karuvarai - kavithai - puyal......

karuvarai

கருவறையில் இருந்த
உன்னை
அப்படியே கல்லறையில்
புதைத்து வைத்தால்
எப்படி இருக்கும்.....

அப்படிதான் எனக்கும் இருந்தது
நீ
என்னை
வேண்டாம் என்ற போது.....

kavithai

சிந்தைக்கு
எட்டாத
ஒன்றை
சிந்தித்து
எழுதுவதுதான் "கவிதை...."

உலகை
அறியாமல்
உனக்காக
உனக்குள்
வருவதுதான் "காதல்....."

puyal......

மழை
வருமென்று
தெரிந்திருந்தால்
குடை கொண்டுவந்திருப்பேன்.....

வந்தது
மழை
அல்ல
என்னை தாக்கிய
புயல்..........

kathali

ஆண்டவன்
படைத்தது எனக்கான
காதலியை அல்ல...
கல்லறையை...
புதியவன்.மு

enakkana malar

மலர் ஒன்றை
காதலிடம்
சூட கொடுத்தேன்..
காதலி சொன்னால்
இந்த மலர்கள்
எனக்காக
படைக்கப்பட்டவை அல்ல....
உனக்காக....
புதியவன்.மு

kathaliya.....?

தூக்கத்தை
கெடுப்பவள்
காதலி
என்றால்....!

உயிரை
எடுப்பவள்
யார்....?

புதியவன்.மு

theriyavillai..........

மருத்துவம் தெரிந்த எனக்கு
மருந்து தெரியவில்லை....

சட்டம் தெரிந்த எனக்கு
சரித்திரம் தெரியவில்லை....

போதிக்க தெரிந்த எனக்கு
பாதை தெரியவில்லை....

பொறியல் தெரிந்த எனக்கு
கணங்கள் தெரியவில்லை....

வரைய தெரிந்த எனக்கு
வாழ தெரியவில்லை....

செதுக்க தெரிந்த எனக்கு
செந்தமிழ் தெரியவில்லை....

சிரிக்க தெரிந்த எனக்கு
சிந்திக்க தெரியவில்லை....

கண்கள் தெரிந்த எனக்கு
உலகம் தெரியவில்லை....

நாசி இருந்த எனக்கு
சுவாசிக்க தெரியவில்லை....

பொய்கள் தெரிந்த எனக்கு
உண்மைகள் தெரியவில்லை....

ஓட தெரிந்த எனக்கு
விழ தெரியவில்லை....

நீ இறந்த பின்பும் எனக்கு
காதலை விட தெரியவில்லை....

புதியவன்,மு

.

NEE IRUNTHAL...!

இமய மலையின் உச்சிக்கே
இரண்டு நொடிகளில் சென்று விடுகிறேன் !
நடுகடலின் அழத்திற்கு
அரை நொடிகளில் சென்று விடுகிறேன் !
கண் காணாத கண்டத்திற்கு
கண்ணிமைக்கும் நொடிகளில்
சென்று விடுகிறேன்
அன்பே...!
நீ இருந்தால்.....!
என்னுடன் ..!

அப்பா

நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
ஆம்
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை

பின் நடை பழகிய பின்னும்
நான் உங்கள் கை பிடித்து
நடந்து இல்லை
என் இந்த இடைவெளி?

உங்கள் சந்தோஷங்களை மறைத்துகொண்டு
எங்கள் சந்தோஷங்கள்
உங்கள் சந்தோஷமாக மாற்றிகொண்டிர்கள்
எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன
உங்களுக்கும் ,எனக்கும்
உள்ள இடைவெளியின் இருந்த
அர்த்தம் இப்பொழுதில்
புரிந்துகொண்டேன் .......
அந்த இடைவெளி தான் எனது
முன்னேற்றம் என்றும் ...

உங்கள் கை பிடித்து நடக்க
ஆசைப்பட்ட ,நான்
உங்கள் கை பிடிக்க ஓடிவந்தது தான்
என் வாழக்கை என்றும் !

இவ்வளவும் செய்த அந்த கடவுள்
என்னை பெண்ணாக பிறக்க செய்ததை
எண்ணி வருத்துகிறேன்
உங்களை விட்டு பிரிய வேண்டுமே என்று
அடுத்த பிறவிளவது
என்னை ஆணாக பிறக்க செய்து
உங்கள் இடைவெளியில் முன்னேற்றம்
அடைந்த என் வாழக்கையில்
நீங்கள் உங்கள் முதுமையில்
வாழந்திட இறைவனை
வேண்டுகிறேன்


இந்த கவிதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்

ஓவியம்

வெறுமையாய் வெள்ளை காகிதம்,,,!!!
பேனா மை தெளித்தவுடன் ..
என்னவளின் முகம் !!!

வெகுநாட்கள் இல்லை!

எழுதுகிறேன் என் எதிர்காலத்தை...
எழுத்தால் அல்ல! எண்ணங்களால்!
எண்ணங்கள் நிறைவேறும்போதுதான்...
என் வாழ்விற்கு ஒரு அற்தம் கிடைக்கும்!
அதற்கு இன்னும் வெகு நாட்கள் இல்லை...rvm!

உறங்க மறுக்கின்றது!

உறங்க மறுக்கின்றது என் கண்கள்...
ஒரு வேலை...
உறக்க்த்தில் உனை மறுத்துவிடுவேனோ என்று...rvm!

அனையா விளக்கு!

