காமத்தின் பிடியிலிருக்கும் அவைகளுக்கு...

பத்து மாதம் ...
பக்குவமாய் சுமந்து...
பனிக்குடம் உடைத்து...
உன்னை பெற்றடுக்க...
ஆசை இல்லை...
கண்ணே! மணியே! முத்தேயென வர்ணித்திட... வார்த்தை தேவையில்லை... 
என் மார்பில்  நீ காலுந்தி! 
என் கன்னத்தில்!
 உன் இதழ்...
பதியும் இன்பம்... தேவையில்லை! 
 நீ கொஞ்சி குழறி பேசிடும்... மழலைச் சொல் கேட்க... ஆசையில்லை! 
நீ...
பெண்ணென்பதால்...
காமத்தின் பிடியிலிருக்கும் ...
அவைகளுக்கு ...
குழந்தை!
குமரி!
கிழவி! அல்ல! 
நீ !
பெண்.....
Post a Comment (0)
Previous Post Next Post