ஏக்கம்! - உழைப்பின் உயர்வு! - மீன்கள்

ஏக்கம்!

கழனிகளில்
மாடி வீடுகள்...
ஏக்கத்துடன் பறவைகள்...
எப்படி இனி
உணவு கிடைக்கும்
இந்த மனிதர்களுக்கு?

உழைப்பின் உயர்வு!

தாஜ்மஹாலைக் காணுகையில்
சிந்தையில் உதிப்பது ஷாஜஹானல்ல!
உழைப்பாளியே உனது
உன்னதமான உழைப்புத்தான்!
கோவில்களைக் காணுகையில்
கடவுளர் தெரிவதில்லை.......
சிற்பிகளின் உழைப்புத்தான்
சிந்தையில் உதிக்கிறது!
சோறு நான் உண்கையிலே
சம்சாரத்தை நினைப்பதில்லை....
விவசாயியே உந்தன்
வியர்வைதான் நினைவுக்கு வருகிறது!
ஆடை அணிந்திருக்கும்
ஆள் எனக்குத் தெரிவதில்லை....
நெசவாளியே நீதான்
தெரிகிறாய் என் சிந்தைக்கு!
ஒவ்வொன்றிலும் தெரிவது
உழைப்பின் உயர்வே!

மீன்கள்

பிறருக்கு
உணவாகப் போவதை
நினைத்து,
எத்தனை மீன்கள்
அழுதனவோ?
கடல்நீரில் உப்பு!

மரணப்பார்வை..!

ஏய் மரணமே!
நீ என்னை
தீண்டும் முன்
தாண்டிவிடுவேன் என்
வாழ்க்கைக்கான
வெற்றியின் தூரத்தை!
இருப்பினும்
உன்னை நான்
அதிகமாய் நேசிக்கிறேன்,
இப்பூமியின் மாந்தர்கள்
அனைவரையும் நீ
ஒன்றாய் கருதுவதால்...

கனவு

கனவே கலையாதே...
கடைசி சந்திப்பு நிகழட்டும்
விடிந்தால் காதலிக்கு திருமணம்!

அவள் இல்லாமல்

போன வழியும் தெரியல
வந்த வழியும் புரியல;

கண் மூடி திறக்கும் முன்
எல்லாமே நடந்துருச்சு;

அவ கிட்ட கூட சொல்லல,

கை பிடிச்ச நாளாய்
என் நிழலாய், என் தோழியாய், என் உயிராய்
என் கூடவே தான் அவ இருப்பா;

பாவி அவ தனியா என்னத்த செய்வாளோ
புரியலையே!

நான் சிரிச்சா அவ சிரிப்பா,
நான் அழுதா அவ தொடப்பா,
இன்பமோ துன்பமோ ஒன்னாதான் இருந்துருகோம்

சோறு தண்ணி கூட இறங்காது அவளுக்கு
நான் சாப்புடாம;

வெளிய நான் போனாலும் மனசெல்லாம்
வழியில வெச்சு காத்து கெடப்பா;

நித்தம் ஒரு சண்டையின்னு போட்டு கிட்டா கூட
ஒருத்தருகொருத்தர் பேசாம இருந்தது இல்ல;

பிள்ளைங்க ரெண்டு பொறந்தும் கூட
எங்க காதல் கொறையவே இல்ல;

மருமகளுங்க வந்தும் கூட
அவ கையாள சாப்டா தான் வயிறு நிறையும்

கெழவி ஆகியும் கூட அவ இன்னும்
எத்தனை அழகாதான் இருக்குறா;

என்ன உசுரா நேசிச்ச அந்த சிருக்கிய
விட்டுட்டு வந்துட்டேனே;

அவ இல்லாம இந்த சொர்க்கமும்
எனக்கு நரகம் தான்!

முதிர்கன்னி

சாமிக்கும் சாமிக்கும்
திருக்கல்யாணம்
ஒரு கல்யாணமும்
நடக்காத முதிர்கன்னி
விரதமிருந்தால்!

கடன்





நீச்சல் தெரிந்தும்
மூழ்க வைக்கிறது,
கடன்!

நாக்கு





தீக்குச்சி இல்லாமலே
பற்ற வைத்தது,
நாக்கு!

காலணி




வெள்ளைச் சட்டையில்
"இங்க்" அடிக்கிறதே,
"சேற்றை வாரிய செருப்பு"!

கண்கள்



சந்தோசமாய்....
சிறைப்பட்டன வண்டுகள்....!
அவள் கருவிழி!

குடை



வேர்கள்
விடாத மரம்
நிழல்
கொடுக்கிறது
குடை!

தேடல்!

தெரிந்தே தொலைத்தேன், தேடல் சுகம் என்பதால்!

இதயத்துடிப்பு

இனிமையான இரவு நேர இன்னிசை
தனக்கு மட்டும் கேட்கும் மெல்லிசை
இதயத்துடிப்பு...!

கவிதை

உணர்ச்சிகளின் எழுத்து வடிவம் கவிதை!

இதயம்

பிரிந்து இருந்தால் துக்கத்தில் துடிக்கிறது
சேர்ந்து இருந்தால் சந்தோஷத்தில் துடிக்கிறது
துடிக்க மட்டுமே தெரிந்த இதயம்.

KATHALI MARAIVATHILLAI..!

ஆயிரம் கைகள்
மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை...!
கோடி பெண்கள் கூடி
நின்றாலும்
காதலி மறைவதில்லை ...!

ஒன்று தானே!!!

சொல்ல முடியாத
துன்பங்களை....நினைக்கும்பொழுதில்
அது !!
வலிகளாக மாறி
தொண்டைக்குழியை குத்தும்
அப்பொழுதில்,
எல்லாம் நினைத்து கொள்கிறேன்
என்னால துன்பம்
அடைந்தவர்களுக்ம் இப்படிதான்
வலித்திர்க்கும் என்று
வலி அனைவருக்கும் ஒன்று தானே!!!!!!!!!!!!!

நீ இருக்கிறாய்.....!

இறக்கத்தான்
துடிக்கிறேன்
இதயம்
தடுக்கிறது
நீ
இருக்கிறாய் என்று.....!


புதியவன்.மு

ஆறடி....!

ஆறடி
என்றிருந்தேன்
மூன்றே அடியில்
அடக்கிவிட்டாய்
உந்தன்
நிழலில்...



புதியவன்.மு

Post a Comment (0)
Previous Post Next Post