நான் கோவிலுக்கு சென்றேன்...!
அங்கு சொன்னார்கள்...
மனதிற்கு பிடித்தவர்களை நினைதுக்கொண்டு விளக்கேற்றினால்...
நினைதது நிறைவேறுமென்று!
நானும் உனை நினைத்துக்கொண்டேன்...
ஆனால் விளக்கேற்றவில்லை...!
ஏனென்றால்
நீ என் மனதில் என்றும்...
அனையா விளக்காக இருக்க வேண்டும்!
அங்கு ஏற்றப்படும் விளக்கு அனைந்துவிடும் அல்லவா! அதனால்தன்...rvm!

இரண்டு ரூபா கவிதை

தள்ளி விட்டுப்போன
நாட்களில் விதைகொண்ட
கிழட்டு மரம் கிளை
யறுந்து நிர்மூலமாகி
ரத்தம் சுண்டி
சுவாசம் காய்ந்து
நரம்புகள் உடைந்து
பிணைப்புகள் வெந்து
சுடுகாட்டுக்குழியில்
கட்டை சாம்பலாகி
சித்திரச்சுவடாய் சுவரில்
கண்ணாடிக்கூண்டாய்
மூன்றாம் நாள்
காரியத்துக்கு அஸ்தி
கரைக்கப்பட்டு காத்திருக்க

முதல் நாளிலேயே
தலைவாழை விரித்து
தன் மனையாளை
பணயம் நீட்டி
பாகப்பிரிவிணைக்கு
அடிக்கல் நாட்டி
வியர்க்கவிறுவிறுக்க
படையலிட்டு சொத்துக்கு
வேண்டிக்கொள்கிற
மாப்பிள்ளையே!

வாருங்கள் டீ சாப்பிடலாம்
ரெண்டு ரூபாதான்
நானும் பிச்சைதான்

ஒரு பிறவி இன்பம்!

உன்னிடமிருந்து பிரிக்குமென்று தெரிந்திருந்தால்...
விடியலே வேண்டாமென்றிருப்பேன்!
பரவாயில்லை...
உன்னுடன் வாழ்ந்தது கனவாக இருந்தாலும்!எனது ஒரு பிறவியை வாழ்ந்த ஒரு இன்பம்...
என் மனதுக்குல் நிலைதுவிட்டது...rvm!

அழுகின்ற உரிமை!

அழுகின்ற உரிமையை...
என் இதயதிற்கு மட்டுமே கொடுத்திருகிறேன்
என் கண்களுக்கு கொடுக்கவில்லை!
அதனால்தான்!
நான் அழுவதை...
என் இதயத்தை நேசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்...ர்வம்!

பிரிவு!

மேகமே...
ஏன் அழுகின்றாய்?
பிரிவை தாங்கிக்கொண்டு நானே அழவில்லை!
அழுதது போதும்...
போ! போயி...! அவளுக்கு ஆறுதல் சொல்லு...
பிரிவென்பது உடலுக்கு மட்டும்தான் என்று...rvm!

மருத்துவமனை

வரிசையாய் நிற்கும்
நோயாளிகளின் வலி கூட்டும்
நிர்வாகம்

தெய்வம் வந்து தாங்கிடாத
பொழுதுகளில் -
மனிதனை உயிர்ப்பிக்கும் விஞ்ஞான வளாகம்!

பணம் போட்டு
நலம் காக்கும்
பொதுசேவை வியாபாரம்

பணம் தாண்டியும்
மனிதம் சுரப்பிக்கும் கடவுள்கள்
மருத்துவர்களாக மாறிய இடம்!

உயிரோடு
விளையாடி -
தொழில் கற்கும் ஏகாந்தம்

உயிர் கொடுத்தும்
உயிர் காக்கும் -
மதம் தாண்டிய மருத்துவாலயம்!

ஏழைகளின் உயிர் வருத்தியும்
உயிர் காத்தும் வளரும் -
செங்கல், மண் கட்டிடம்

எத்தனையோ பணக்கார மருத்துவர்கள்
இரவு பகலை தொலைத்து -
மருத்துவம் பார்க்கும் மனிதநேய மண்டபம்!

சகோதரிகளின்
கவனக் குறைவால் -
உயிர் தின்னும் பொழுதுபோக்கிடம்

மருத்துவரில்லாத அவசரத்தில்
உயிர் காத்த - செவிலித் தாய்களின்
அன்பு பூக்கும் தளம்!

இவை எல்லாம் கடந்து -
எத்தனையோ அலறல்களும்
கண்ணீர் கதறல்களும் -
உயிர்பிரிந்த கணப் பொழுதுகளும்
ஒரு ரசாயன மனமாய் காற்றில் கலந்து
காற்றாக மாறிய இடம்!

குழி

அவள்
என்னைப் பார்த்துச்
சிரித்தாள்
கன்னத்தில் குழி
விழுந்தது
நான் அவளைப் பார்த்துச்
சிரித்தேன்
வாழ்க்கையே
குழியில் விழுந்தது.

தொலைபேசி

நிறைய இதயங்கள்
இங்கு தான் உறைகின்றன்
உலகின் தூரங்களை ஒரு
சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது
தொலைபேசி!

காதல் பேசியும்
அரசியல் தகவலறிவித்தும்
குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின்
ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது
தொலைபேசி!

கால வேகத்திற்கு
கையில் அடங்கி போய்
உலக விஸ்த்தாரிப்பை
ஒரு சொடுக்கலில் அறிவித்த்
மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும்
அலைபேசியென அர்த்தம் கொண்டுவிட்டதில் -
தொலைபேசிக்கே பெருமை!

Post a Comment (0)
Previous Post Next Post