத்திவைத்தான்,
காவல்தெய்வமாய்.
சிந்திக்கமாடீரோ
தினந்தோறும்
வீட்டின் முற்றத்தில்
கா கா என்று இரைந்து
காகம் அழைத்து அன்னமிடும்
உள்ளங்கள் ஏனோ அழைப்பதில்லை
வீதிகளில் படுத்திருக்கும் விரதங்களை.
அவள் கண் விதுப்பழித்தல்
பட்டாம் பூச்சியின் இமை,
அவள் இமைத்தால்
அதில் உதிர்ந்தது என் மனசு
கூறிய வாளின் முனை அழுத்தம்
ஒரு பார்வை
உச்சி வெயிலில் உதிர்ந்திடும் பணி
மழையாய் ஒரு பார்வை
உள்ளக்குளிருக்குள்ளே கோடை
வெப்பமாய் ஒரு பார்வை
முகம் மூடிய உறைக்குள் கயிற்றின்
இறுக்கம் ஒரு பார்வை
அடிக்கின்ற காற்றில் வெடித்து விழும்
பஞ்சு போல ஒரு பார்வை
தூண்டில் முள்ளில் அகப்பட்ட மீன்
துள்ளலாய் ஒரு பார்வை
உதிர்ந்து விழும் பூ, நிலத்தின்
காயமாய் ஒரு பார்வை
முழு நிலவின் ஒளிவெள்ளமாய்
ஒரு பார்வை
உடைபட்ட கரையில் உருண்டோடும்
வெள்ளமாய் ஒரு பார்வை
பார்த்துக்கொடிருக்கின்றால்
வேதனை!
குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை
குழந்தை பிறக்காத தம்பதியின் வாழ்க்கை
வாழ்க்கை துணையில்லாத விதவை
விதவை செல்லமுடியாத திருமணம்
திருமணம் முடியாத கன்னிப்பெண்
கன்னிப்பெண் தொலைத்துவிட்ட கற்ப்பு
கற்ப்பு பற்றி கவலைப்படாத விபச்சாரி
விபச்சாரியின் வயிற்றில் பிறந்த குழந்தை