நீதானே! நீதானே!


இவ்வுலகம் புதி(தாய்) மாறுதடி!!
பூவெல்லாம் புதுமணம் வீசுதடி!!
எனை ஈன்ற தாயின்!!
"பிறந்தநாளையென்னி"

அவள் உயிர் தந்து! 
கருவில் இடம் தந்தவள்!!
தன்னுயிரை!
எனக்களித்து! 
என்னுயிரை !
தன்னுயிரென! 
காத்தவள்!

கருவறையின் கதகதப்பை! 
கையணைப்பில் தந்தவள்!!
கடைக்குட்டி பெண்ணென! 
பேரன்போடு பேணியவள்!!

என் தவறையெல்லாம் 
மன்னித்து ...
எனக்காக வாதடுபவள்...

பசிக்கிறதம்மா யென்றால்...
பம்பரமாய் சுழன்று...
தன் நிலை மறந்தவள்!!
சில்லரையாய்!  
சிலநேரம்! 
இரைந்தாலும்! 
என் சிறு கண்ணீரில்! 
கடல் நீராய்!  
கரைந்தவள்!!

என் கண்ணீர்! 
கன்னம் கடப்பதற்க்குள்...
அள்ளியணைத்து!  முத்தமிட்டவள்!!

நான் படும் இன்னல்களுக்கு 
நீ வேண்டாத 
தெய்வம் !
இல்லை...
நான் வேண்டும் 
தெய்வம்!
நீதானே!
அம்மா...
 


Post a Comment (0)
Previous Post Next Post