நட்பு நூலகம் - கவிதைக் காதல் - கண்ணடித்தல்

நட்பு நூலகம்

நட்பு எனும் நூலகத்தில்
நான் கண்டெடுத்த நூல்கள் பல
பல சிறுகதையாய் முடிந்துவிட
நீ மட்டும் முடிவில்லா
தொடர்கதையாய்

கவிதைக் காதல்

கவிதையே…
உன் மேல் உள்ள காதலால்
நான் காதலிக்கின்றேன் – பெண்களை
அப்போதுதான் கவிதை வரும் என்பதற்காக!

கண்ணடித்தல்

அழகான பெண்ணைப் பார்த்ததும் – என் கண்
என்னையறியாமல் தவிக்கின்றதே.

காதல் சந்திப்பு

பிரியமானவளே .,
தினம் தினம் சிந்திக்கிறேன் ,
உன்னை சந்திபதற்காக மட்டும்.

கண் பேசும் கவிதை

மற்றவர்கள் மயங்கினார்கள்
மயக்கும் என் கவிதைக்கு.
மயங்கியே தான் போனேனடி
மங்கை உன் கண்ணுக்கு.

காதல்

தொட முடியாதது …
தொட்டால் விட முடியாதது.

நட்பு

புரியாத நட்புக்கு அருகில் இருந்தும் "பயனில்லை",
புரிந்து கொண்ட நட்புக்கு பிரிவு ஒன்றும் "தூரமில்லை".

உன் பெயர் வந்தது!

என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!

பேனா ரப்பர்

நான் புதுப் பேனா வாங்கி
எழுதி பார்த்தல்
வந்தது
அவள் பெயரையும் என் பெயரையும்

அவள் புதுப் ரப்பர் வாங்கி
அதை அழித்து பார்த்தாள்

எழுதுகோல்

நான் எழுதிய
கவிதைகள் எல்லாம் – உனக்காகத்தானே
நான் எழுதி முடித்ததும் – என்னை
ஏன் தூக்கி எறிந்துவிட்டாய்?

நட்பு

நட்பு என்பது நடிப்பு அல்ல
நம் நாடி
துடிப்பு

கண்ணீர்

உன் கண்களில் உண்டான காதலுக்கு என்னால்
மட்டும் விலை கூற முடியுமா என்ன...

- கண்ணீர்

உன் அழகு

கண்ணாடி முன் நின்று உன்னை நீ அழகு படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய் ,
ஆனால் அந்த கண்ணாடியோ ,
உன்னை பார்த்து தன்னை அழகு படுத்தி கொள்கிறது .

பிரியம்

புரியாத பிரியம்
பிரியும் போது புரியும்

காதல் பறவைகள்

பறப்பதற்கு சிறகு தேவையில்லை
நீயும்
காதலும் போதும்

நண்பர்கள்

இதயத்தில்
இடம்
கொடுப்பவர்கள்
காதலர்கள்…

இதயத்தையே
இடமாக
கொடுப்பவர்கள்
நண்பர்கள்...

மனதில்

பௌர்ணமி அன்று
அம்மாவாசை
மனதில்

பூ வாசம்

ஆடையில் இருக்கும்
பூக்களுக்கும்

பூவாசம்
வந்து விடுகிறது ...!

நீ
உடுத்தும் போது மட்டும் ..!

உன் நிழல்..

என் இனிய உயிரே
உனைப்
பிரிந்த பொழுதுகளை
மீட்கமுடியாது
தவிக்கிறேன்
ஓராண்டானபின்னும்
முடியவில்லை அம்மா
நான்
உன்னருகில் வரும்போது
நாம் இழந்த பொழுதுகளை
மீட்பதற்கும்
உனக்கு
செய்ய தவறியவைகளை
செய்வதற்கும் அனுமதிதா
காத்திருக்கிறேன்

(ம)ரண தருணம்

தாயின் சாவுக்காக
ஊர் விரைகிறான் மகன்
பேருந்தில் முழுநீள
நகைச்சுவைப் படம்

Post a Comment (0)
Previous Post Next Post